எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் 6 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் வேரியண்ட்டுகள் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலானது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வந்திருப்பதுடன் ஸ்டைல், ஸ்மார்ட், ஷார்ப் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். டீசல் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டும் வந்துள்ளது. ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

ஸ்டைல் வேரியண்ட்

பெட்ரோல் மேனுவல்: ரூ.13.49 லட்சம்

டீசல் மேனுவல்: ரூ.14.44 லட்சம்

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், பின்புறத்தில் எல்இடி பனி விளக்குகள், ஸ்டீல் வீல்கள், க்ரோம் அலங்காரத்துடன் முன்புற க்ரில் அமைப்பு, சில்வர் வண்ண பாடி கிளாடிங் சட்டம், ரியர் ஸ்பாய்லர், ஃபேப்ரிக் இருக்கைகள், நடுவில் சாய்மான வசதியுடன் இரண்டு கேப்டன் இருக்கைகள், மேனுவல் ஏசி சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி வசதி, டில்ட் ஸ்டீயரிங், பவர் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள் உள்ளன.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

இரண்டாவது வரிசை இருக்கை பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள், மூன்று வரிசை இருக்கைகளுக்கும் தனித்தனி யுஎஸ்பி சார்ஜர்கள், கூல்டு க்ளவ் பாக்ஸ், 4 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம், ரியர் ஸ்பாய்லர், 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், கார்னரிங் வசதியுடன் பனி விளக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், இரண்டு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

சூப்பர் வேரியண்ட்

டீசல் மேனுவல்: ரூ.15.65 லட்சம்

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, முன்புற பார்க்கிங் சென்சார்கள், சில்வர் அலாய் வீல்கள், சுறா துடுப்பு வடிவிலான ஆன்டென்னா, உட்புறத்தில் க்ரோம் கைப்பிடிகள், ரூஃப் ரெயில்கள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஹெட் யூனிட்டில் ஏசி கன்ட்ரோல் வசதி, வேனிட்டி மிரர், 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

ஸ்மார்ட் வேரியண்ட்

பெட்ரோல் ஆட்டோமேட்டிக்: ரூ.16.65 லட்சம்

டீசல் மேனுவல்: ரூ.17.14 லட்சம்

ஸ்டைல், சூப்பர் வேரியண்ட்டுகளில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (ஆட்டோமேட்டிக் மாடலில் மட்டும்) எல்இடி முன்புற பனி விளக்குகள், 4 ஏர்பேக்குகள், டியூவல் டோன் அலாய் வீல்கள், க்ரோம் கைப்பிடிகள், க்ரோம் பாடி கிளாடிக் சட்டம், செபியா பிரவுன் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, எல்இடி ரீடிங் லைட்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட், 8 ஸ்பீக்கர்களுடன் இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், ஐ - ஸ்மார்ட் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்ப வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

ஷார்ப்

பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் மேனுவல்: ரூ.17.29 லட்சம்

பெட்ரோல் ஆட்டோமேட்டிக்: ரூ.18.21 லட்சம்

டீசல் மேனுவல்: ரூ.18.54 லட்சம்

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் விலை உயர்ந்த இந்த வேரியண்ட்டில் 360 டிகிரி கேமரா, 7 அங்குல வண்ண திரையுடன் மல்டி இன்ஃபர்மேஷன் சாதனம், டியூவல் பேன் பனோரமிக் சன்ரூஃப், கால் அசைவு மூலமாக திறக்கும் வசதியுடன் டெயில் கேட், ஆட்டோமேட்டிக் ஏசி, ரிமோட் முறையில் சன்ரூஃப் திறக்கும் வசதி, சன்க்ளாஸ் ஹோல்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

இருக்கை வசதி

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி 6 சீட்டர் மாடலில் மட்டுமே வந்துள்ளது. மூன்று வரிசை இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், நடுவில் கேப்டன் இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. இருக்கைகளை நகர்த்த முடியும் என்பதுடன் சாய்மான வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 7 சீட்டர் மாடல் சற்று தாமதமாக வரும் வாய்ப்பு உள்ளது.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் டர்போ எஞ்சின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட வேரியண்ட்டிலும் கிடைக்கும். மேனுவல் அல்லது டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

டீசல் மாடல்

டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் வேரியண்ட்டுகள் வாரியாக வசதிகள் விபரம்!

விலை விபரம்

புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ரூ.13.49 லட்சம் ஆரம்ப விலையில் வந்துள்ளது. இது போட்டியாளர்களுக்கு மிக சவாலான விலையாக கூறலாம். குறிப்பாக, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி கார் மார்க்கெட்டை குறிவைத்து இந்த மாடலை எம்ஜி கொண்டு வந்துள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவுடன் நேரடியாக ஒப்பிட முடியாவிட்டாலும், பட்ஜெட் பிரச்னை உள்ளவர்கள் நிச்சயம் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியை தேர்வுக்கு எடுத்துக் கொள்வர் என்று கூற முடியும்.

Most Read Articles
English summary
Here are the variant wise features list of new MG Hector Plus SUV.
Story first published: Tuesday, July 14, 2020, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X