எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது!

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் டீசல் எஞ்சின் இரண்டு விதமான செயல்திறன் கொண்ட மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி நேற்று முன்தினம் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. மிகவும் பிரம்மாண்டமான இந்த புதிய எஸ்யூவி டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டை குறிவைத்து நிலைநிறுத்தப்பட உள்ளது.

எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது!

டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் மார்க்கெட்டை உடைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இதனால், க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் எக்கச்சக்கமான நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொடுத்து வாடிக்கையாளர்களை ஈர்க்க முற்பட்டு வருகிறது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது!

இந்த புத்தம் புதிய எஸ்யூவி அடுத்த மாதம் விலை அறிவிக்கப்பட்டு முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் முன்பணத்துடன் இந்த எஸ்யூவியை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் வழங்கப்பட உள்ளது தெரிந்ததே. இந்த எஞ்சின் இரண்டு விதமான செயல்திறனை வெளிப்படுத்தும் மாடல்களில் வர இருக்கிறது.

எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது!

குறைவான விலை வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் இதன் 2.0 லிட்டர் சிங்கிள் டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரையும், 375 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 2 வீல் டிரைவ் சிஸ்டத்தில் கிடைக்கும்.

எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது!

இதன் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 215 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலானது 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வர இருக்கிறது. இரண்டு மாடல்களிலுமே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட உள்ளது.

எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது!

மேலும், சிங்கிள் டர்போ டீசல் எஞ்சின் மாடலானது ஷார்ப் 7 சீட்டர் வேரியண்ட், ஷார்ப் 6 சீட்டர் வேரியண்ட், சாவி 6 சீட்டர் வேரியண்ட்டிலும் கிடைக்கும். ட்வின் டர்போ டீசல் எஞ்சின் மாடலானது சூப்பர் 7 சீட்டர் மற்றும் ஸ்மார்ட் 6 சீட்டர் வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது!

புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் ஆட்டோனாமஸ் லெவல் 1 தானியங்கி தொழில்நுட்பத்துடன் வர இருக்கிறது. ரூ.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The MG Gloster will be offered with a 2.0-liter diesel engine in two states of tune.
Story first published: Saturday, September 26, 2020, 10:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X