எம்ஜி க்ளோஸ்ட்டர் பேஸ் வேரியண்ட்டிலேயே போதும் போதும் எனும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள்!

பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் வேரியண்ட்டுகள் விபரம் அண்மையில் வெளியானது. இந்த வேரியண்ட்டுகளில் என்னென்ன வசதிகள் கொடுக்கப்படுகின்றன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி க்ளோஸ்ட்டர் பேஸ் வேரியண்ட்டிலேயே போதும் போதும் எனும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள்!

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சாவி என நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

எம்ஜி க்ளோஸ்ட்டர் பேஸ் வேரியண்ட்டிலேயே போதும் போதும் எனும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள்!

இந்த காரில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்படுகின்றன. அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட்டுகள், 19 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் வைப்பர், 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை வழங்கப்படுகின்றன.

எம்ஜி க்ளோஸ்ட்டர் பேஸ் வேரியண்ட்டிலேயே போதும் போதும் எனும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள்!

க்ளோஸ்ட்டர் சூப்பர்

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் விலை குறைவான சூப்பர் வேரியண்ட்டில் 7 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அ:ிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ரியர் வியூ கேமரா, ஓட்டுனர் அயர்ந்து போவதை கண்டறிந்து எச்சரிக்கும் தொழில்நுட்பம், ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, மேனுவல் ஏசி சிஸ்டம் ஆகியவை உள்ளன. 7 சீட்டர் இருக்கை அமைப்புடைய மாடலில் கிடைக்கும்.

எம்ஜி க்ளோஸ்ட்டர் பேஸ் வேரியண்ட்டிலேயே போதும் போதும் எனும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள்!

க்ளோஸ்ட்டர் ஸ்மார்ட்

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக கார்னரிங் லைட்டுகள், 8 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் திரை, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, சன்ரூஃப், பேடில் ஷிஃப்ட், ஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில் கேட்டை திறக்கும் வசதி, 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஐ-ஸ்மார்ட் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன.

எம்ஜி க்ளோஸ்ட்டர் பேஸ் வேரியண்ட்டிலேயே போதும் போதும் எனும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள்!

க்ளோஸ்ட்டர் ஷார்ப்

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக எலெக்ட்ரானிக் ரியர் டிஃபரன்ஷியல், ஷிஃப்ட் ஆன் ஃப்ளை வசதியுடன் 4 வீல் டிரைவ் சிஸ்டம், 7 விதமான டிரைவிங் மோடுகள், பிளைன்ட் ஸ்பாட் அசிஸ்ட் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா, 64 வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், ரிமோட் சாவி மற்றும் ஐ-ஸ்மார்ட் செயலி ஆகியவை வழங்கப்படுகிறது. வென்டிலேட்டட் இருக்கைகள், மெமரி வசதியுடன் இருக்கை நிலையை மாற்றும் வசதி, வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை உள்ளன.

எம்ஜி க்ளோஸ்ட்டர் பேஸ் வேரியண்ட்டிலேயே போதும் போதும் எனும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள்!

க்ளோஸ்ட்டர் சாவி

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் மிகவும் விலை உயர்ந்த வேரியண்ட்டாக விற்பனைக்கு வர இருக்கிறது சாவி வேரியண்ட். இந்த வேரியண்ட்டில் அவசர நேரத்தில் தானியங்கி முறையில் பிரேக் பிடிக்கும் வசதி, லேன் டிபார்ச்சர் வார்னிங், முன்புற மோதல் குறித்து எச்சரிக்கும் வசதி, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஹேண்ட்ஸ் ஃப்ரீ பார்க்கிங் வசதிகள் உள்ளன.

எம்ஜி க்ளோஸ்ட்டர் பேஸ் வேரியண்ட்டிலேயே போதும் போதும் எனும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள்!

எஞ்சின் விபரம்

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் 2 .0 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டு விதமான செயல்திறனை வெளிப்படுத்தும் திறனில் வழங்கப்பட உள்ளது. விலை குறைவான சூப்பர், ஸ்மார்ட் ஆகிய வேரியண்ட்டுகளில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 161 பிஎச்பி பவரையும், 375 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டம் இல்லை.

எம்ஜி க்ளோஸ்ட்டர் பேஸ் வேரியண்ட்டிலேயே போதும் போதும் எனும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள்!

ஷார்ப் மற்றும் சாவி ஆகிய வேரியண்ட்டுகளில் இடம்பெறும் அதே 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 215 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. அனைத்து வேரியண்ட்டுகளிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

Most Read Articles
English summary
MG Motor has released a variant-wise list of features of the all new Gloster SUV.
Story first published: Thursday, October 1, 2020, 10:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X