புதிய க்ரில், 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள்... மிரள வைக்க வருகிறது எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்...

விரைவில் அறிமுகமாகவுள்ள எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை மாதிரி கார் குஜராத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய க்ரில், 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள்... மிரள வைக்க வருகிறது எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்...

எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் மாடலின் மூலம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தியாவில் களமிறங்கியது. நம் நாட்டு சந்தையில் இந்த காருக்கு எத்தகைய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது உங்களுக்கே நன்றாகவே தெரியும்.

புதிய க்ரில், 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள்... மிரள வைக்க வருகிறது எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்...

குறிப்பாக, அறிமுகத்தின்போது இந்த எம்ஜி கார் மிக பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. இருப்பினும் ஹெக்டருக்கான முன்பதிவுகளை எம்ஜி நிறுவனம் தற்சமயம் தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால்தான் இந்த காரின் விற்பனை எண்ணிக்கைகள் குறைவாகவே பதிவாகி வருகின்றன.

புதிய க்ரில், 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள்... மிரள வைக்க வருகிறது எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்...

இந்த நிலையில் ஹெக்டரை சிறிய அளவிலான ஃபேஸ்லிஃப்ட் மாற்றத்துடன் கொண்டுவர எம்ஜி நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது. இதனை தற்போது குஜராத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை ஓட்டம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.

புதிய க்ரில், 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள்... மிரள வைக்க வருகிறது எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்...

காடிவாடி செய்திதளத்தால் கிடைக்க பெற்றுள்ள இதுகுறித்த ஸ்பை படங்களில் காரின் முன்பகுதி புதிய மெஷ் டிசைனிலான க்ரில்லை கொண்டுள்ளது. இந்த க்ரில் அமைப்பில் இருந்து இருபுறமும் வெளிவரும் க்ரோம் அவுட்லைன், கிடைமட்ட வடிவில் பொருத்தப்பட்ட இரு ஹெட்லேம்ப்களையும் இணைக்கிறது.

புதிய க்ரில், 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள்... மிரள வைக்க வருகிறது எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்...

முன்பக்க பம்பரில் மாற்றம் இருப்பதுபோல் தெரியவில்லை. பக்கவாட்டில் 17 இன்ச்சில் புதிய ட்யூல்-டோனில் அலாய் சக்கரங்களை பார்க்க முடிகிறது. இதுதவிர்த்து காரின் பக்கவாட்டு பகுதி முழுவதும் அப்படியே தற்போதைய ஹெக்டரில் உள்ளதை போலவே உள்ளது.

புதிய க்ரில், 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள்... மிரள வைக்க வருகிறது எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்...

பின்பக்கத்தில் டெயில்லேம்ப்களுக்கு இடைப்பட்ட ஸ்ட்ரிப் மட்டுமே வேறுபடுகிறது. ஏனெனில் விற்பனையில் உள்ள ஹெக்டரில் டெயில்லைட்களை மத்தியில் தடிமனான க்ரோம் ஸ்ட்ரிப் உடன் சிவப்பு நிற ஸ்ட்ரிப் இணைக்கிறது. ஆனால் இந்த சோதனை காரில் தடிமனான க்ரோம் அண்டர்லைன் உடன் கருப்பு நிற ஸ்ட்ரிப் டெயில்லைட்களை இணைக்கிறது.

புதிய க்ரில், 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள்... மிரள வைக்க வருகிறது எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்...

மற்றப்படி பின்புற பம்பர், பிரதிபலிப்பான் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல் என்ஜின் உள்ளிட்ட இயந்திர பாகங்களிலும் ஹெக்டருக்கும் அதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கும் இடையே மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஹெக்டரில் மூன்று என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

புதிய க்ரில், 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள்... மிரள வைக்க வருகிறது எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்...

இதில் ஒன்றான 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 141 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இரண்டாவது தேர்வாக இதே பிஎச்பி மற்றும் என்எம் டார்க் திறனுடன் இந்த 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது.

புதிய க்ரில், 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள்... மிரள வைக்க வருகிறது எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்...

இவை இரண்டுடனும் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளாக கொடுக்கப்படுகின்றன. 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மூன்றாவது என்ஜின் தேர்வாக வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

புதிய க்ரில், 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள்... மிரள வைக்க வருகிறது எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்...

எம்ஜி நிறுவனம் சமீபத்தில் ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பை அதன் முதல் இந்திய மாடலான ஹெக்டருக்கு வழங்கி இருந்தது. இந்த புதிய பெயிண்ட் அமைப்புகள் அப்படியே ஹெக்டரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கும் தொடரப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
English summary
MG Hector Facelift Spied On Test With New Front Grille & 17″ Alloys
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X