ஒட்டுமொத்த இந்தியாவையே கையகப்படுத்த எம்ஜி திட்டம்.. 3 புது முக வருகையால் விழி பிதுங்கும் நிறுவனங்கள்

எம்ஜி நிறுவனம் ஒட்டுமொத்த இந்திய சந்தையை ஆளுகைச் செய்கின்ற வகையில் புத்தம் புதிய மூன்று கார்களை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஒட்டுமொத்த இந்தியாவையே கையகப்படுத்த எம்ஜி திட்டம்... 3 புது முக வருகையால் விழி பிதுங்கும் நிறுவனங்கள்...

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்ஜி நிறுவனம், ஹெக்டர் என்ற எஸ்யூவி ரக காரைக் கொண்டு இந்தியாவில் அறிமுகமானது. இந்த காரின் தோற்றம், சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் அது மிக அதிக விலையைக் கொண்டதாக இருக்கும் என கூறப்பட்டு வந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விலையில் அந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஒட்டுமொத்த இந்தியாவையே கையகப்படுத்த எம்ஜி திட்டம்... 3 புது முக வருகையால் விழி பிதுங்கும் நிறுவனங்கள்...

ஆகையால், இந்தியர்கள் மத்தியில் நன் மதிப்பைப் பெற்ற கார்களில் ஒன்றாக ஹெக்டர் எஸ்யூவி மாறியுள்ளது. இந்த கார் பற்றி ஒரு சில முரண்பாடான தகவல்கள் பரவி வந்தாலும், மக்கள் பிடித்தமான கார்களில் ஒன்றாக அது இருந்து வருகின்றது.

அதற்கேற்ப எம்ஜி நிறுவனமும் ஒவ்வொரு முரண்பாட்டிற்கும் உடனடி தீர்வு கண்டு வருகின்றது.

ஒட்டுமொத்த இந்தியாவையே கையகப்படுத்த எம்ஜி திட்டம்... 3 புது முக வருகையால் விழி பிதுங்கும் நிறுவனங்கள்...

தொடர்ந்து, இந்தியர்கள் மத்தியில் பெற்ற நன் மதிப்பை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எம்ஜி செய்து வருகின்றது. அதுமட்டுமின்றி, தங்களுக்கும் கிடைத்திருக்கும் சந்தையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியிலும் அது ஈடுபட்டு வருகின்றது.

அந்தவகையில், அண்மையில் இந்திய மின்சார வாகன சந்தையிலும் கால் தடம் பதிக்கும் விதமாக அதன் இரண்டாவது மாடலாக இசட்எஸ் என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ஒட்டுமொத்த இந்தியாவையே கையகப்படுத்த எம்ஜி திட்டம்... 3 புது முக வருகையால் விழி பிதுங்கும் நிறுவனங்கள்...

எம்ஜி நிறுவனத்தின் இந்த மின்சார பாதுகாப்பு தரத்தில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு தகவலாக உள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவையே கையகப்படுத்த எம்ஜி திட்டம்... 3 புது முக வருகையால் விழி பிதுங்கும் நிறுவனங்கள்...

இதுபோன்ற இந்திய சந்தையை முற்றிலுமாக ஆளுகை செய்கின்ற வகையில் பல்வேறு பிரம்மிப்பை ஏற்படுத்தும் தயாரிப்புகளை எம்ஜி அறிமுகம் செய்து வருகின்றது.

ஒட்டுமொத்த இந்தியாவையே கையகப்படுத்த எம்ஜி திட்டம்... 3 புது முக வருகையால் விழி பிதுங்கும் நிறுவனங்கள்...

தொடர்ந்து, அதன் இந்தியச் சந்தையை விரிவாக்கம் செய்வதற்காக மேலும் மூன்று புதிய தயாரிப்புகளை நடப்பாண்டிலேயே அறிமுகம் செய்ய அது திட்டமிட்டிருக்கின்றது. ஏற்கனவே, ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா மின்சார காருக்கு போட்டியாக எம்ஜி இசட்எஸ் இவி களமிறக்கப்பட்டுள்ளநிலையில், இன்னும் பிரபல நிறுவனங்களின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளுக்கு கடுமையான டஃப் கொடுக்கின்ற வகையில் புதிய தயாரிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில், புதிதாக மிக விரைவில் களமிறங்கவுள்ள அந்த 3 தயாரிப்புகைப் பற்றிய சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஒட்டுமொத்த இந்தியாவையே கையகப்படுத்த எம்ஜி திட்டம்... 3 புது முக வருகையால் விழி பிதுங்கும் நிறுவனங்கள்...

எம்ஜி ஹெக்டர் பிளஸ்

எம்ஜி நிறுவனத்திற்கு இந்தியாவில் வெற்றி வாகைச் சூடிய மாடலாக ஹெக்டர் இருக்கின்றது. இந்த மாடல் வரிசையில் மற்றுமொரு புகழ்வாய்ந்த மாடலாக ஹெக்டர் பிளஸ் சர்வதேச சந்தைகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. அந்த மாடலைதான் எம்ஜி நிறுவனம் இந்தியாவிலும் களமிறக்க இருக்கின்றது.

நடந்து முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த முதல் முறையாக இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதுவே, இந்நிறுவனம் சார்பாக முதல் காராக அறிமுகம் செய்யப்பட்டது.

ஒட்டுமொத்த இந்தியாவையே கையகப்படுத்த எம்ஜி திட்டம்... 3 புது முக வருகையால் விழி பிதுங்கும் நிறுவனங்கள்...

இந்த காரும் 6 இருக்கைகள் வசதி கொண்ட காராக உள்ளது. அப்படியானால், ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் ஆகிய இரு கார்களுக்கு இடையே வித்தியாசமே இல்லையா..? என்று உங்களுக்கு தோன்றலாம். இருக்கு, குறிப்பாக ஹெடேல்ம்ப், எல்இடி டிஆர்எல் மின்விளக்கு, பம்பர் (முன் மற்றும் பின்) ஆகியவற்றின் வடிவமைப்பில் பல்வேறு வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

ஒட்டுமொத்த இந்தியாவையே கையகப்படுத்த எம்ஜி திட்டம்... 3 புது முக வருகையால் விழி பிதுங்கும் நிறுவனங்கள்...

தொடர்ந்து, இருக்கைகளில் உள்ள வித்தியாசமாக கேப்டன் இருக்கை, பழுப்பு நிற லெதர் உறை உள்ளிட்டவை இருக்கின்றன. அதேசமயம், வழக்கமான ஹெக்டரைக் காட்டிலும் சற்று கூடுதல் நீளம் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், ஹெக்டர் ப்ளஸ் மாடலில் கூடுதல் இட வசதி கிடைக்கும் என்று தெரிகின்றது.

ஆனால், எஞ்ஜின் போன்றவற்றில் எந்தவொரு மாற்றமும் இல்லை. ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் ஆகிய இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான எஞ்ஜின் தேர்வுகளே கிடைக்க இருக்கின்றது.

ஒட்டுமொத்த இந்தியாவையே கையகப்படுத்த எம்ஜி திட்டம்... 3 புது முக வருகையால் விழி பிதுங்கும் நிறுவனங்கள்...

எம்ஜி க்ளாஸ்டர்

இந்தியாவில் விற்பனையாகும் பல்வேறு நிறுவனத்தின் பிரபல பிராண்டுகளுக்கு எல்லாம் கடுமையான டஃப் கொடுக்கின்ற எம்ஜி க்ளாஸ்டர் நாட்டில் அறிமுகமாக இருக்கின்றது. இந்த கார் ஓர் முழு அளவிலான எஸ்யூவி காராகும். குறிப்பாக, டொயோட்டா பார்ச்சுனர், ஃபோர்டு என்டீயோவர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்ட கார்களுக்கு செம்ம காத்திருக்கு என்று இந்திய ஆட்டோத்துறை கணித்துள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவையே கையகப்படுத்த எம்ஜி திட்டம்... 3 புது முக வருகையால் விழி பிதுங்கும் நிறுவனங்கள்...

இந்தியாவில் விரைவில் களமிறங்க இருக்கும் இந்த கார் ஏற்கனவே சர்வதேச சந்தையில் மேக்ஸஸ் டி90 என்ற பெயரில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த எஸ்யூவி காருக்கு அங்கு நல்ல வரேவேற்பு நிலவுவதாக கூறப்படுகின்றது. இந்தியா மாடல் க்ளாஸ்டர் எஸ்யூவி 2.0 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் மற்றும் பெட்ரோல் எஞ்ஜின் ஆகிய இரு தேர்வுகளிலும் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

ஒட்டுமொத்த இந்தியாவையே கையகப்படுத்த எம்ஜி திட்டம்... 3 புது முக வருகையால் விழி பிதுங்கும் நிறுவனங்கள்...

எம்ஜி ஜி10

ஜி10 ஓர் லக்சூரி எம்பி மாடலாகும். இது இந்தியாவில் கியா கார்னிவர் மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி ஆகிய கார்களுக்கு கடுமையான டஃப் கொடுக்கும் வகையில் களமிறங்க இருக்கின்றது.

மேற்கூறிய மாடல்களைக் காட்டிலும் இந்த எம்பிவி-யில் அதிக சொகுசு வசதிகள் இடம்பெறவிருக்கின்றது. அதேசமயம், இதன் விலையும் அந்த மாடல்களைக் காட்டிலும் மிக குறைந்தளவிலேயே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த இந்தியாவையே கையகப்படுத்த எம்ஜி திட்டம்... 3 புது முக வருகையால் விழி பிதுங்கும் நிறுவனங்கள்...

இந்த எம்ஜி ஜி10 காரும் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. நல்ல வரவேற்பு கிடைக்கும் மாடல்களில் இதுவும் ஒன்று என்பதனால், இந்தியாவில் களமிறக்க எம்ஜி திட்டமிட்டிருக்கின்றது. இந்த எம்ஜி ஜி10 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் எஞ்ஜின் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒட்டுமொத்த இந்தியாவையே கையகப்படுத்த எம்ஜி திட்டம்... 3 புது முக வருகையால் விழி பிதுங்கும் நிறுவனங்கள்...

மேற்கூறிய, எம்ஜி நிறவனத்தின் பிரபல மாடல்களான ஹெக்டர் ப்ளஸ், க்ளாஸ்டர் மற்றும் ஜி10 ஆகிய அனைத்து கார்களுக்கும் சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த கார்களைதான் எம்ஜி விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. 2020ம் ஆண்டிற்குள்ளாகவே அவற்றின் அறிமுகம் அரங்கேறிவிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை முன்னிட்டே இம்மாதம் ஆரம்பத்தில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் அந்நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது.

Most Read Articles
English summary
MG Will Launch 3 New Models In This Year. Read In Tamil.
Story first published: Tuesday, February 25, 2020, 10:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X