டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...

இந்தியாவின் பிரீமியம் எஸ்யூவி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில், டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவரை, புதுவரவான எம்ஜி க்ளோஸ்ட்டர் நெருங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...

இந்தியாவின் பிரீமியம் எஸ்யூவி செக்மெண்ட்டில் டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் ஆகிய இரண்டு கார்கள் மட்டும்தான் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தன. ஆனால் இந்த 2 எஸ்யூவிகளுக்கும் போட்டியாக, கடந்த அக்டோபர் 8ம் தேதி எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...

விற்பனைக்கு வந்த 2வது மாதத்திலேயே பிரீமியம் எஸ்யூவி செக்மெண்ட்டில் எம்ஜி க்ளோஸ்ட்டர் விறுவிறுவென முன்னுக்கு வந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் எம்ஜி நிறுவனம் 600க்கும் மேற்பட்ட க்ளோஸ்ட்டர் கார்களை விற்பனை செய்துள்ளது. துல்லியமாக சொல்வதென்றால், கடந்த நவம்பர் மாதம் 627 எம்ஜி க்ளோஸ்ட்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...

இதன் மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் பிரீமியம் எஸ்யூவி கார்களின் பட்டியலில் எம்ஜி க்ளோஸ்ட்டர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இத்தனைக்கும் நவம்பர்தான், எம்ஜி க்ளோஸ்ட்டருக்கு விற்பனையில் முழுமையான முதல் மாதம். இந்த பட்டியலில் முதல் இடத்தை டொயோட்டா பார்ச்சூனரும், இரண்டாவது இடத்தை ஃபோர்டு எண்டேவரும் பிடித்துள்ளன.

டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...

இந்த இரண்டு கார்களுக்கும், எம்ஜி க்ளோஸ்ட்டருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பதும் குறிப்பிட்டாக வேண்டிய விஷயம். ஏனெனில் கடந்த நவம்பர் மாதம் டொயோட்டா நிறுவனம் வெறும் 656 பார்ச்சூனர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதை விட எம்ஜி க்ளோஸ்ட்டர் வெறும் 29 யூனிட்கள் மட்டுமே குறைவாக விற்பனையாகியுள்ளது.

டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...

அதே சமயம் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது டொயோட்டா பார்ச்சூனர் விற்பனையில் 38 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே பிடதியில் அமைந்துள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பார்ச்சூனரின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...

இதற்கிடையே ஃபோர்டு நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 647 எண்டேவர் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்த செக்மெண்ட்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியலில் ஃபோர்டு எண்டேவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் எம்ஜி க்ளோஸ்ட்டருக்கும், ஃபோர்டு எண்டேவருக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 20 யூனிட்கள் மட்டும்தான்.

டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...

அத்துடன் டொயோட்டா பார்ச்சூனரை போல், ஃபோர்டு எண்டேவரும் விற்பனையில் வீழ்ச்சியை கண்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஃபோர்டு நிறுவனம் 724 எண்டேவர் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் 647 எண்டேவர் கார்களை மட்டுமே ஃபோர்டு நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்துள்ளது. இது 11 சதவீத வீழ்ச்சியாகும்.

டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...

டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் கார்களின் விற்பனை வீழ்ச்சியடைந்திருப்பதற்கு எம்ஜி க்ளோஸ்ட்டரின் வருகையும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனை உணர்ந்து கொண்டுள்ள டொயோட்டா நிறுவனம் பார்ச்சூனரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த புதிய மாடலில் டிசைன் மாற்றங்களுடன், ஒரு சில கூடுதல் வசதிகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
MG Sold 627 Units Of Gloster Premium SUV In November 2020 - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X