நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது... சென்னை வாசிகளுக்கு அடித்த யோகம்... என்ன தெரியுமா?

நீண்ட நாட்களாக சென்னை வாசிகள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

நீண்ட நாள் எதிர்பார்பு நிறைவேறியது... சென்னை வாசிகளுக்கு அடித்த யோகம்... என்ன தெரியுமா?

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு எதிர்பார்ப்பு நாளுக்கு விரிவடைந்துக் கொண்டே இருக்கின்றது. இதனாலயே உலக நாடுகள் பலவற்றில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை மையமாகக் கொண்டு அதன் புது முக வாகனங்களைக் களமிறக்கி வருகின்றன.

நீண்ட நாள் எதிர்பார்பு நிறைவேறியது... சென்னை வாசிகளுக்கு அடித்த யோகம்... என்ன தெரியுமா?

அந்தவகையில், அண்மையில் இந்தியாவில் கால் தடம் பதித்த எம்ஜி (மோரிஸ் கராஜ்) நிறுவனம், நாட்டிற்கான இரண்டாம் மாடலாக அதன் இசட்எஸ் என்கிற புதுமுக மின்சார காரை களமிறக்கியது.

இது, இந்தியாவிலேயே உற்பத்திச் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக களமிறக்கப்பட்டது.

நீண்ட நாள் எதிர்பார்பு நிறைவேறியது... சென்னை வாசிகளுக்கு அடித்த யோகம்... என்ன தெரியுமா?

இந்த நோக்கத்திற்கு ஏற்ப எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பை பெற்றது. ஆனால், இக்கார் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் விற்பனைக்குக் கொண்டுவரப்படவில்லை.

இந்த நிலை இந்தியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தும் வகையில் வெகுநாட்களாக இருந்து வந்தது. இதனை மாற்றும் முயற்சியில் எம்ஜி நிறுவனம் வெகு நாட்களாக ஈடுபட்டு வந்தது.

நீண்ட நாள் எதிர்பார்பு நிறைவேறியது... சென்னை வாசிகளுக்கு அடித்த யோகம்... என்ன தெரியுமா?

இதனடிப்படையில், கூடுதலாக ஆறு புதிய நகரங்களில் எம்ஜி இசட்எஸ் மின்சார கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த ஆறு நகரங்களில் தமிழகத்தின் தலை நகர் சென்னையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எம்ஜி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சென்னை மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நீண்ட நாட்களாக இசட்எஸ் மின்சார காரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த வாகன பிரியர்களின் ஆசை விரைவில் நிறைவேற இருக்கின்றது.

நீண்ட நாள் எதிர்பார்பு நிறைவேறியது... சென்னை வாசிகளுக்கு அடித்த யோகம்... என்ன தெரியுமா?

எம்ஜி நிறுவனம் தற்போது ஆரம்பகட்டமாக சென்னையின் இரு முக்கிய இடங்களில் மட்டுமே தற்போது ஷோரூம்களை நிறுவியிருக்கின்றது. அதில் ஒன்று நந்தனம், அண்ணாசாலையிலும் மற்றொன்று பெருங்குடி, பழைய மஹாபலிபுரத்திலும் அமைந்துள்ளது.

நீண்ட நாள் எதிர்பார்பு நிறைவேறியது... சென்னை வாசிகளுக்கு அடித்த யோகம்... என்ன தெரியுமா?

சென்னையில் மட்டுமின்றி நாட்டின் பிற முக்கிய நகரங்களான புனே, சூரத், கொச்சின், சண்டிகர், ஜெய்பூர் ஆகியவற்றிலும் எம்ஜி இசட்எஸ் மின்சார கார்களுக்கான புதிய ஷோரூம்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

இதில் சூரத், கொச்சின், சண்டிகர் ஆகிய நகரங்களைத் தவிர மற்ற நகரங்கள் அனைத்திலும் இரு ஷோரூம்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. எனவே, தற்போது புதிதாக 11 ஷோரூம்கள் வாயிலாக எம்ஜி இசட் எஸ் மின்சார கார்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது.

நீண்ட நாள் எதிர்பார்பு நிறைவேறியது... சென்னை வாசிகளுக்கு அடித்த யோகம்... என்ன தெரியுமா?

இந்த புதிய ஷோரூம்கள் அறிமுகத்தை முன்னிட்டு ஏற்கனவே அந்தந்த நகரங்களில் மின்சார கார்களுக்கான புக்கிங் தொடங்கப்பட்டு விட்டது. இது தற்போது வரை வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதாவது, ஜூன் 1ம் தேதியான நேற்றைய தினத்தில் இருந்து எம்ஜி இசட்எஸ் மின்சார காருக்கான புக்கிங் நடைபெற்று வருகின்றது. ஆன்-லைன் மற்றும் நேரடி விசிட் மூலம் புக்கிங் பெறப்பட்டு வருகின்றது.

நீண்ட நாள் எதிர்பார்பு நிறைவேறியது... சென்னை வாசிகளுக்கு அடித்த யோகம்... என்ன தெரியுமா?

ஆனால், தற்போது கொரோனா அச்சம் நாடு முழுவதும் காணப்படுவதால் வாடிக்கையாளர்களை ஆன்-லைன் புக்கிங்கிங்கில் ஈர்க்கும் நடவடிக்கையில் எம்ஜி நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

எம்ஜி இசட்எஸ் ஓர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காராகும். இதற்கு தற்போது இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. புக்கிங்கும் நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகின்றது.

நீண்ட நாள் எதிர்பார்பு நிறைவேறியது... சென்னை வாசிகளுக்கு அடித்த யோகம்... என்ன தெரியுமா?

டிசைன், மின் மோட்டாரின் செயல்திறன், ரேஞ்ச், விலை என அனைத்திலும் நிறைவைக் கொண்டிருப்பதன் காரணத்தினாலயே எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த காரில் 44.5 kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கின்றது.

நீண்ட நாள் எதிர்பார்பு நிறைவேறியது... சென்னை வாசிகளுக்கு அடித்த யோகம்... என்ன தெரியுமா?

அந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இந்த பேட்டரிகளை சார்ஜ் செய்ய சாதாரண மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதன்படி, வழக்கமான சார்ஜர் போர்ட் மூலம் எம்ஜி இசட்எஸ் காரை சார்ஜ் செய்தால் பேட்டரி முழுமையடைய 8 மணிநேரங்கள் எடுத்துக் கொள்ளும்.

நீண்ட நாள் எதிர்பார்பு நிறைவேறியது... சென்னை வாசிகளுக்கு அடித்த யோகம்... என்ன தெரியுமா?

அதுவே, ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் வைத்து சார்ஜ் செய்யும்போது வெறும் 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.

முழுமையான சார்ஜை அடைந்த இந்த பேட்டரிகள் 143 பிஎச்பி மற்றும் 353 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் மின் மோட்டாருக்கு தேவையான மின் சக்தியை வழங்க உதவும்.

நீண்ட நாள் எதிர்பார்பு நிறைவேறியது... சென்னை வாசிகளுக்கு அடித்த யோகம்... என்ன தெரியுமா?

இந்த மின் மோட்டார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை தொடுவதற்கு வெறும் 8.5 வினாடிகளை மட்டுமே எடுத்துக் கொள்கின்றது. அதிவேக திறனாகும். இந்த மின்சார கார் எம்ஜி இசட்எஸ் எக்ஸைட் மற்றும் எம்ஜி இசட்எஸ் எக்ஸ்க்ளூசிவ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

நீண்ட நாள் எதிர்பார்பு நிறைவேறியது... சென்னை வாசிகளுக்கு அடித்த யோகம்... என்ன தெரியுமா?

அதில், எக்ஸைட் வேரியண்ட்டிற்கு ரூ. 20.88 லட்சம் என்ற விலையும், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டிற்கு ரூ. 23.58 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதற்கு போட்டியாக விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் ரூ. 23.71 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இது, எக்ஸ்ஷோரூம் விலையாகும். இந்த கார் ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
MG ZS EV Launched In Chennai. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X