இந்தியா மட்டுமில்ல, பாகிஸ்தானிலும் எம்ஜி கார்களுக்கு செம ரெஸ்பான்ஸ்!! முன்பதிவுகள் குவிக்கிறதாம்!

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் எம்ஜி மோட்டார் நிறுவனம் சந்தையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியா மட்டுமில்ல, பாகிஸ்தானிலும் எம்ஜி கார்களுக்கு செம ரெஸ்பான்ஸ்!! முன்பதிவுகள் குவிக்கிறதாம்!

ஐரோப்பா, சீனா, இந்தியா போன்ற பெரிய சந்தை இல்லை என்றாலும், பாகிஸ்தானில் சந்தையை விரிவுப்படுத்த எம்ஜி மோட்டார் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் அந்நாட்டில் எம்ஜி நிறுவனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தியா மட்டுமில்ல, பாகிஸ்தானிலும் எம்ஜி கார்களுக்கு செம ரெஸ்பான்ஸ்!! முன்பதிவுகள் குவிக்கிறதாம்!

அடுத்த டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தானில் அறிமுகமாகவுள்ள எம்ஜி-எச்எஸ் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் 10,000-ஐ கடந்து சென்று கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானை சேர்ந்த முன்னணி செய்திதளம் ஒன்றின் மூலமாக கிடைத்துள்ள தகவல்களின்படி, சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள வேறு சில எஸ்யூவி கார்களை தயாரிப்பதற்காக பாகிஸ்தானில் எம்ஜி மோட்டார் தொழிற்சாலையை உருவாக்கவுள்ளது.

இந்தியா மட்டுமில்ல, பாகிஸ்தானிலும் எம்ஜி கார்களுக்கு செம ரெஸ்பான்ஸ்!! முன்பதிவுகள் குவிக்கிறதாம்!

இந்த எஸ்யூவிகளில் எம்ஜி-எச்எஸ், எம்ஜி-இசட்எஸ் 1.5 மற்றும் எம்ஜி இசட்எஸ் இவி உள்ளிட்ட கார்கள் அடங்குகின்றன. "பிரிட்டிஷ் கார்களுக்கு தேவை அதிகமாக உள்ளது. இதனால் அவர்களும் (எம்ஜி மோட்டார்) உலகளாவிய தயாரிப்புகளை பாகிஸ்தான் வரையில் கொண்டுவர விரும்புகின்றனர்" என பாகிஸ்தான் சந்தைக்காக எம்ஜி நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ள அந்நாட்டின் முக்கிய வர்த்தக புள்ளி ஜவாத் அப்ரிடி கூறியுள்ளார்.

இந்தியா மட்டுமில்ல, பாகிஸ்தானிலும் எம்ஜி கார்களுக்கு செம ரெஸ்பான்ஸ்!! முன்பதிவுகள் குவிக்கிறதாம்!

மேலும், எம்ஜியின் திட்டங்கள் பாகிஸ்தானின் ஆட்டோ சந்தையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். அவர்கள் ஸ்போர்டி எஸ்யூவியில் வழங்கும் உயர்த்தரத்திலான தொழிற்நுட்பங்கள் பாகிஸ்தானியர்களின் போக்குவரத்தை மாற்றும் எனவும் ஜவாத் அப்ரிடி கூரினார்.

இந்தியா மட்டுமில்ல, பாகிஸ்தானிலும் எம்ஜி கார்களுக்கு செம ரெஸ்பான்ஸ்!! முன்பதிவுகள் குவிக்கிறதாம்!

இவரது கருத்தின் மூலமாக 2021ஆம் ஆண்டிற்காக செடான்கள் மற்றும் ஹேட்ச்பேக்குகளை பாகிஸ்தானிற்கு கொண்டுவர எம்ஜி மோட்டார் திட்டமிட்டு வருவதும் உறுதியாகியுள்ளது. எம்ஜி போன்ற பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல் ஜப்பான் மற்றும் தென் கொரிய தயாரிப்பு நிறுவனங்களது கார்களும் பாகிஸ்தானில் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன.

இந்தியா மட்டுமில்ல, பாகிஸ்தானிலும் எம்ஜி கார்களுக்கு செம ரெஸ்பான்ஸ்!! முன்பதிவுகள் குவிக்கிறதாம்!

எம்ஜி-இசட்எஸ் எஸ்யூவி காரின் விலை பாகிஸ்தானில் 55 லட்ச பாகிஸ்தான் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.25 லட்சமாகும். இந்த விலையினால் இந்த எம்ஜி காருக்கு அங்கு விற்பனையில் உள்ள கியா ஸ்போர்டேஜ் மற்றும் ஹூண்டாய் டக்ஸன் கார்கள் போட்டியாக விளங்கும்.

Most Read Articles

English summary
MG Motors looks at creating in roads in Pakistan, gets 10,000 orders for MG-HS
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X