சீனாவில் பிரபலமான எம்ஜி மார்வல் எக்ஸ்-ன் அட்டேட் வெர்சன் மார்வல் ஆர்-ன் தகவல்கள் வெளியீடு...

சீனாவில் வெற்றிகரமான எஸ்யூவி மாடலாக விளங்கிய எம்ஜி மார்வல் எக்ஸ்-ன் அப்டேட் வெர்சனாக வெளிவரும் மார்வல் ஆர் மாடலை பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

சீனாவில் பிரபலமான எம்ஜி மார்வல் எக்ஸ்-ன் அட்டேட் வெர்சன் மார்வல் ஆர்-ன் தகவல்கள் வெளியீடு...

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எம்ஜி மோட்டார்ஸின் மார்வல் எக்ஸ் மாடல் சீனாவில் ரோவே மார்வல் எக்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டது.

சீனாவில் பிரபலமான எம்ஜி மார்வல் எக்ஸ்-ன் அட்டேட் வெர்சன் மார்வல் ஆர்-ன் தகவல்கள் வெளியீடு...

ஏனெனில் எம்ஜி-ஐ போன்று ரோவே-யும் சீனாவின் எஸ்ஏஐசி நிறுவனத்தின் கார் ப்ராண்ட்களுள் ஒன்றாகும். இதனை தொடர்ந்து அங்கு மார்வல் ஆர் எலக்ட்ரிக் மாடல் அறிமுகமாகவுள்ளது. அதாவது ஆர் மாடல், மார்வல் எக்ஸ்-ன் மேம்படுத்தப்பட்ட வெர்சனாகும்.

சீனாவில் பிரபலமான எம்ஜி மார்வல் எக்ஸ்-ன் அட்டேட் வெர்சன் மார்வல் ஆர்-ன் தகவல்கள் வெளியீடு...

மார்வல் எக்ஸ்-ல் இருந்து அப்கிரேட் டிசைன் பாகமாக புதிய லோகோ மற்றும் அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்களை இந்த கார் பெற்றுள்ளது. எம்ஜி-ன் ஆர்-லைன் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் தயாரிப்புகளை கொண்டவையாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதலாவதாக வெளியான மாடல் தான் மார்வல் ஆர்.

மார்வல் எக்ஸ் உடன் ஒப்பிடும்போது ஆர் மாடல் கூடுதல் கவர்ச்சிக்கரமான தோற்றத்துடன், கூர்மையான மற்றும் காற்று இயக்கவியலுக்கு தகுந்தப்படியான பாகங்களை கொண்டுள்ளது. முன்புற பகுதி முழுவதுமாக திருத்தியமைக்கப்பட்டு நீர்வீழ்ச்சி வடிவிலான ஏர் இண்டேக் க்ரில், பார்-டைப் எல்இடி லைட் ஸ்ட்ரிப் மற்றும் முன்புற பம்பரில் மேட்ரிக்ஸ் ஸ்டைலில் ஹெட்லைட்கள் உள்ளிட்டவற்றுடன் உள்ளது.

சீனாவில் பிரபலமான எம்ஜி மார்வல் எக்ஸ்-ன் அட்டேட் வெர்சன் மார்வல் ஆர்-ன் தகவல்கள் வெளியீடு...

பின்புறத்தில் எல்இடி டெயில்லைட்டின் டிசைன், முன்புறத்தில் உள்ள பார்-டைப் ஸ்ட்ரிப் உடன் ஒத்த வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் பின்புறத்தில் உள்ள பம்பரில் பொருத்தப்பட்டுள்ள ஒளிரக்கூடிய வகையிலான மார்வல் ஆர் ப்ராண்டிங் லோகோ இந்த கார் எலக்ட்ரிக் மோட்டாருடன் இயங்குவதை வெளிப்படுத்துவதுபோல் உள்ளது.

மற்றப்படி இதன் பக்கவாட்டு பகுதிகளில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. இந்த கார் இந்தியாவிற்கு வரும்போது சக்கரங்களின் டிசைனில் மட்டும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். மார்வல் ஆர் தொழிற்நுட்ப அம்சங்களில் மிகவும் அட்வான்ஸாக உள்ளது. அதாவது இந்த காரில் 5ஜி இணைய இணைப்பு மற்றும் நிலை 3 தன்னிச்சையான ட்ரைவிங் தொழிற்நுட்பம் உள்ளிட்டவை உள்ளது.

சீனாவில் பிரபலமான எம்ஜி மார்வல் எக்ஸ்-ன் அட்டேட் வெர்சன் மார்வல் ஆர்-ன் தகவல்கள் வெளியீடு...

இதனால் எம்ஜி மார்வல் ஆர் மாடல் தான் 5ஜி இணைய வசதியுடன் அதிகளவில் தயாரிக்கப்படும் மாடலாக விளங்கவுள்ளது. மார்வல் ஆர் மாடலின் டிசைன் அமைப்பிற்காக உலகின் முதன்மையான தொலைத்தொடர்பு உபகரண நிறுவனமான ஹூவாய் உடன் எஸ்ஏஐசி நிறுவனம் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.

இந்த கூட்டணியில் புதிய மாடல்கள் கடந்த 2018ல் இருந்து தயாரிக்கப்பட்டு வருகின்றன. 5ஜி ஸ்மார்ட் காக்பிட்டிற்காக வி2எக்ஸ் ஸ்மார்ட் ட்ராவல் தொழிற்நுட்பத்தை கொண்ட பரோங் 5000 ப்ளாட்ஃபாரத்தை மார்வல் ஆர் மாடல் பயன்படுத்தி வருகிறது. மார்வல் ஆர் மாடலின் முக்கிய அம்சங்கள் மற்றும் இயக்கத்திற்கான என்ஜின் அமைப்பு குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

சீனாவில் பிரபலமான எம்ஜி மார்வல் எக்ஸ்-ன் அட்டேட் வெர்சன் மார்வல் ஆர்-ன் தகவல்கள் வெளியீடு...

ஆனால் நமக்கு தெரிந்த வரை இந்த எலக்ட்ரிக் காரில் 500கிமீ-க்கும் அதிகமான ரேஞ்ச்சை வழங்கக்கூடிய என்இடிசி சைக்கிள் வழங்கப்படவுள்ளது. சீனாவில் அடுத்த சில மாதங்களில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படும் மார்வல் ஆர் எலக்ட்ரிக் மாடலின் விலை அங்கு 260,000 யுவான் ஆக நிர்ணயிக்கப்படவுள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.28 லட்சம் ஆகும்.

இந்திய சந்தையை பொறுத்தவரையில், இதன் வரிசையில் முன்னதாக வெளிவந்த மார்வல் எக்ஸ் மாடல் தான் விரைவில் அறிமுகமாகவுள்ளது. 2020 ஆட்டோ எக்ஸ்போபில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த எலக்ட்ரிக் மாடலில் 52.5 kWh ஆற்றல் கொண்ட பேட்டரி தொகுப்பு ட்யூல் மோட்டார்ஸ் அமைப்புடன் வழங்கப்படவுள்ளது.

Most Read Articles
English summary
MG Marvel X SUV successor revealed – Gets New Gen 5G Internet Tech (MG Marvel X)
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X