க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு!! இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..

இதுவரை இல்லாத அளவிற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை இந்திய சந்தையில் பெற்றுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு!! இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் கடந்த 2020 நவம்பர் மாதத்தில் மட்டும் அதன் 4,163 தயாரிப்பு கார் மாதிரிகளை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இதற்குமுன் ஒரு மாதத்தில் இத்தனை மாதிரி கார்களை இந்தியாவில் எம்ஜி நிறுவனம் விற்பனை செய்தது இல்லை.

க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு!! இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..

மேலும் இந்த எண்ணிக்கை 2019 நவம்பர் மாதத்தை காட்டிலும் 28.5 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 3,239 எம்ஜி கார்கள் தான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் 2020 அக்டோபர் மாதத்துடன் (3,750) ஒப்பிடும்போதும் கடந்த நவம்பர் மாத விற்பனை எண்ணிக்கை 11.01 சதவீதம் அதிகம் ஆகும்.

க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு!! இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..

ஆரம்பத்தில் இருந்து எம்ஜி நிறுவனத்திற்கு அதிகளவில் விற்பனை எண்ணிக்கைகளை பெற்றுதரும் கார் மாடலாக ஹெக்டர் எஸ்யூவி விளங்கி வருகிறது. அதிகளவில் என்பதை காட்டிலும் எம்ஜியின் விற்பனையில் கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கு ஹெக்டர் தான் உதவியாக உள்ளது.

க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு!! இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..

இதனால் தான் இந்த ஆண்டில் ஹெக்டரின் 7-இருக்கை வெர்சனாக ஹெக்டர் ப்ளஸ் மாடலை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்தது. இருப்பினும் அக்டோபர் மாதத்தை காட்டிலும் கடந்த நவம்பர் மாதத்தில் சற்று குறைவான ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு!! இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..

அதாவது அக்டோபரில் 3,625 ஹெக்டர்களும், 2020 நவம்பரில் 3,426 ஹெக்டர்களும் விற்பனையாகி உள்ளன. இவை இரண்டு தான் ஒரு மாதத்தில் அதிகளவில் விற்பனையான ஹெக்டர்களின் முதல் இரு எண்ணிக்கைகளாகும்.

க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு!! இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..

ஹெக்டர் மாடல்களின் விற்பனை குறைந்துள்ளது இருந்தாலும் எவ்வாறு எம்ஜி மோட்டார் 4,163 என்ற அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மனதில் எழ துவங்கியிருக்கும், இதற்கு ஒரே பதில் க்ளோஸ்டர் எஸ்யூவி.

க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு!! இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..

எம்ஜி பிராண்டில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனைக்கு வந்த இந்த எஸ்யூவி, நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்காற்றியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அறிமுகமான முதல் மாதத்தில் 627 க்ளோஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு!! இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..

பிராண்டின் எலக்ட்ரிக் மாடலான இசட்எஸ் இவி 2020 அக்டோபரை காட்டிலும் 15 யூனிட்கள் குறைவாக 110 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையான விற்பனை வளர்ச்சிக்கு பண்டிகை நாட்கள் மிக முக்கிய காரணமாக இருந்ததாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவின் இயக்குனர் ராகேஷ் சிதானா கூறியுள்ளார்.

Most Read Articles

English summary
MG Motor India records highest ever retail sales of 4163 units in November 2020
Story first published: Tuesday, December 1, 2020, 22:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X