நடு வரிசையில் இரு கேப்டன் இருக்கைகள்... அட்டகாசமான வடிவமைப்பில் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்..

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மூன்றாவது இந்திய அறிமுக மாடலான ஹெக்டர் ப்ளஸ் மாடலின் பெயர் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு இந்த மாத துவக்கத்தில் தான் கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த காரின் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

நடு வரிசையில் இரு கேப்டன் இருக்கைகள்... அட்டகாசமான வடிவமைப்பில் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்...

குஜாராத்தில் உள்ள எம்ஜி நிறுவனத்தின் ஹலோல் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்ற புதிய ஹெக்டர் ப்ளஸ் மாடல், முதன்முதலாக இந்த ஆண்டு துவக்கத்தில் 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போதைய ஹெக்டர் எஸ்யூவி கார் ஆனது 5 இருக்கை அமைப்பை கொண்டுள்ளது.

நடு வரிசையில் இரு கேப்டன் இருக்கைகள்... அட்டகாசமான வடிவமைப்பில் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்...

ஆனால் புதிய ஹெக்டர் ப்ளஸ் மாடலில் 6-இருக்கை அறிமுகத்தின்போதும், 7-இருக்கை தேர்வு சிறிது காலத்திற்கு பிறகும் வழங்கப்படவுள்ளன. இந்த கூடுதல் இருக்கை அமைப்பே ஹெக்டர் ப்ளஸ் மாடலின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.

இதனை வெளிப்படுத்தும் வகையில் தான் தற்போது புதிய டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் காரின் நடு இருக்கை வரிசையில் வழங்கப்பட்டுள்ள இரு கேப்டன் இருக்கைகள் ஹைலைட்டாக சுட்டி காட்டப்பட்டுள்ளன.

நடு வரிசையில் இரு கேப்டன் இருக்கைகள்... அட்டகாசமான வடிவமைப்பில் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்...

புதிய ஹெக்டர் ப்ளஸ் மாடல் வெளிப்புறம் மற்றும் உட்புற தோற்றத்தில் ஹெக்டர் காரை தான் அதிகளவில் பின்பற்றியுள்ளது. இருப்பினும் புதிய வடிவில் முன்புற க்ரில், பிளவுப்பட்ட ஹெட்லேம்ப்கள், திருத்தியமைக்கப்பட்ட பின்புற பம்பர்கள், ஸ்கிட் ப்ளேட்கள் மற்றும் புதிய டிசைனில் டெயில்லேம்ப்களை இந்த எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

நடு வரிசையில் இரு கேப்டன் இருக்கைகள்... அட்டகாசமான வடிவமைப்பில் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்...

மத்தியில் இரு கேப்டன் இருக்கைகள் மட்டுமின்றி ட்யூல்-டோன் நிறத்தில் உட்புற கேபின், பனோராமிக் சன்ரூஃப், சுற்றிலும் விளக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 360 கோண கேமிரா, பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்புடன் 10 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் இந்த கார் பெற்றுள்ளது.

நடு வரிசையில் இரு கேப்டன் இருக்கைகள்... அட்டகாசமான வடிவமைப்பில் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்...

காரில் ஏசி வெண்ட்ஸ் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் துளை மூன்றாவது இருக்கை வரிசை பயணிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. எம்ஜி நிறுவனம் 5-இருக்கை ஹெக்டர் மாடலை போன்று புதிய ஹெக்டர் ப்ளஸ் மாடலுக்கும் அதிகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளை வழங்கவுள்ளது.

நடு வரிசையில் இரு கேப்டன் இருக்கைகள்... அட்டகாசமான வடிவமைப்பில் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்...

இதில் 143 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கக்கூடிய 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் உள்ளிட்டவை அடங்குகின்றன.

நடு வரிசையில் இரு கேப்டன் இருக்கைகள்... அட்டகாசமான வடிவமைப்பில் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்...

ட்ரான்ஸ்மிஷனிற்கு டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் தேர்வும், டர்போ டீசல் என்ஜினிற்கு ஒரே ஒரு 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் வழங்கப்படவுள்ளது. இவை தவிர்த்து பெட்ரோல் மேனுவல் ஹைப்ரீட் என்ஜின் தேர்வு ஹெக்டர் ப்ளஸ் மாடலின் ஷார்ப் வேரியண்ட்டிற்கு மட்டும் கொடுக்கபடவுள்ளது.

நடு வரிசையில் இரு கேப்டன் இருக்கைகள்... அட்டகாசமான வடிவமைப்பில் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்...

இந்த புதிய மாடலின் விலை குறித்த எந்த தகவலும் தற்போதைக்கு வெளியாகவில்லை. அதிகளவில் டிசைன் அப்டேட்களையும் தொழிற்நுட்பங்களையும் பெற்றுள்ளதால் வழக்கமான ஹெக்டர் எஸ்யூவி காரை காட்டிலும் ரூ.1 லட்சம் வரையில் அதிகமான விலையினை பெறலாம். தற்போதைய ஹெக்டர் காரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.12.73 லட்சத்தில் இருந்து ரூ.17.72 லட்சம் வரையில் உள்ளது.

Most Read Articles

English summary
MG Hector Plus Captain Seats in Brown Leather – Teaser Video
Story first published: Sunday, July 5, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X