எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்டுகள் விற்பனை நிறுத்தம்!

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்டுகள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆரம்ப விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்டுகள் விற்பனை நிறுத்தம்!

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அதன் 6 சீட்டர் வெர்ஷன் ஹெக்டர் ப்ளஸ் என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்டுகள் விற்பனை நிறுத்தம்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி கார் மார்க்கெட்டை குறிவைத்து வந்த கார் மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுக்கு நிகராக இந்த இதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்டுகள் விற்பனை நிறுத்தம்!

இந்த நிலையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எஸ்யூவிக்கு நிகராக நிலைநிறுத்தப்பட்டாலும், விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் ஸ்டைல் என்ற பெட்ரோல் பேஸ் வேரியண்ட் ரூ.13.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலைியலும், டீசல் மாடலின் ஸ்டைல் வேரியண்ட் ரூ.14.44 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் வந்தது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்டுகள் விற்பனை நிறுத்தம்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவைவிட விலை குறைவான தேர்வாக இருந்ததால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், தற்போது எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் ஸ்டைல் பேஸ் வேரியண்ட் விற்பனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்டுகள் விற்பனை நிறுத்தம்!

இதனையடுத்து, அடுத்ததாக நடுத்தர வசதிகள் கொண்ட பெட்ரோல் டிசிடி ஸ்மார்ட் வேரியண்ட் இனி ஆரம்ப விலை கொண்ட பெட்ரோல் மாடலாக இருக்கும். பெட்ரோல் மாடல் ரூ.16.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் என்ற ஆரம்ப விலையில் இனி கிடைக்கும். மறுபுறத்தில் டீசல் சூப்பர் வேரியண்ட்தான் இனி பேஸ் வேரியண்ட்டாக இருக்கும். இனி டீசல் மாடல் ரூ.15.65 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்டுகள் விற்பனை நிறுத்தம்!

மேலும், இதன் பெட்ரோல்- ஹைப்ரிட் தேர்வானது ஷார்ப் என்ற ஒரே வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். பெ்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 143 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் மாடல் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கிடைக்கிறது. டீசல் மாடலில் வழங்கப்படும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் விலை குறைவான வேரியண்ட்டுகள் விற்பனை நிறுத்தம்!

இந்த காரில் நடுவில் கேப்டன் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. 55 வசதிகளை வழங்கும் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பனோரமிக் ஏசி சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. புஷ் பட்டன் ஸ்டார்ட், 360 டிகிரி கேமரா, க்ரூஸர் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது.

Most Read Articles
English summary
MG Motor India has discreetly discontinued the Style variants of the Hector Plus.
Story first published: Saturday, October 31, 2020, 17:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X