இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...

பெட்ரோல் என்ஜின் உடன் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஐந்தாவது இந்திய அறிமுக மாடலாக வெளிவரவுள்ள இசட்எஸ் எஸ்யூவி இந்தியாவில் சோதனையின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தற்சமயம் மூன்று எஸ்யூவி மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றை தொடர்ந்து நான்காவது மாடலாக க்ளோஸ்டர் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கு அடுத்த ஐந்தாவது எம்ஜி தயாரிப்பு தான் இசட்எஸ்.

இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...

பெட்ரோல் எஸ்யூவி மாடலாக வெளிவரவுள்ள எம்ஜி இசட்எஸ் காரின் அறிமுகம் இந்தியாவில் அடுத்த வருடத்தில் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் இந்த எஸ்யூவி கார் பெட்ரோல் மற்றும் ஹைப்ரீட் என்ஜின் தேர்வுகளுடன் இந்தியாவில் அறிமுகமாகலாம் என கூறப்பட்டிருந்தது.

இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...

இதன்படி 1.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல்-ஹைப்ரீட் என்ஜின்கள் தேர்வுகளாக இந்த காருக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 104 பிஎச்பி மற்றும் 141 என்எம் டார்க் திறனையும், ஹைப்ரீட் என்ஜின் 109.4 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...

இந்த இரு என்ஜின்களும் ஏற்கனவே பிஎஸ்6 தரத்திற்கு இணையான யுரோ-6 நிலைப்பாட்டில் தான் உள்ளன. இதனால் இந்திய சந்தைக்காக என்ஜின்களை இங்குள்ள புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக மாற்ற வேண்டிய கட்டாயம் எம்ஜி நிறுவனத்திற்கு ஏற்படாது.

இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...

ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக இதன் சர்வதேச மாடலில் பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், ஹைப்ரீட் என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் வழங்கப்பட்டு வருகின்றன. இதே ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் தான் இதன் இந்திய வெர்சனுக்கும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதற்கிடையில் தான் தற்போது இந்த கார் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மோட்டார்பீம் செய்தி தளத்தால் வெளியிடப்பட்டுள்ள இதன் ஸ்பை படங்களின் மூலம் பெரிய அளவில் காரை பற்றிய தகவல்கள் எதையும் அறிய முடியவில்லை.

இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...

சர்வதேச இசட்எஸ் மாடல் ஆனது எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல்களுடன் தேன்கூடு வடிவிலான க்ரில், சுற்றிலும் வ்ராப் உடன் எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் 17 இன்ச்சில் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களை கொண்டுள்ளது. மேலும் காரின் இருபுறங்களில் அலுமினியம் ஸ்கிட் ப்ளேட்களும் பொருத்தப்படுகின்றன.

உட்புற கேபின், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ப்ராண்ட்டின் லேட்டஸ்ட் ஐஸ்மார்ட் இணைப்பு தொழிற்நுட்பத்துடன் இணைக்கக்கூடியதாக 8 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் மிகவும் ப்ரீமியம் தரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு தொடர்ந்து அதிகரித்தும் தேவையை கருத்தில் கொண்டு எம்ஜி நிறுவனம் இசட்எஸ் எஸ்யூவி மாடலை இந்திய சந்தைக்கு கொண்டுவருகிறது. இதனால் கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா போன்ற மாடல்களுடன் விற்பனை போட்டியினை எதிர்கொள்ள இந்த எம்ஜி காருக்கு நேர்ந்தாலும், மேற்கூறப்பட்ட இரு என்ஜின்கள் மூலமாக பெரிய அளவில் இந்திய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...

இவற்றுடன் அவசரகால ப்ரேக், லேன்-கீப் அசிஸ்ட், ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியையும் காட்டும் வசதி உள்ளிட்டவை அடங்கிய எம்ஜியின் பைலட் ஓட்டுனர் உதவி வசதியையும் சர்வதேச சந்தையில் எம்ஜி இசட்எஸ் மாடலுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தையும் இதன் இந்திய மாடலிலும் எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு தொடர்ந்து அதிகரித்தும் தேவையை கருத்தில் கொண்டு எம்ஜி நிறுவனம் இசட்எஸ் எஸ்யூவி மாடலை இந்திய சந்தைக்கு கொண்டுவருகிறது. இதனால் கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா போன்ற மாடல்களுடன் விற்பனை போட்டியினை எதிர்கொள்ள இந்த எம்ஜி காருக்கு நேர்ந்தாலும், மேற்கூறப்பட்ட இரு என்ஜின்கள் மூலமாக பெரிய அளவில் இந்திய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
MG ZS Petrol SUV Spied – Will Rival New Maruti S Cross BS6
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X