Just In
- 29 min ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 2 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 12 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 14 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
Don't Miss!
- Sports
விக்கெட் எடுக்க முடியவில்லை.. கடும் விரக்தி.. பதற்றத்தில் ஆஸி. மூத்த வீரர் செய்த காரியம்.. போச்சு
- News
வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருப்பீங்க.. வாட்ஸ்அப்பே ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருக்கீங்களா?
- Movies
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆக்ராவில் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்தது எம்ஜி... 24 மணி நேரமும் பயன்படுத்தி கொள்ளலாம்...
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில், சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை எம்ஜி மோட்டார் நிறுவனம் அமைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டு காலடி எடுத்து வைத்தது. அந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்பின் இந்திய சந்தைக்கான தங்களுடைய இரண்டாவது தயாரிப்பை எம்ஜி மோட்டார் நிறுவனம் நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது முற்றிலும் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் அந்த கார். தற்போதைய நிலையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் போட்டியிட்டு வருகிறது. அத்துடன் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கும் விற்பனையில் சவால் அளித்து வருகிறது. இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கும் சூழலில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பை எம்ஜி மோட்டார் நிறுவனம் அதிகரித்து வருகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில், சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை எம்ஜி மோட்டார் நிறுவனம் அமைத்துள்ளது. டாடா பவர் உடனான கூட்டணியில் இந்த சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஆக்ரா ஷோரூமில் இந்த பொது சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள 60 kW சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை, வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ள ஒரே ஒரே எலெக்ட்ரிக் கார், இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மட்டும்தான்.

எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் என மொத்தம் இரண்டு வேரியண்ட்களில், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், எக்ஸைட் வேரியண்ட்டின் விலை 20.88 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டின் விலை 23.58 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி, எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது. இது உண்மையிலேயே நல்ல எண்ணிக்கை. ஏனெனில் இந்தியாவில் தற்போதுதான் எலெக்ட்ரிக் கார்கள் மெல்ல மெல்ல பிரபலமடைய தொடங்கியுள்ளன. அத்துடன் சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளும் தற்போதுதான் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இவற்றுடன், விலை உள்ளிட்ட அம்சங்களையும் வைத்து பார்க்கும்போது உண்மையிலேயே இது நல்ல எண்ணிக்கைதான். தற்போதைய நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மூன்று எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றவையாக உள்ளன. அவை மூன்றுமே எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவைதான்.

எம்ஜி இஸட்எஸ், ஹூண்டாய் கோனா, டாடா நெக்ஸான் ஆகிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள்தான் அவை. ஆனால் வரும் காலங்களில் இன்னும் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் உள்ளிட்ட கார்கள் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.