சென்னையில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்குகிறது... முழு விபரம்!

சென்னையிலும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. முன்பதிவு விபரம் எப்போது துவங்கப்பட உள்ளது உள்ளிட்ட கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

விரைவில் சென்னையில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்... முன்பதிவு விபரம்!

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூர், ஆமதாபாத் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புக்கிங்கும் மிக கணிசமாக உள்ளது.

விரைவில் சென்னையில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்... முன்பதிவு விபரம்!

இரண்டாம் கட்டமாக சென்னை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியை இரண்டாம் கட்ட விற்பனை திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

விரைவில் சென்னையில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்... முன்பதிவு விபரம்!

இந்த சூழலில், தற்போது சென்னை, கொச்சி, சூரத், சண்டிகர், ஜெய்ப்பூர், புனே ஆகிய நகரங்களில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வரும் ஜூன் 1ந் தேதி முதல் சென்னை உள்ளிட்ட நகரங்களில் முன்பதிவு துவங்கப்பட உள்ளது.

விரைவில் சென்னையில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்... முன்பதிவு விபரம்!

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் டிசைன், செயல்திறன், ரேஞ்ச், விலை என அனைத்திலும் நிறைவை தரும் எலெக்ட்ரிக் கார் மாடலாக உள்ளது. இந்த காரில் 44.5 kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 143 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

MOST READ: புதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்

விரைவில் சென்னையில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்... முன்பதிவு விபரம்!

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் 0 - 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.5 வினாடிகளில் எடுத்துக் கொள்ளும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிமீ தூரம் வரை பயணிக்கும். சாதாரண சார்ஜர், ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

விரைவில் சென்னையில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்... முன்பதிவு விபரம்!

சாதாரண சார்ஜர் மூலமாக பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றுவதற்கு 8 மணிநேரம் பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 50 நிமிடங்களில் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் ஏற்ற முடியும்.

MOST READ:8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... நம்ப முடியாத குறைந்த விலையில் வாங்கிய தொழிலதிபர்

விரைவில் சென்னையில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்... முன்பதிவு விபரம்!

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். எக்ஸைட் வேரியண்ட் ரூ.20.88 லட்சம் விலையும், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட் ரூ.23.58 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

விரைவில் சென்னையில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்... முன்பதிவு விபரம்!

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், ஹூண்டாய் கோனா கார் ஒரே வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த காரில் விலை குறைவான வேரியண்ட் தேர்வும் வழங்கப்படுவது வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கிறது.

Most Read Articles

English summary
MG is all set to expand the ZS EV availability in six more cities including Chennai. The company has announced bookings for ES EV will be commenced in Chennai from 1st June 2020.
Story first published: Friday, May 29, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X