Just In
- 32 min ago
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...
- 1 hr ago
தேசத்திற்கே பெருமை... உற்பத்தியில் '100 மில்லியன்' சாதனை படைத்த ஹீரோ... 6 ஸ்பெஷல் எடிசன் மாடல்களும் அறிமுகம்!
- 1 hr ago
ஆந்திராவில் பயன்பாட்டிற்கு வந்தது வீடி தேடி செல்லும் ரேஷன் கடைகள்... நாட்டையே மிரள வைத்த ஜெகன் மோகன் ரெட்டி!!
- 1 hr ago
இந்த விதிமீறலை மட்டும் செஞ்சிடாதீங்க! ஓட்டுநர் உரிமத்தை மறக்க நேரிடும்! எச்சரிக்கும் குறிப்பிட்ட நகர போலீஸார்!
Don't Miss!
- Movies
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
- News
நடராஜனை வரவேற்க அமைத்த மேடை, பதாகைகள் திடீர் அகற்றம்.. கடும் கெடுபிடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
- Sports
சமாதிக்கு சென்று.. அப்பாவிற்காக கண்ணீர் விட்ட முகமது சிராஜ்.. உணர்ச்சிகரமான போட்டோ.. வைரல்!
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Finance
முதல் நாளே அசத்தும் ஜோ பிடன்.. விசா, குடியேற்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ய உத்தரவு..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...
இந்தியாவின் பிரீமியம் எஸ்யூவி செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில், டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவரை, புதுவரவான எம்ஜி க்ளோஸ்ட்டர் நெருங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் பிரீமியம் எஸ்யூவி செக்மெண்ட்டில் டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் ஆகிய இரண்டு கார்கள் மட்டும்தான் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தன. ஆனால் இந்த 2 எஸ்யூவிகளுக்கும் போட்டியாக, கடந்த அக்டோபர் 8ம் தேதி எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

விற்பனைக்கு வந்த 2வது மாதத்திலேயே பிரீமியம் எஸ்யூவி செக்மெண்ட்டில் எம்ஜி க்ளோஸ்ட்டர் விறுவிறுவென முன்னுக்கு வந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் எம்ஜி நிறுவனம் 600க்கும் மேற்பட்ட க்ளோஸ்ட்டர் கார்களை விற்பனை செய்துள்ளது. துல்லியமாக சொல்வதென்றால், கடந்த நவம்பர் மாதம் 627 எம்ஜி க்ளோஸ்ட்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் பிரீமியம் எஸ்யூவி கார்களின் பட்டியலில் எம்ஜி க்ளோஸ்ட்டர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இத்தனைக்கும் நவம்பர்தான், எம்ஜி க்ளோஸ்ட்டருக்கு விற்பனையில் முழுமையான முதல் மாதம். இந்த பட்டியலில் முதல் இடத்தை டொயோட்டா பார்ச்சூனரும், இரண்டாவது இடத்தை ஃபோர்டு எண்டேவரும் பிடித்துள்ளன.

இந்த இரண்டு கார்களுக்கும், எம்ஜி க்ளோஸ்ட்டருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பதும் குறிப்பிட்டாக வேண்டிய விஷயம். ஏனெனில் கடந்த நவம்பர் மாதம் டொயோட்டா நிறுவனம் வெறும் 656 பார்ச்சூனர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதை விட எம்ஜி க்ளோஸ்ட்டர் வெறும் 29 யூனிட்கள் மட்டுமே குறைவாக விற்பனையாகியுள்ளது.

அதே சமயம் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது டொயோட்டா பார்ச்சூனர் விற்பனையில் 38 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே பிடதியில் அமைந்துள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பார்ச்சூனரின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஃபோர்டு நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 647 எண்டேவர் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்த செக்மெண்ட்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியலில் ஃபோர்டு எண்டேவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் எம்ஜி க்ளோஸ்ட்டருக்கும், ஃபோர்டு எண்டேவருக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 20 யூனிட்கள் மட்டும்தான்.

அத்துடன் டொயோட்டா பார்ச்சூனரை போல், ஃபோர்டு எண்டேவரும் விற்பனையில் வீழ்ச்சியை கண்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஃபோர்டு நிறுவனம் 724 எண்டேவர் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் 647 எண்டேவர் கார்களை மட்டுமே ஃபோர்டு நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்துள்ளது. இது 11 சதவீத வீழ்ச்சியாகும்.

டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் கார்களின் விற்பனை வீழ்ச்சியடைந்திருப்பதற்கு எம்ஜி க்ளோஸ்ட்டரின் வருகையும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனை உணர்ந்து கொண்டுள்ள டொயோட்டா நிறுவனம் பார்ச்சூனரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த புதிய மாடலில் டிசைன் மாற்றங்களுடன், ஒரு சில கூடுதல் வசதிகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.