ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் அளித்த எம்ஜி ஜி3.. பதறிபோய் நிற்கும் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ10...

இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி நிறுவனத்தின் புத்தம் புதிய ஜி3 ஹேட்ச்பேக் கார் முதல் தரிசனத்தை வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் அளித்த எம்ஜி ஜி3... பதறிபோய் நிற்கும் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு ஃபிகோ...!

இந்தியாவில் நடைபெற்று வரும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி நிறுவனம், மாஸான ஆட்டத்தை நிகழ்த்தி வருகின்றது. குறிப்பாக, புதிய மாடல்கள் மூலம் ஆட்டோ எக்ஸ்போவையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் அளித்த எம்ஜி ஜி3... பதறிபோய் நிற்கும் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு ஃபிகோ...!

இதையடுத்து இந்தியாவில் களமிறக்க உள்ள வாகனங்களை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் வரிசைப்படுத்தி வருகின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் அளித்த எம்ஜி ஜி3... பதறிபோய் நிற்கும் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு ஃபிகோ...!

அந்தவகையில், 2020 ஆட்டோ எக்ஸ்போவின் இரண்டாம் நாளான (பிப்ரவரி 6) நேற்று எம்ஜி ஜி3 என்ற காரை அது காட்சிப்படுத்தியது. இது வாகன கண்காட்சிக்கு வந்த பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது.

குறிப்பாக, எதிர்கால டிசைனிங்கில் காணப்பட்ட இதன் ஹேட்ச் வடிவமைப்பே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் அளித்த எம்ஜி ஜி3... பதறிபோய் நிற்கும் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு ஃபிகோ...!

இருப்பினும், இந்த காரை எம்ஜி நிறுவனம் என்ட்ரீ லெவல் ஹேட்ச் பேக்காகவே வடிவைத்திருக்கின்றது. மேலும் பெரியளவில் ஆடம்பரமான அணிகலன்களை அதற்கு வழங்கவில்லை. இருந்தும் இந்த கார் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் அளித்த எம்ஜி ஜி3... பதறிபோய் நிற்கும் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு ஃபிகோ...!

இந்த எம்ஜி ஜி3 கார் இந்தியாவில் கால் தடம் பதிக்குமேயானால் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் உள்ளிட்ட பல கார்களுக்கு கடுமையான போட்டியை வழங்கும்.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் அளித்த எம்ஜி ஜி3... பதறிபோய் நிற்கும் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு ஃபிகோ...!

விரைவில் இந்த காருக்கான வரவேற்புகுறித்த ஆய்வறிக்கையை அடுத்து, இதன் இந்திய வருகையை எம்ஜி உறுதி செய்ய இருக்கின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் அளித்த எம்ஜி ஜி3... பதறிபோய் நிற்கும் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு ஃபிகோ...!

இந்த காருக்கு மிகவும் சிம்பிளான அலங்காரத்தையே எம்ஜி வழங்கியுள்ளது. அந்தவகையில், பெரியளவில் ஆடம்பரமில்லாத க்ரில் அமைப்பு முகப்பு பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. பெரியளவிலான ஹாலோஜன் ஹெட்லேம்ப், ஸ்லீக் டைப்பிலான ஏர்-டிரம் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்டவை பம்பரில் நிறுவப்பட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் அளித்த எம்ஜி ஜி3... பதறிபோய் நிற்கும் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு ஃபிகோ...!

இந்த சிம்பிளான அம்சங்களே எம்ஜி ஜி3 மாடலுக்கு அதீத கவர்ச்சி தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளது. இத்துடன், ட்யூவல் டோன் அலாய் வீல்கள், கட்டுமஸ்தான உடல்தோற்றம் உள்ளிட்டவை இந்த காருக்கு கூடுதல் கம்பீரத்தை சேர்க்கும் வகையில் உள்ளது.

இதுமட்டுமின்றி தொழில்நுட்ப அம்சத்திலும் அசத்தலான காராக எம்ஜி ஜி3 காட்சியளிக்கின்றது.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் அளித்த எம்ஜி ஜி3... பதறிபோய் நிற்கும் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு ஃபிகோ...!

குறிப்பாக, டேஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பல்வேறு தொழில்நுட்ப வசதியை வாரி வழங்கும் வகையில் உள்ளது. தொடர்ந்து, டிசைன் மற்றும் சிறப்பு வசதிகள் பயணத்தின்போது அலாதியான் இன்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் அளித்த எம்ஜி ஜி3... பதறிபோய் நிற்கும் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு ஃபிகோ...!

இத்துடன், காரில் சொகுசு வசதியாக க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்டியரிங் மவுண்ட் ஆடியோ கன்ட்ரோல், பட்டன் மூலம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்-கள் மற்றும் மல்டி இன்ஃபோ டிஸ்பிளே உள்ளிட்டவையும் காட்சியளிக்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் அளித்த எம்ஜி ஜி3... பதறிபோய் நிற்கும் மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ10, ஃபோர்டு ஃபிகோ...!

இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் நிறுவப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 112 பிஎஸ் மற்றும் 150 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட உள்ளது.

Most Read Articles
English summary
MG G10 MPV Unveiled At Auto Expo 2020. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X