5ஜி தொழிற்நுட்பத்தில் எம்ஜி விஷன்-ஐ கான்செப்ட் எம்பிவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

சீனாவை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் விஷன்-ஐ என்ற கான்செப்ட் மாடலை டெல்லியில் நடைபெற்றுவரும் 2020ஆம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. எம்ஜி நிறுவனத்தின் இந்த புதிய கான்செப்ட் வாகனத்தை பற்றி இனி விரிவாக பார்ப்போம்.

5ஜி தொழிற்நுட்பத்தில் எம்ஜி விஷன்-ஐ கான்செப்ட் எம்பிவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள எம்ஜி விஷன்-ஐ கான்செப்ட் மாடலை இந்நிறுவனம் இதற்கு முன்பாக கடந்த ஆண்டு சீனா ஷாங்காய் நகரத்தில் நடைபெற்ற ஆட்டோ கண்காட்சியிலும் வாடிக்கையாளர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

5ஜி தொழிற்நுட்பத்தில் எம்ஜி விஷன்-ஐ கான்செப்ட் எம்பிவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

5ஜி ஸ்மார்ட் தொழிற்நுட்பத்தை பெற்ற உலகின் முதலாவது மாடலாக விளங்கும் இந்த கான்செப்ட் வாகனம், எம்பிவி மற்றும் எஸ்யூவி கார்களுக்கு உண்டான பெரிய அளவிலான உட்புறத்தை கொண்டுள்ளது. இதனால் இந்த கான்செப்ட் கார் தற்சமயம் எஸ்பிவி என அழைக்கப்பட்டு வருகிறது.

5ஜி தொழிற்நுட்பத்தில் எம்ஜி விஷன்-ஐ கான்செப்ட் எம்பிவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

மேலும் இந்த கான்செப்ட் மாடலை எம்ஜி நிறுவனம் ஸ்மார்ட்டான செயல்திறன் கொண்ட வாகனம் என்ற அடையாளத்துடன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கான்செப்ட் வாகனத்தில் தனது எதிர்கால தயாரிப்பு கார்களில் வழங்கவுள்ள டிசைன் தொழிற்நுட்பங்கள் மற்றும் இணையம் என அனைத்தையும் எம்ஜி நிறுவனம் வழங்கியுள்ளது.

5ஜி தொழிற்நுட்பத்தில் எம்ஜி விஷன்-ஐ கான்செப்ட் எம்பிவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

இதன் முன்புறத்தில் க்ரில்லிற்கு ஒளி கொடுக்கும் வகையில் சிறு சிறு எல்இடி விளக்குகள் க்ரில்லின் பார்ட்டரை சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் காற்றினால் காரின் வேகம் குறையாமல் இருப்பதற்காக தொழிற்நுட்ப ஆப்டிக்கலில் விளிம்புகள் போன்ற ஏரோ-டைனாமிக்ஸ் டிசைன் மற்றும் கிட்களை இந்த கான்செப்ட் மாடல் பெற்றுள்ளது.

5ஜி தொழிற்நுட்பத்தில் எம்ஜி விஷன்-ஐ கான்செப்ட் எம்பிவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

இதுமட்டுமின்றி மனிதரோ அல்லது விலங்கோ காரை நெருங்கி வந்தால் தன்னிச்சையாக ஒளிரக்கூடிய விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் இந்த எஸ்எம்பி மாடல், எளிமையான டிசைனில் டெயில்லைட்ஸை கொண்டுள்ளது.

5ஜி தொழிற்நுட்பத்தில் எம்ஜி விஷன்-ஐ கான்செப்ட் எம்பிவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

உட்புறத்தில் கவனித்தக்க வகையில், நோ-ஸ்க்ரீன் டிசைனில் கேபினை இந்த கான்செப்ட் மாடல் பெற்றுள்ளது. ட்ரைவ்கிற்காக இந்த காரில் கல்வி, ஓய்வு, ட்ரைவிங், ஸ்லீப்பிங் அல்லது மீட்டிங் என்ற ட்ரைவ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

5ஜி தொழிற்நுட்பத்தில் எம்ஜி விஷன்-ஐ கான்செப்ட் எம்பிவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

இதனுடன் தன்னிச்சையான ட்ரைவிங் தொழிற்நுட்பத்தையும் இந்த எம்பிவி வகை கான்செப்ட் மாடல் பெற்றுள்ளது. மேலும் இந்த காரில் அதிக எண்ணிக்கையில் வளையும் வகையிலான இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

5ஜி தொழிற்நுட்பத்தில் எம்ஜி விஷன்-ஐ கான்செப்ட் எம்பிவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

5ஜி தொழிற்நுட்பத்துடன் உள்ள இதன் கேபினில் எதிரெதிர் புறங்களில் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களின் கருத்தை பொருத்தும் இந்த கான்செப்ட் வாகனம் மாற்றங்களை சந்திக்கவுள்ளது.

5ஜி தொழிற்நுட்பத்தில் எம்ஜி விஷன்-ஐ கான்செப்ட் எம்பிவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்...

இந்த விஷன்-ஐ கான்செப்ட் மாடல் விற்பனை மாடலாக உருவாக்கப்பட்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் மிக குறைவு தான். இதில் வழங்கப்பட்டுள்ள 5ஜி தொழிற்நுட்பத்தை வேண்மென்றால் அடுத்த சில வருடங்களில் எம்ஜி நிறுவனத்தில் இருந்து சந்தைக்கு வரும் கார்களில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
MG Vision-i Concept Unveiled At Auto Expo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X