முதலாமாண்டு கொண்டாட்டம்: எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன்!

கூடுதல் வசதிகளுடன் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

முதலாமாண்டு கொண்டாட்டம்: எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன்!

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் எம்ஜி ஹெக்டர்தான் வாடிக்கையாளர் தேர்வில் நம்பர்-1 சாய்ஸாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக ஓர் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.

முதலாமாண்டு கொண்டாட்டம்: எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன்!

இதனை கொண்டாடும் வகையில், கூடுதல் வசதிகளுடன் ஹெக்டர் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பெட்ரோல், டீசல் என இரண்டு எஞ்சின் தேர்வுகளிலும் இந்த ஸ்பெஷல் எடிசன் கிடைக்கும்.

முதலாமாண்டு கொண்டாட்டம்: எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன்!

இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலானது சூப்பர் என்ற வேரியண்ட்டின் அடிப்படையில் கூடுதல் வசதிகளுடன் வந்துள்ளது. சாதாரண சூப்பர் வேரியண்ட்டில் வழங்கப்படும் வசதிகளுடன் கூடுதலாக வயர்லெஸ் சார்ஜர், ஏர் பியூரிஃபயர், மெட்க்ளின் சான்று பெற்ற வைரஸ் அழிப்பு சாதனத்துடன் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

முதலாமாண்டு கொண்டாட்டம்: எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன்!

இந்த காரில் 25க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள், 50க்கும் மேற்பட்ட கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதிகள், வாய்ஸ் அசிஸ்ட் வசதி, டியூவல் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

முதலாமாண்டு கொண்டாட்டம்: எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன்!

மற்றபடி, ஹெக்டர் எஸ்யூவியின் தோற்றம் மற்றும் எஞ்சின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான ஹெக்டர் எஸ்யூவியை போலவே வெளிப்புறத் தோற்றத்தை பெற்றிருக்கிறது. வேறுபடுத்தும் விதத்தில், ஸ்டிக்கர் உள்ளிட்டவை எதுவும் வழங்கப்படவில்லை.

முதலாமாண்டு கொண்டாட்டம்: எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன்!

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 169 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

முதலாமாண்டு கொண்டாட்டம்: எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன்!

எம்ஜி ஹெக்டர் ஆனிவர்சரி எடிசன் மாடலின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.13.63 லட்சமும், டீசல் மாடலுக்கு ரூ.14.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலத்தில் மிட்சைஸ் எஸ்யூவி வாங்க திட்டமிடுவோருக்கு இது சிறந்த தேர்வாக அமையும் என கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
எம்ஜி ஹெக்டர், எம்ஜி மோட்டார், எம்ஜி ஹெக்டர் ஆனிவர்சரி எடிசன், எம்ஜி ஹெக்டர் ஸ்பெஷல் எடிசன், எம்ஜி கார்
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X