ஹூண்டாய் கோனாவை விட ரொம்ப பெஸ்ட்... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு தெரியுமா?

ஹூண்டாய் கோனாவுக்கு போட்டியாக எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் கோனா - எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... எது பெஸ்ட்?

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்த எம்ஜி இஸட்எஸ், எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஆகும். மேலும் இந்திய மார்க்கெட்டில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள இரண்டாவது தயாரிப்பு இதுவாகும்.

ஹூண்டாய் கோனா - எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... எது பெஸ்ட்?

இதற்கு முன்பாக ஹெக்டர் எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், எம்ஜி இஸட்எஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் எக்ஸைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஹூண்டாய் கோனா - எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... எது பெஸ்ட்?

இந்த காரின் ஆரம்ப விலை 20.88 லட்ச ரூபாய். இது எக்ஸைட் வேரியண்ட்டின் விலையாகும். அதே சமயம் எக்ஸ்ளூசிவ் வேரியண்ட்டின் விலை 23.58 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு போட்டியாக எம்ஜி இஸட்எஸ் வந்துள்ளது.

ஹூண்டாய் கோனா - எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... எது பெஸ்ட்?

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் விலை 25.30 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. எனவே ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் விலை, 1.6 லட்ச ரூபாய் குறைந்தது.

ஹூண்டாய் கோனா - எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... எது பெஸ்ட்?

எனவே ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் விலை 23.70 லட்ச ரூபாயாக குறைந்தது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த வகையில் பார்த்தால், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேஸ் வேரியண்ட்டை விட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை 2.82 லட்ச ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் கோனா - எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... எது பெஸ்ட்?

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் கடந்த டிசம்பர் 23ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சூழலில், கடந்த ஜனவரி 17ம் தேதியுடன் முதற்கட்ட புக்கிங் முடிவடைந்தது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், ரூஃப் ரெயில்கள், லெதர் இருக்கைகள், சன் ரூஃப், பிஎம் 2.5 ஏர் பில்டர், 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய டிரைவர் இருக்கை உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஹூண்டாய் கோனா - எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... எது பெஸ்ட்?

மேலும் மழை வந்தால் தானாக இயங்க கூடிய முன் பக்க வைப்பர் மற்றும் ஐஸ்மார்ட் 2.0 கனெக்டட் வசதிகளையும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. இதுதவிர 8 இன்ச் டச் ஸ்க்ரீன், நான்கு ஸ்பீக்கர்கள், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் இஎஸ்பி ஆகிய வசதிகளும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கோனா - எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... எது பெஸ்ட்?

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் மின் மோட்டார், 143 பிஎஸ் பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டி விடும் திறன் இந்த காருக்கு உண்டு. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரில், 44.5 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கோனா - எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... எது பெஸ்ட்?

மறுபக்கம் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார், 39.2 kWh பேட்டரியை பெற்றுள்ளது. இந்த கார் 136 பிஎஸ் பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்திய மார்க்கெட்டில் இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் முக்கியமானது.

Most Read Articles
English summary
MG ZS - Hyundai Kona Electric SUV Price Comparison. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X