கோவையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி!

கோவை உள்ளிட்ட 10 புதிய நகரங்களில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கோவையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி!

கடந்த ஆண்டு ஹெக்டர் எஸ்யூவியுடன் களமிறங்கிய எம்ஜி மோட்டார் நிறுவனம் இரண்டாவது மாடலாக இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வந்தது. எதிர்பார்த்தது போலவே இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தத் துவங்கியது.

கோவையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி!

ஆனால், முதல்கட்டமாக மும்பை, டெல்லி, ஆமதாபாத், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதால் குறிப்பிட்ட அளவிலேயே விற்பனை இருந்து வருகிறது. இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக புனே, சூரத், கொச்சி, சண்டிகர், ஜெய்ப்பூர் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கோவையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி!

இதைத்தொடர்ந்து, தற்போது மூன்றாவது கட்டமாக கோவை, லூதியானா, டேராடூன், நாக்பூர், ஆக்ரா, அவுரங்காபாத், இந்தூர் மற்றும் விசாகப்பட்டணம் ஆகிய நகரங்களில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

கோவையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி!

இதன்மூலமாக, விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெறுவதற்கான வாய்ப்பை எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு கிடைக்கும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகளிலும் எம்ஜி மோட்டார் ஈடுபட்டுள்ளது.

கோவையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி!

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி எக்ஸ்சைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில், எக்ஸ்சைட் வேரியண்ட்டிற்கு ரூ.20.88 லட்சம் விலையும், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டிற்கு ரூ.23.58 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்யணிக்கப்பட்டது.

கோவையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி!

மை எம்ஜி மொபைல் செயலி அல்லது டீலர்கள் மூலமாக எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கான இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்படுவது முதல் டெலிவிரி கொடுக்கப்படுவது வரையிலான அனைத்து நடைமுறைகளையும் மை எம்ஜி மொபைல் செயலி மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

கோவையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி!

எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 44.5kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் மின் மோட்டார் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

கோவையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி!

வீட்டு சார்ஜர் மூலமாக பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு 6 முதல் 7 மணிநேரமும், 50kW டிசி சார்ஜர் மூலமாக 50 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிவிட முடியும். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம் மூலமாக கூடுதல் சார்ஜ் ஏற்றும் வசதியை இந்த காரின் பேட்டரி பெற்றுள்ளது.

கோவையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி!

இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐ-ஸ்மார்ட் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன.

கோவையில் விரைவில் விற்பனைக்கு வருகிறது எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி!

மேலும், 2.5 பிஎம் ஏர் ஃபில்டர், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதி, கமாண்ட் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் உள்ளன. ஃபெர்ரிஸ் ஒயிட், கோபன்ஹெகன் புளூ மற்றும் கர்ரண்ட் ரெட் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

Most Read Articles

English summary
MG Motors India will be launching the MG ZS EV in new cities across the country. The company has announced new cities getting added via a teaser video released on its social media channels.
Story first published: Saturday, September 26, 2020, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X