க்ளோஸ்டர் எஸ்யூவியின் எக்ஸாஸ்ட் அமைப்பை மாற்றியுள்ள எம்ஜி... பெங்களூருவில் சோதனை ஓட்டம்...

எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் நான்காவது தயாரிப்பை க்ளோஸ்டர் என்ற பெயரில் இந்திய சந்தைக்கு கொண்டுவர அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. ஆனால் மற்ற மூன்று எம்ஜி மாடல்களுடன் ஒப்பிடுகையில் க்ளோஸ்டர் சற்று அதிகமான எக்ஸ்ஷோரூம் விலையினை பெறும் என கூறப்படுகிறது.

க்ளோஸ்டர் எஸ்யூவியின் எக்ஸாஸ்ட் அமைப்பை மாற்றியுள்ள எம்ஜி... பெங்களூருவில் சோதனை ஓட்டம்...

டெல்லியில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த எம்ஜி மாடல் வரும் பண்டிக்கை காலத்தில் அறிமுகமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

க்ளோஸ்டர் எஸ்யூவியின் எக்ஸாஸ்ட் அமைப்பை மாற்றியுள்ள எம்ஜி... பெங்களூருவில் சோதனை ஓட்டம்...

இதற்கிடையில் இந்திய சாலையில் தொடர் சோதனை ஓட்டங்களில் க்ளோஸ்டர் மாடல் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் ஒருமுறை மறைப்பு எதுவுமின்றி சோதனையின் இந்த கார் அடையாளம் காணப்பட்டுள்ளது.

க்ளோஸ்டர் எஸ்யூவியின் எக்ஸாஸ்ட் அமைப்பை மாற்றியுள்ள எம்ஜி... பெங்களூருவில் சோதனை ஓட்டம்...

இதுகுறித்து ரஷ்லேன் மற்றும் கார்அண்ட்பைக் செய்தி தளங்கள் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களின் மூலம் சில தகவல்களை அறிய முடிகிறது. அதாவது ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரில் இரட்டை எக்ஸாஸ்ட் அமைப்பை பார்க்க முடிந்திருந்தது. ஆனால் இந்த சோதனை காரில் குவாட் எக்ஸாஸ்ட் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.

க்ளோஸ்டர் எஸ்யூவியின் எக்ஸாஸ்ட் அமைப்பை மாற்றியுள்ள எம்ஜி... பெங்களூருவில் சோதனை ஓட்டம்...

இதுதவிர்த்து மற்றப்படி இந்த சோதனை கார், ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த க்ளோஸ்டர் மாடலை தான் ஒத்து காணப்படுகிறது. முன்புறத்தில் இந்த எஸ்யூவி கார் எம்ஜி முத்திரையுடன் பெரிய எண்கோண-வடிவில் க்ரோம் க்ரில்-ஐ கொண்டுள்ளது.

க்ளோஸ்டர் எஸ்யூவியின் எக்ஸாஸ்ட் அமைப்பை மாற்றியுள்ள எம்ஜி... பெங்களூருவில் சோதனை ஓட்டம்...

இதனுடன் இரட்டை-பேட் ஹெட்லேம்ப்கள், சுற்றிலும் க்ரோம் ட்ரிம்-ஆல் சூழப்பட்ட பம்பரில் ஃபாக் விளக்குகள், க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட கம்பீரமான விண்டோ லைன், முன்புற ஸ்கஃப் ப்ளேட்கள், பக்கவாட்டு படிக்கட்டு மற்றும் பெரிய 6-ஸ்போக் அலாய் சக்கரம் உள்ளிட்டவையும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.

க்ளோஸ்டர் எஸ்யூவியின் எக்ஸாஸ்ட் அமைப்பை மாற்றியுள்ள எம்ஜி... பெங்களூருவில் சோதனை ஓட்டம்...

சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள மேக்ஸஸ் டி90 எஸ்யூவி மாடலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள எம்ஜி க்ளோஸ்டரின் நீளம் 5,005மிமீ, அகலம் 1,932மிமீ மற்றும் உயரம் 1,875மிமீ ஆகும். காரின் உட்புறத்தில் ப்ரீமியம் தோற்றத்திற்காக லெதர் உள்ளமைவு வழங்கப்பட்டிருக்கலாம்.

க்ளோஸ்டர் எஸ்யூவியின் எக்ஸாஸ்ட் அமைப்பை மாற்றியுள்ள எம்ஜி... பெங்களூருவில் சோதனை ஓட்டம்...

ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 12.3 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை இதன் கேபினில் எதிர்பார்க்கலாம். ப்ராண்டின் லேட்டஸ்ட் ‘ஐஸ்மார்ட்' இணைப்பு தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படுகின்ற இந்த சிஸ்டம் ஏஐ உதவியை மேம்படுத்துவதுடன் குரல் கட்டுப்பாடுகளை அதிகரிக்கும்.

க்ளோஸ்டர் எஸ்யூவியின் எக்ஸாஸ்ட் அமைப்பை மாற்றியுள்ள எம்ஜி... பெங்களூருவில் சோதனை ஓட்டம்...

உட்புறத்தில் மற்ற முக்கிய அம்சங்களாக 3-நிலை ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பனோராமிக் சன்ரூஃப், கீலெஸ் எண்ட்ரீ, காற்றோட்டமான இருக்கை அமைப்பு, வயர்லெஸ் போன் சார்ஜிங், அதிக எண்ணிக்கைகளில் காற்றுப்பைகள், ப்ளைண்ட்-ஸ்பாட் மானிடரிங் உடன் 360-கோண கேமிரா, க்ரூஸ் கண்ட்ரோல், மலைத்தொடர்களில் ஏறுவதற்கான உதவி, மலைத்தொடர்களில் கண்ட்ரோல், ஏபிஎஸ், இபிடி, லேன் மாற்று அசிஸ்ட் உள்பட பல வசதிகள் வழங்கப்படவுள்ளன.

க்ளோஸ்டர் எஸ்யூவியின் எக்ஸாஸ்ட் அமைப்பை மாற்றியுள்ள எம்ஜி... பெங்களூருவில் சோதனை ஓட்டம்...

இயக்கத்திற்கு ஒரே ஒரு 2.0 லிட்டர் இரட்டை-டர்போ டீசல் என்ஜினை க்ளோஸ்டர் மாடலில் எம்ஜி நிறுவனம் பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அதிகப்பட்சமாக 220 பிஎச்பி மற்றும் 480 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்ளோஸ்டர் எஸ்யூவியின் எக்ஸாஸ்ட் அமைப்பை மாற்றியுள்ள எம்ஜி... பெங்களூருவில் சோதனை ஓட்டம்...

இருப்பினும் ஆட்டோமேட்டிக் தேர்வில் இந்த கார் அறிமுகத்திற்கு சில மாதங்கள் கழித்தே கிடைக்கும். இதன் விலை சற்று ப்ரீமியம் தரத்தில் நிர்ணயிக்கபடவுள்ளதாக முன்பே கூறியிருந்தோம். விற்பனையில் இந்த காருக்கு போட்டியினை அளிக்க ஃபோர்டு எண்டேவியர், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஸ்கோடா கோடியாக் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் இ4 உள்ளிட்டவை உள்ளன.

Most Read Articles
English summary
MG Gloster spied with new circular twin-exhaust setup in Bangalore
Story first published: Friday, August 7, 2020, 13:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X