தீவிர சோதனை ஓட்டங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சமாளிக்குமா...?

இந்த மாத அறிமுகத்திற்கு முன்னதாக எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மாடல் மீண்டும் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தீவிர சோதனை ஓட்டங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சமாளிக்குமா...?

இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹெக்டர் எஸ்யூவி மாடலின் மூன்று-இருக்கை வெர்சனாக அறிமுகமாகும் புதிய ஹெக்டர் ப்ளஸ் மாடல், வீல்பேஸ் மற்றும் பாடி ஷெல்களில் பெரும்பான்மையாக ஹெக்டர் மாடலை தான் ஒத்து காணப்படுகிறது.

தீவிர சோதனை ஓட்டங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சமாளிக்குமா...?

இதில் வேறுபட்ட அம்சமாக வித்தியாசமான டிசைனில் வடிவமைக்கப்பட்ட பம்பர் விளங்குகிறது. வெளிநாட்டு சந்தைகளில் 7 மற்றும் 6 இருக்கை தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹெக்டர் ப்ளஸ் மாடலின் 6-இருக்கை வெர்சன் தான் தற்போது சோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளது.

தீவிர சோதனை ஓட்டங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சமாளிக்குமா...?

இந்த கார் இந்திய சந்தையில் நிலைநிறுத்தப்படவுள்ள பிரிவில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா கிராவிட்டாஸ் மாடல்கள் உள்ளன. இவற்றிற்கு இணையாகவோ அல்லது இவை எல்லாத்தையும் விடவும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மாடல் பிரபலமானாலும், சந்தையில் மிக பிரபலமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை தான் எவ்வாறு சமாளிக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தீவிர சோதனை ஓட்டங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சமாளிக்குமா...?

குறிப்பாக எக்ஸ்ஷோரூம் விலையின் மூலமாக தான் இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு போட்டியினை அளிக்க எம்ஜி நிறுவனம் திட்டமிட்டிருக்கும் என தெரிகிறது. ஹெக்டர் ப்ளஸ் மாடலின் 6-இருக்கை வெர்சன் கிட்டத்தட்ட இன்னோவாவின் டாப் வேரியண்ட்களான விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் வெர்சன்களுக்கு இணையான ப்ரீமியம் தோற்றத்தை பெற்றிருக்கும் என கூறப்படுவதால் ஹெக்டர் ப்ளஸ் 6-இருக்கை வெர்சனின் விலையில் தான் எம்ஜி நிறுவனம் கவனமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிர சோதனை ஓட்டங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சமாளிக்குமா...?

அதாவது இன்னோவா க்ரிஸ்ட்டாவின் 2.4 லிட்டர் டீசல் என்ஜினை கொண்ட விஎக்ஸ் மேனுவல் மாடல் ரூ.20.89 லட்சத்தை விலையாகவும், இசட்எக்ஸ் மேனுவல் ஸ்போர்ட்ஸ் ரூ.22.43 லட்சத்தை விலையாகவும் கொண்டுள்ளன. ஹெக்டர் ப்ளஸின் 6-இருக்கை வெர்சன் இவற்றை விட ரூ.3 லட்சம் வரையில் குறைவான விலை மதிப்பை பெறலாம்.

தீவிர சோதனை ஓட்டங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சமாளிக்குமா...?

குறைவான விலை மட்டுமில்லாமல் இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு வேறு சில வழிகளிலும் போட்டி கொடுக்க எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் முதன்மையானதாக 2.0 லிட்டர் டீசல் என்ஜின் உள்ளது. ஏனெனில் இந்த டீசல் என்ஜின் இன்னோவாவை காட்டிலும் ஹெக்டர் ப்ளஸிற்கு கூடுதல் மதிப்பினை வழங்கலாம்.

தீவிர சோதனை ஓட்டங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சமாளிக்குமா...?

இந்த வகையில் எம்ஜியின் இந்த புதிய எஸ்யூவி மாடலில் பொருத்தப்படவுள்ள இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. அதேநேரம் இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலில் பொருத்தப்பட்டு வருகின்ற 2.4 லிட்டர் டீசல் என்ஜின் 150 பிஎச்பி மற்றும் 343 என்எம் டார்க் திறனை தான் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தீவிர சோதனை ஓட்டங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சமாளிக்குமா...?

இவற்றுடன் இணைப்பு தொழிற்நுட்பங்கள், 360 டிகிரி கேமிரா மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளிலும் ஹெக்டர் ப்ளஸ், இன்னோவிற்கு போட்டியினை அளிக்கலாம். அதேபோல் மையத்தில் இரு கேப்டன் இருக்கைகளுடன் சவுகரியத்திலும் எம்ஜியின் இந்த புதிய மாடலில் எவ்வித குறைப்பாடும் இல்லை.

தீவிர சோதனை ஓட்டங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சமாளிக்குமா...?

ஆனால் மூன்றாவது இருக்கை வரிசை எடுத்து கொண்டால் டொயோட்டாவின் கை தான் ஒங்குகிறது. இது மட்டுமின்றி இன்னோவா க்ரிஸ்ட்டாவின் புல்லட்ப்ரூஃப் நற்பெயர் எம்ஜி-க்கு மிக பெரிய தலைவலியாக உள்ளது. இதுவே வாடிக்கையாளர்கள் பணம் சற்று அதிகம் செலவானாலும் பரவாயில்லை என இன்னோவா க்ரிஸ்ட்டாவின் பக்கம் செல்வதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.

தீவிர சோதனை ஓட்டங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சமாளிக்குமா...?

இதன் காரணமாகவே சிக்கலில்லாமல் இவ்வாறான ப்ரீமியம் கார்களுக்கு சொந்தகாரர் ஆக நினைப்போரை இலக்காக எம்ஜி நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதுவே எம்ஜி ஷீல்ட் உடன் ஹெக்டர் ப்ளஸிற்கு 5-வருட/வரையறை இல்லா கிமீ உத்தரவாதத்தை வழங்க இந்நிறுவனத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

தீவிர சோதனை ஓட்டங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சமாளிக்குமா...?

இந்த எம்ஜி ஷீல்ட்டில், சாலையோர உதவி தொகுப்புகள் மற்றும் பணத்தை திரும்ப பெறும் திட்டம் உள்ளிட்டவை அடங்குகின்றன. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா நிலையான 3-வருட/1,00,000கிமீ உத்தரவாதத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
mg hector plus spied
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X