இனி புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்வதும், சர்வீஸ் செய்வதும் ரொம்ப ஈஸி!

புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்வதற்கும், சர்வீஸ் செய்வதற்கும் மிக எளிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இனி புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்வதும், சர்வீஸ் செய்வதும் ரொம்ப ஈஸி!

கொரோனா பிரச்னையால் எழுந்துள்ள சூழல் ஆட்டோமொபைல் துறையினருக்கு பெரும் பாதிப்புகளை கொடுத்து வருகிறது. இந்த சூழலில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் கார் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

இனி புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்வதும், சர்வீஸ் செய்வதும் ரொம்ப ஈஸி!

அந்த வகையில், எம்ஜி கார் நிறுவனம் வாடிக்கையாளர்கள் எளிமையாக கார் வாங்குவதற்கு ஏதுவாக புதிய மொபைல்போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. My MG App என்ற பெயரில் இந்த புதிய மொபைல் செயலி குறிப்பிடப்படுகிறது.

இனி புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்வதும், சர்வீஸ் செய்வதும் ரொம்ப ஈஸி!

இந்த மொபைல் செயலி மூலமாக புதிய எம்ஜி கார்களை எளிதாக புக்கிங் செய்ய முடியும். அருகாமையிலுள்ள டீலரை தேர்வு செய்து முன்பணம் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். மேலும், அருகிலுள்ள டீலருக்கு வழிகாட்டும் வரைபட வசதியும் இதில் உண்டு.

இனி புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்வதும், சர்வீஸ் செய்வதும் ரொம்ப ஈஸி!

மேலும், இந்த மொபைல் செயலியில் இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு ஒரு சிறப்பு வசதியும் உள்ளது. அதாவது, உற்பத்திப் பிரிவில் இருந்து டெலிவிரி கொடுப்பது வரை வாடிக்கையாளர்கள் தங்களது கார் எந்த நிலையில் உள்ளது என்பதையும், டெலிவிரி எப்போது கிடைக்கும் என்பது குறித்தும் இந்த மொபைல் போன் செயலி மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.

இனி புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்வதும், சர்வீஸ் செய்வதும் ரொம்ப ஈஸி!

இந்த மொபைல் செயலியில் புதிய எம்ஜி காரை முன்பதிவு செய்வது முதல் டெலிவிரி எடுப்பது வரை எளிதாக செய்ய முடியும். அத்துடன், காருக்கான வாரண்டி திட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திட்டங்கள், காரின் சிறப்பம்சங்கள் மற்றும் குறிப்புகளையும் பெற முடியும்.

இனி புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்வதும், சர்வீஸ் செய்வதும் ரொம்ப ஈஸி!

புதிய எம்ஜி கார் வாங்குவதோடு மட்டுமின்றி, அதன் பிறகு காரை சர்வீஸ் செய்வதற்கும் மிக எளிதான நடைமுறைகளை இந்த மொபைல் அப்ளிகேஷன் வழங்கும். கார் சர்வீஸ் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு, சர்வீஸ் ரிமைன்டர் வசதி, சர்வீஸ் சூப்பர்வைசருடன் எளிதாக தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பையும் இந்த செயலி வழங்கும்.

இனி புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்வதும், சர்வீஸ் செய்வதும் ரொம்ப ஈஸி!

சர்வீஸ் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்துவதற்கும், ரசீதுகளை பெற வழிவகுக்கிறது. அவசர சமயத்தில் வாடிக்கையாளர் சேவை மையத்தை இந்த மொபைல் செயலியை பயன்படுத்தி அழைத்து உதவி பெற முடியும்.

இனி புதிய எம்ஜி கார்களை புக்கிங் செய்வதும், சர்வீஸ் செய்வதும் ரொம்ப ஈஸி!

இந்த மொபைல் செயலியில் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார், ஓட்டுனர் உரிமம், மாசு உமிழ்வு தரச் சான்று, பான் கார்டு உள்ளிட்டவற்றின் டிஜிட்டல் நகல்களை வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. இதுவும் மிக முக்கிய வசதியாக இருக்கும்.

Most Read Articles
English summary
MG Motor India has launched a new mobile application called the 'My MG App' in the country. The new application helps first time MG buyers to book their vehicles, while existing owners can get their cars serviced.
Story first published: Tuesday, May 19, 2020, 14:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X