Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 12 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
தன்னலமற்ற சேவை.. புற்றுநோயாளிகளுக்காக வாழ்நாளையே அர்பணித்தவர் மருத்துவர் சாந்தா
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் கார்களால் எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு நடந்த நல்ல காரியம்! என்னனு தெரியுமா?
ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் கார்களின் உதவியால் எம்ஜி நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் கடந்த ஜூலை மாதம், 2,105 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் வெறும் 1,508 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. அதாவது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டு ஜூலை மாதம் 597 கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன.

சதவீத அடிப்படையில் பார்த்தால், இது 39.59 சதவீத வளர்ச்சியாகும். 2019ம் ஆண்டு ஜூலைதான் இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் முழு மாதம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தைக்கான எம்ஜி நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ஹெக்டர், கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போதைய நிலையில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், ஹெக்டர், இஸட்எஸ் மின்சார கார், ஹெக்டர் ப்ளஸ் என மொத்தம் 3 தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இவை மூன்றுமே எஸ்யூவி ரக கார்கள் ஆகும். இந்த 3 கார்களில், ஹெக்டர் மற்றும் சமீபத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஹெக்டர் ப்ளஸ் ஆகிய 2 கார்கள்தான் எம்ஜி நிறுவனத்திற்கு கணிசமான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்துள்ளன.

மறுபக்கம் எம்ஜி இஸட்எஸ் மின்சார காரின் விற்பனை குறைவாகதான் உள்ளது. மின்சார கார் என்பதுதான் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் பெரிய அளவில் மேம்படவில்லை. எனவே மின்சார கார்களுக்கான வரவேற்பு குறைவாக உள்ளது.

இந்தியாவில் மிகவும் அதிகமாக முன்பதிவு செய்யப்பட்ட மின்சார கார் என்ற பெருமையை எம்ஜி இஸட்எஸ் கார் பெற்றுள்ள சூழலிலும், அதன் விற்பனை கொஞ்சம் குறைவாக இருக்கிறது. எம்ஜி இஸட்எஸ் மின்சார காருக்கான முன்பதிவு எண்ணிக்கை வெறும் 27 நாட்களில், 2,800-ஐ கடந்தது. ஆனால் கார் உற்பத்தியில் இருக்கும் தடைகள் காரணமாக டெலிவரி மெதுவாக உள்ளது.

ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் விஷயத்திலும் நிலைமை அப்படித்தான் உள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள நிறைய வாடிக்கையாளர்களுக்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் இன்னும் கார்களை டெலிவரி கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

எம்ஜி நிறுவனம் இந்தியாவிற்கு புது வரவாகும். முதலில் ஹெக்டர் காரையும், அதன்பின் இஸட்எஸ் மின்சார காரையும் அந்த நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மூன்றாவதாக ஹெக்டர் ப்ளஸ் காரை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதற்கு அடுத்தபடியாக க்ளோஸ்டர் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய எம்ஜி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இதுவும் எஸ்யூவி ரக கார்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கான வரவேற்பு மிகவும் அதிகமாக இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதனை நன்றாக புரிந்து கொண்டுள்ள எம்ஜி மோட்டார் நிறுவனம், எஸ்யூவி சந்தையில் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு முயற்சி செய்து வருகிறது.