எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள், படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் அறிமுகம்!

கடந்த ஆண்டு எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்திய முதல் மாடலான ஹெக்டர் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மிக பிரம்மாண்டமான இந்த எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு வாங்கினர். இருப்பினும், இது அதிக இருக்கை வசதி கொண்ட மாடலாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என பலர் கருதினர்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் அறிமுகம்!

வாடிக்கையாளர்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதத்தில் ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடலை இன்று ஆட்டோ எக்ஸ்போவில் பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது எம்ஜி மோட்டார்ஸ். ஹெக்டர் ப்ளஸ் என்ற பெயரில் இந்த புதிய மாடல் குறிப்பிடப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் அறிமுகம்!

இந்த காரின் நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இது மிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும். மேலும், மூன்றாவது வரிசையிலும் போதுமான இடவசதியை வழங்கும் வகையிலேயே இருக்கிறது. மூன்றாவது வரிசை இருக்கையில் தனி ஏசி வென்ட்டுகள் மற்றும் யுஎஸ்பி சார்ஜர் வசதி உள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் அறிமுகம்!

சாதாரண ஹெக்டர் 5 சீட்டர் மாடலைவிட இந்த காரின் நீளம் 40 மிமீ கூடுதலாக வந்துள்ளது. இந்த கார் 4,655 மிமீ நீளமும், 1,835 மிமீ அகலமும், 1,760 உயரமும் கொண்டது. இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,750 மிமீ ஆக உள்ளது. மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் அறிமுகம்!

புதிய ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் ஹெட்லைட், க்ரில், டெயில் க்ளஸ்ட்டர் டிசைனில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள், சதுர வடிவ தோற்றத்தை தரும் வீல் ஆர்ச்சுகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் அறிமுகம்!

இந்த காரில் 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. நேரடி இணைய வசதியை அளிக்கும் இ-சிம்கார்டுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸடம் கொடுக்கப்படுகிறது. ஐ-ஸ்மார்ட் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் அறிமுகம்!

பனோரமிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள் உள்பட 5 சீட்டர் ஹெக்டர் எஸ்யூவியில் வழங்கப்படும் அனைத்து அம்சங்களும் இந்த காரிலும் வழங்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் அறிமுகம்!

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியில் 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 143 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே எதிர்பார்க்கலாம்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் அறிமுகம்!

எம்ஜி ஹெக்டர் 5 சீட்டர் மாடல் ரூ.12.73 லட்சம் முதல் ரூ.17.43 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனைவிட சற்று கூடுதல் விலையில் புதிய ஹெக்டர் ப்ளஸ் என்ற இந்த 6 சீட்டர் மாடல் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலும் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

Most Read Articles
English summary
MG Motor India has unveiled the Hector Plus 6-seater SUV at Auto Expo 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X