ஹெக்டர் எஸ்யூவிக்கு சிறப்பான புக்கிங்... உற்பத்தியை சீராக்க எம்ஜி தீவிரம்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு மிகச் சிறப்பான முன்பதிவு எண்ணிக்கை கிடைத்துள்ள நிலையில், உற்பத்தியை சீராக்கும் முயற்சிகளில் எம்ஜி மோட்டார் இறங்கி இருக்கிறது.

ஹெக்டர் எஸ்யூவிக்கு சிறப்பான புக்கிங்... உற்பத்தியை அதிகரிக்க எம்ஜி தீவிரம்!

கடந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் கால் பதித்தது. முதல் மாடலாக ஹெக்டர் எஸ்யூவியை அறிமுகம் செய்தது. மேலும், இந்த எஸ்யூவிக்கு ஆரம்பம் முதலே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அட்டகாசமான டிசைன், பிரம்மாண்ட தோற்றம், நேரடி இன்டர்நெட் வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் மிக சரியான விலையில் சந்தைக்கு வந்தது.

ஹெக்டர் எஸ்யூவிக்கு சிறப்பான புக்கிங்... உற்பத்தியை அதிகரிக்க எம்ஜி தீவிரம்!

இதனால், இந்தியர்கள் இந்த காரை உச்சி முகர்ந்து ஏற்றுக்கொண்டு பெரும் ஆதரவு கொடுத்து வருகிறது. இந்த நிலையில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு ஆகிறது. இந்த சூழலில், இதுவரை 50,000க்கும் அதிகமான முன்பதிவுகளை எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி பெற்றிருக்கிறது.

ஹெக்டர் எஸ்யூவிக்கு சிறப்பான புக்கிங்... உற்பத்தியை அதிகரிக்க எம்ஜி தீவிரம்!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் இது மிகச் சிறப்பான முன்பதிவு எண்ணிக்கையாக கூற முடியும். மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு பின்னர், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிதான் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த முன்பதிவு எண்ணிக்கையை பெற்றிருக்கிறது. இதுவரை 21,000 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

ஹெக்டர் எஸ்யூவிக்கு சிறப்பான புக்கிங்... உற்பத்தியை அதிகரிக்க எம்ஜி தீவிரம்!

இதனிடையே, கொரோனா பிரச்னை காரணமாக, குஜராத்தில் உள்ள எம்ஜி மோட்டார் ஆலையில் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால், டெலிவிரி கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் படிப்படியாக ஹெக்டர் எஸ்யூவியின் டெலிவிரிப் பணிகளை சீராக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஹெக்டர் எஸ்யூவிக்கு சிறப்பான புக்கிங்... உற்பத்தியை அதிகரிக்க எம்ஜி தீவிரம்!

உற்பத்தியை அதிகரித்து காத்திருப்பு காலத்தை குறைக்கும் முயற்சிகளிலும் எம்ஜி ஈடுபட்டுள்ளது. எனினும், உதிரிபாகங்கள் சப்ளை மற்றும் டீலர்களுக்கு அனுப்புவதற்கான போக்குவரத்து பிரச்னைகள் தொடர்ந்து உள்ளதாக எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது.

ஹெக்டர் எஸ்யூவிக்கு சிறப்பான புக்கிங்... உற்பத்தியை அதிகரிக்க எம்ஜி தீவிரம்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டன. பெட்ரோல் வேரியண்ட்டுகளுக்கு ரூ.12.74 லட்சம் முதல் ரூ.17.44 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையும், பிஎஸ்6 டீசல் வேரியண்ட்டுகளுக்கு ரூ.13.88 லட்சம் முதல் ரூ.17.73 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹெக்டர் எஸ்யூவிக்கு சிறப்பான புக்கிங்... உற்பத்தியை அதிகரிக்க எம்ஜி தீவிரம்!

பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் டர்போ எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 143 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் ஃபியட் எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

ஹெக்டர் எஸ்யூவிக்கு சிறப்பான புக்கிங்... உற்பத்தியை அதிகரிக்க எம்ஜி தீவிரம்!

இந்த நிலையில், எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் அடிப்படையிலான ஹெக்டர் ப்ளஸ் என்ற 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மாடலானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மார்க்கெட்டை குறிவைத்து நிலைநிறுத்தப்பட உள்ளது.

Most Read Articles
English summary
MG Motor is planning to increase Hector production in Halol plant in Gujarat.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X