இப்படியொரு மரியாதையை யாரும் செய்திருக்க மாட்டாங்க... உயிரை பணயம் வைத்து உழைப்பவர்களை பாராட்டிய எம்ஜி

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உயிரை பணயம் வைத்து உழைத்துக் கொண்டிருக்கும் போராளிகளுக்கு மரியாதைச் செலுத்தும் விதமாக எம்ஜி நிறுவனம் தரமான செயலை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இப்படியொரு மரியாதையை யாரும் வழங்கியிருக்க மாட்டாங்க... உயிரை பணயம் வைத்து உழைப்பவர்களை பாராட்டிய எம்ஜி!

கொரோனா வைரஸ் என்னும் அலை இன்னும் ஓயாமல் பல நாடுகளில் பேயலையை வீசிய வண்ணமே இருக்கின்றது. ஒட்டுமொத்த உயிரினத்திற்கே பேராபத்தை விளைவிக்கும் வகையில் பரவி வரும் இந்த வைரசால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளாம். குறிப்பாக, உயிரிழப்புகள் பலரை அளப்பறியா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுமட்டுமின்றி, உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் இந்த வைரஸ் பதம் பார்த்துள்ளது.

இப்படியொரு மரியாதையை யாரும் வழங்கியிருக்க மாட்டாங்க... உயிரை பணயம் வைத்து உழைப்பவர்களை பாராட்டிய எம்ஜி!

இத்தகைய ஆபத்தான வைரசுக்கு எதிராக உலக நாடுகள் பல, தற்போது வரையிலும் போர் தொடுத்த வண்ணமே இருக்கின்றன. இந்த போரில் படை வீரர்களுக்கு மாற்றாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்களே முன்னின்று போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியொரு மரியாதையை யாரும் வழங்கியிருக்க மாட்டாங்க... உயிரை பணயம் வைத்து உழைப்பவர்களை பாராட்டிய எம்ஜி!

அவர்களில் பலர், குடும்பம் மற்றும் குழந்தைகளை தனித்துவிட்டு பொதுச்சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, இவர்களுக்கு மரியாதைச் செலுத்துகின்ற வகையிலான நிகழ்வுகள் அவ்வப்போது நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இப்படியொரு மரியாதையை யாரும் வழங்கியிருக்க மாட்டாங்க... உயிரை பணயம் வைத்து உழைப்பவர்களை பாராட்டிய எம்ஜி!

அந்தவகையில், நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக மாறியிருக்கின்ற எம்ஜி நிறுவனம், புத்தம் புதிய குறுகிய வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த பாடலில், கொரோனா வைரசுக்கு எதிராக முன்னின்று போராடிக்க கொண்டிருக்கும் போராளிகளுக்கு மரியாதைச் செலுத்தும் விதமான வரிகள் அமைந்திருக்கின்றன.

இப்படியொரு மரியாதையை யாரும் வழங்கியிருக்க மாட்டாங்க... உயிரை பணயம் வைத்து உழைப்பவர்களை பாராட்டிய எம்ஜி!

குறிப்பாக, அவர்கள் கண்டு வரும் இன்னல்கள் மற்றும் கொரோனா வைரசுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போராட்டங்கள் உள்ளிட்டவற்றை விவரிக்கும் வகையில் அந்த வரிகள் இருக்கின்றன.

அத்துடன், கொரோனா போராளிகளின் விலை மதிப்பில்லா இழப்புகளை கவுரவிக்கும் வகையிலும் அந்த வரிகள் இடம் பெற்றிருக்கின்றன.

இப்படியொரு மரியாதையை யாரும் வழங்கியிருக்க மாட்டாங்க... உயிரை பணயம் வைத்து உழைப்பவர்களை பாராட்டிய எம்ஜி!

"எம்ஜி மோட்டார் கோவிட் போராளிகளுக்கு உறுதுணையாக இருக்கும்" என்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் இப்பாடல், இந்தி மொழியில் பாடப்பட்டுள்ளது. என்னங்கையா, இதிலும் இந்தியா... என நினைக்க வேண்டாம். இப்பாடல் கொரோனா போராளிகளை கவுரவிக்கும் நோக்கிலேயே எடுக்கப்பட்டிருக்கின்றது.

இப்படியொரு மரியாதையை யாரும் வழங்கியிருக்க மாட்டாங்க... உயிரை பணயம் வைத்து உழைப்பவர்களை பாராட்டிய எம்ஜி!

"ராஃப்டர் வாஹ ஹோகி" என்ற பெயரில் அப்பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த குறுகிய காணொளி பாடலை பிரபல இந்தி பாடலாசிரியர் ரஹத் இந்தோரி மற்றும் டெல்லியை தலைமையமாகக் கொண்டு இயங்கும் சுஃபி ராக் பேண்ட் குழு ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கின்றனர்.

இப்படியொரு மரியாதையை யாரும் வழங்கியிருக்க மாட்டாங்க... உயிரை பணயம் வைத்து உழைப்பவர்களை பாராட்டிய எம்ஜி!

இப்பாடலில் வரும் காட்சியில் காவல்துறை மற்றும் ராணுவத்தினர்களுக்கு எம்மாதிரியான சேவையை எம்ஜி செய்து வருகின்றது என்பதை விளக்கும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றது. இத்துடன், பொதுமக்களுக்கு வழங்கி வரும் சேவையைப் பற்றியும் அது அதில் காட்சிப்படுத்தியுள்ளது.

இப்படியொரு மரியாதையை யாரும் வழங்கியிருக்க மாட்டாங்க... உயிரை பணயம் வைத்து உழைப்பவர்களை பாராட்டிய எம்ஜி!

இந்த பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து, எம்ஜி நிறுவனம் ஓர் சிறப்பு தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா பிரச்னை ஓய்ந்த பின்னர் பிக் எஃப்எம் ரேடியோ சேனலுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

இப்படியொரு மரியாதையை யாரும் வழங்கியிருக்க மாட்டாங்க... உயிரை பணயம் வைத்து உழைப்பவர்களை பாராட்டிய எம்ஜி!

இந்தியாவில் கால் தடம் பதித்து எம்ஜி நிறுவனம் ஒரு சில மாதங்களே ஆகின்றன. அதாவது, கடந்த ஆண்டின் இறுதியில்தான் ஹெக்டர் என்னும் எஸ்யூவி ரக காரை அறிமுகம் செய்து இந்நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக களமிறங்கியது.

ஆனால், இந்த காரின் விற்பனையோ பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுத்து வருகின்றன. இந்த வரவேற்பால் இந்தியாவில் அதிகம் கார்களை விற்பனைச் செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக எம்ஜி மாறியது. இந்நிலையிலேயே கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு அனைத்து வாகனங்களின் விற்பனைக்கும் முற்றிப் புள்ளி வைத்தது.

இப்படியொரு மரியாதையை யாரும் வழங்கியிருக்க மாட்டாங்க... உயிரை பணயம் வைத்து உழைப்பவர்களை பாராட்டிய எம்ஜி!

இந்த நிலையிலும், எம்ஜி நிறுவனம் இந்தியாவுடன் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தைத் தொடுக்கின்ற வகையிலான உதவிகளைச் செய்து வருகின்றது. அதாவது, காவலர்களுக்கு பாதுகாப்பு உதவிகளை வழங்குதல் மற்றும் இலவச மருத்துவ கேம்ப்களை நடத்துவது உள்ளிட்ட சேவைகளை அது இந்தியாவில் செய்து வருகின்றது. இதைத்தொடர்ந்து, கொரோனா போராளிகளுக்கு மரியாதைச் செலுத்து விதமாக இப்பாடலை வெளியிட்டுள்ளது.

Most Read Articles
English summary
MG Motor Salute India Covid Warriors In New Song Video Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X