எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரிலீஸ் தேதி வெளியானது

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரிலீஸ் தேதி வெளியானது

தனி நபர் பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்களுடன் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு நிகரான அம்ங்களுடன் எதிர்பார்க்கப்படும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பெரும் ஆவலை ஏற்படுத்தியது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரிலீஸ் தேதி வெளியானது

இந்த காருக்கு முன்பதிவு துவங்கி நடந்து வரும் நிலையில், நாளையுடன் முதல் கட்ட முன்பதிவு முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரிலீஸ் தேதி வெளியானது

அதன்படி, வரும் 27ந் தேதி புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் போன்றே, இந்த காரிலும் ஏராளமான பிரிமீயம் அம்சங்களுடன் வர இருக்கிறது.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரிலீஸ் தேதி வெளியானது

இந்த காரில் ஆட்டோமேட்டிக் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரிலீஸ் தேதி வெளியானது

கீ லெஸ் என்ட்ரி சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 17 அங்குல அலாய் வீல்கள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் சிஸ்டம், பிஎம் 2.5 ஃபில்டர், ஆட்டோமேட்டிக் வைப்பர் என வசதிகளுக்கு பஞ்சமில்லை.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரிலீஸ் தேதி வெளியானது

ஹெக்டர் எஸ்யூவி போலவே, இந்த காரிலும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேரடி இணைய வசதியை பெறும் வகையில் சிம் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கும். இதன்மூலமாக, பல்வேறு வசதிகளை ஸ்மார்ட்ஃபோன் மூலமாக கட்டுப்படுத்த முடியும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரிலீஸ் தேதி வெளியானது

புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அச்ஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா என பாதுகாப்பு அம்சங்களுக்கும் குறைவில்லை.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரிலீஸ் தேதி வெளியானது

புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 44.5kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. நிறுவனம் தரும் தகவலின்படி, பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரிலீஸ் தேதி வெளியானது

இந்த காரின் மின் மோட்டார் 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த காருக்கு 7.4kW வீட்டு சார்ஜர் மற்றும் 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர்கள் வழங்கப்படும். வீட்டு சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 6 முதல் 8 மணி நேரம் பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 50 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்ற முடியும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரிலீஸ் தேதி வெளியானது

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் டீலர்களில் ஃபாஸ்ட் சார்ஜர் வசதி செய்து கொடுக்கப்பட்டு இருக்கும். மேலும், நடமாடும் சார்ஜ் ஏற்றும் நிலையம் மூலமாக அவசரத்திற்கு சார்ஜ் ஏற்றுவதற்கான வாய்ப்பும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரிலீஸ் தேதி வெளியானது

புதிய எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரூ.22 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா காருக்கு நிகரான மாடலாக வர இருக்கிறது. முதலில் முன்பதிவு செய்யும் 1,000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிமுக சலுகை விலையில் இந்த கார் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Most Read Articles
English summary
MG is gearing up to launch its second car model for our market, the ZS electric car on January 27, 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X