ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் சிறப்பம்சங்கள் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி (MG ZS Electric SUV) இன்று (ஜனவரி 23) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள இரண்டாவது தயாரிப்பு இதுவாகும். எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ஹெக்டர் எஸ்யூவி.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம்தான் எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்தது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதைப்போன்றே எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் கடந்த டிசம்பர் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதன்பின் டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய ஐந்து நகரங்களில் கடந்த டிசம்பர் 21ம் தேதி, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு தொடங்கியது. இதன்பின் கடந்த ஜனவரி 17ம் தேதி முதற்கட்ட முன்பதிவு முடிவுக்கு வந்தது.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

சுமார் 27 நாட்கள் மட்டுமே நடைபெற்ற முதற்கட்ட முன்பதிவில் மட்டும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு 2,800க்கும் மேற்பட்ட புக்கிங்குகள் குவிந்துள்ளன. இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை இன்றுதான் அறிவிக்கப்பட்டது. விலை என்னவென்று தெரிவதற்கு முன்பாகவே ஒரு எலெக்ட்ரிக் காருக்கு இவ்வளவு பேர் புக்கிங் செய்திருப்பது வியப்புதான்.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், ஹூண்டாய் கோனா மற்றும் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி உள்ளிட்ட கார்களுடன் போட்டியிடும். இந்த இரண்டு கார்களுக்கும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வடிவில் பெரும் சவால் காத்திருக்கிறது.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், ஃபெர்ரிஸ் ஒயிட், கோபென்ஹஹான் ப்ளூ மற்றும் கரண்ட் ரெட் ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரில், 3-பேஸ் பெர்மனென்ட் மேக்னட் சிங்க்ரோனஸ் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 142.76 பிஎஸ் பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஈக்கோ ஆகிய 3 டிரைவிங் மோடுகள் உள்ளன. அதே சமயம் இந்த காரில், 44.5 kWh வாட்டர் கூல்டு, லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஏசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை 80 சதவீதம் வரையில் சார்ஜ் செய்ய 6-8 மணி நேரம் வரை ஆகும்.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

அதே சமயம் டிசி சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், இதன் பேட்டரியை வெறும் 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 340 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ரேஞ்ச் ஆக கருதப்படுகிறது.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்ட வெறும் 8.5 வினாடிகளை மட்டுமே எடுத்து கொள்ளும். அதே சமயம் இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கிலோ மீட்டர்கள். எக்ஸைட் (Excite) மற்றும் எக்ஸ்க்ளூசிவ் (Exclusive) என இரண்டு வேரியண்ட்களில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கிடைக்கும்.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முன்பகுதியில், க்ரோம் க்ரில் வழங்கப்பட்டுள்ளது. எல்இடி டிஆர்எல்கள் உடன் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் இந்த புதிய காருக்கு ஸ்போர்ட்டியான லுக்கை கொடுக்கின்றன. இது தவிர ரியர் ஸ்பாய்லர் மற்றும் 17 இன்ச் அலாய் வீல்களும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

மேலும் 20.32 செமீ டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 8.9 செமீ மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, மல்டிஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், க்ரூஸ் கண்ட்ரோல், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் பிஎம் 2.5 ஃபில்டர் ஆகிய வசதிகளையும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பெற்றுள்ளது. இதன் டிரைவர் இருக்கையை மின்னணு முறையில் 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. இதில், 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ஹில் டெசண்ட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு வசதிகள் முக்கியமானவை.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

இவ்வளவு சிறப்பம்சங்களுடன் கூடிய எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் எக்ஸைட் வேரியண்ட்டின் விலை 20.88 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் இதன் எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டின் விலை 23.58 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் கிடைக்கும்.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

அதாவது ஜனவரி 17ம் தேதி நள்ளிரவு வரை முதற்கட்ட முன்பதிவில் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் எக்ஸைட் வேரியண்ட் 19.88 லட்ச ரூபாய் என்ற விலையிலும், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட் 22.58 லட்ச ரூபாய் என்ற விலையிலும் கிடைக்கும். இவர்களுக்கு 1 லட்ச ரூபாய் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் தற்போது டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய ஐந்து நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்பின் படிப்படியாக நாடு முழுவதும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

விலை கொஞ்சம் அதிகமாக தெரிந்தாலும், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மிக்க மாடலாக எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் இருக்கும். அத்துடன் இதனை இயக்குவதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தகுந்த விஷயமாக இருக்கிறது. அதாவது எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இயக்குவதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 1 ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகும் என தெரிகிறது.

ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு! விலை எவ்வளவு தெரியுமா?

அதே சமயம் இதே அளவுடைய ஒரு பெட்ரோல் எஸ்யூவி காரை இயக்குவதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 7 ரூபாய் வரை செலவாகும் என கூறப்படுகிறது. இதனை வைத்து பார்த்தால், உங்கள் பணம் நன்கு சேமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
English summary
MG ZS Electric SUV Launched In India - Price, Features, Battery, Range, Variants, Colours. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X