எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் மாடலும் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் மாடலும் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக வலம் வருகிறது. பிரம்மாண்டத் தோற்றம், இன்டர்நெட் வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதிக இடவசதி, சரியான விலை போன்ற இந்த காருக்கான சந்தையை எதிர்பாராத அளவு உயர்த்தி வைத்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் மாடலும் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஃபியட் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு ஏற்கனவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் மாடலும் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

எம்ஜி ஹெக்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலுக்கு ரூ.12.74 லட்சம் முதல் ரூ.17.18 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலை அறிவிக்கப்பட்டது. பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தற்போது ஹெக்டர் எஸ்யூவியின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் பிஎஸ்6 தரத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் மாடலும் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் எஞ்சின் மாடலுக்கு ரூ.13.88 லட்சம் முதல் ரூ.17.73 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் நிலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்4 டீசல் எஞ்சினைவிட பிஎஸ்6 டீசல் எஞ்சின் வேரியண்ட்டுகளின் விலை ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் மாடலும் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

பிஎஸ்6 டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 170 எச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்6 பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் 141 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் ஹைப்ரிட் மாடலானது 20 என்எம் டார்க் திறனை அதிகமாக வழங்கும் திறன் பெற்றிருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் மாடலும் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

எஞ்சின் மேம்படுத்தப்பட்டுள்ளதை தவிர்த்து வேறு எந்த விதமான மாற்றங்களும் இல்லை. ஸ்டைல் என்ற பேஸ் வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஸ்டீல் வீல்கள், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, சாய்மான வசதியுடன் பின் இருக்கை ஹெட்ரெஸ்ட், ஆடியோ சிஸ்டம் மற்றும் ரிமோட் லாக்கிங் வசதிகள் உள்ளன.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் மாடலும் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

விலை உயர்ந்த ஷார்ப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, நேரடி இன்டர்நெட் வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் மாடலும் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் எம்ஜி ஹெக்டர் தொடர்ந்து சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருந்து வருகிறது. கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கம் விதத்தில் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
MG Motor has launched Hector BS6 diesel model in India and prices starting at Rs.13.88 Lakh (Ex-showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X