கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பு இல்லை... எம்ஜி இசட்எஸ் இவி காரின் விற்பனை அமோகம்...

இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகமான இசட்எஸ் இவி காரின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பு இல்லை... எம்ஜி இசட்எஸ் இவி காரின் விற்பனை அமோகம்...

எம்ஜி இசட்எஸ் இவி மாடல் கடந்த மாதத்தில் மொத்தம் 158 யூனிட்கள் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தின் மத்தியில் அறிமுகமான இந்த கார் ரூ.20.88 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக பெற்றுள்ளது.

கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பு இல்லை... எம்ஜி இசட்எஸ் இவி காரின் விற்பனை அமோகம்...

மேலும் இந்த எலக்ட்ரிக் மாடலுக்கு இதுவரை 3000 முன்பதிவு நடந்துள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3000 என்ற முன்பதிவு எண்ணிக்கை கடந்த 2019ஆம் ஆண்டில் மொத்தம் விற்பனையான எலக்ட்ரிக் மாடல்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பு இல்லை... எம்ஜி இசட்எஸ் இவி காரின் விற்பனை அமோகம்...

இசட்எஸ் இவி மாடலுக்கு சந்தையில் பெருகிவரும் வரவேற்பு குறித்து எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவின் இயக்குனர் ராகேஷ் சிதானா கருத்து தெரிவிக்கையில், எம்ஜி இசட்எஸ் இவி மாடலுக்கு அறிமுகமான முதல் மாதத்திலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பு இல்லை... எம்ஜி இசட்எஸ் இவி காரின் விற்பனை அமோகம்...

இதனால் 150 இசட்எஸ் எலக்ட்ரிக் மாடலை வாடிக்கையாளர்கள் ஏற்கனவே டெலிவிரி செய்துவிட்டனர். வீடு மற்றும் அலுவலங்களில் உபயோகப்படுத்தும் வகையில் இந்த காருக்கு சார்ஜர் வழங்கப்பட்டுள்ளதால், இவி கார் விற்பனையில் நாங்கள் காட்டும் கவனத்தை பார்த்து எங்களது வாடிக்கையாளர்கள் சந்தோஷமடைந்து இருப்பார்கள் என நம்புகிறோம்.

கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பு இல்லை... எம்ஜி இசட்எஸ் இவி காரின் விற்பனை அமோகம்...

இதனால் இவி கார்களின் விற்பனையிலும் டெலிவிரியிலும் வரும் மாதங்களில் இன்னும் அதிகமாக எங்களை உட்படுத்தி கொள்ளவுள்ளோம் என கூறினார். எம்ஜி நிறுவனத்தின் லேட்டஸ்ட் இந்திய அறிமுக மாடலான இசட்எஸ் இவி கார் ஏகப்பட்ட தொழிற்நுட்பங்களையும் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் வலிமையான இயக்க ஆற்றலையும் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பு இல்லை... எம்ஜி இசட்எஸ் இவி காரின் விற்பனை அமோகம்...

விற்பனை நிலவரத்தை தவிர்த்து எம்ஜி மோட்டார் நிறுவனம் கொரோனா வைரஸ் காரணமாக தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட இடையூறுகளை களையும் விதமாக இசட்எஸ் இவி மாடலில் அப்டேட்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பு இல்லை... எம்ஜி இசட்எஸ் இவி காரின் விற்பனை அமோகம்...

பிப்ரவரியில் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட தொய்வு இந்த மார்ச் மாதத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சிதானா கூறியுள்ளார். இருப்பினும் எம்ஜி நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் விற்பனை இந்த மாத இறுதிக்குள் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பு இல்லை... எம்ஜி இசட்எஸ் இவி காரின் விற்பனை அமோகம்...

இதுகுறித்து சிதானா மேலும் கருத்து கூறுகையில், கொரோனோ வைரஸினால் ஐரோப்பா மற்றும் சீனாவிற்கு ஏற்றுமதி மற்றும் கார்கள் தயாரிக்கும் பணியில் சில இடையூறுகள் கடந்த மாதத்தில் ஏற்பட்டன. மேலும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு இந்த மார்ச் மாதத்திற்கும் தொடரும் என தெரிகிறது.

கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பு இல்லை... எம்ஜி இசட்எஸ் இவி காரின் விற்பனை அமோகம்...

ஆனால் இந்த நிலைமையை இந்த மார்ச் மாதத்திற்குள்ளாக சரி செய்துவிடுவோம் என நம்புகிறோம் என கூறினார். மிட்-சைஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காராக இந்திய சந்தைக்கு வந்த முதல் இணையத்தள வசதி கொண்ட காராக விளங்கும் எம்ஜி இசட்எஸ் இவி மாடலுக்கு மார்க்கெட்டில் ஹூண்டாய் கோனா இவி மிக முக்கியமான போட்டி மாடலாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
MG ZS EV Sales In India For February 2020: Company Registers 158 Units In First Month Of Sales
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X