எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ... நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விமான போக்குவரத்து சில மாற்றங்கள் நிகழ இருக்கின்றது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ..! நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையேக் காணப்படுகின்றது. இந்த நிலையால் தரைப் போக்குவரத்து மட்டுமின்றி வான் வழி போக்குவரத்தும் அந்தந்த நாடுகளில் முடக்கப்பட்டிருக்கின்றது.

எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ..! நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இதே நிலையைதான் உலக நாடுகள் பல சந்தித்து வருகின்றன. இதனால், மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் அவையனைத்தும் சிக்கியிருக்கின்றன. எனவே, பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இந்தியா போன்ற ஒரு சில நாடுகள் மட்டும் லேசான தளர்வுகளை வழங்க ஆரம்பித்துள்ளன.

எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ..! நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!

இதைத்தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள ஒரு சில நாடுகள் விமான போக்குவரத்தையும் மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவித்து வருகின்றன. ஆனால், மீண்டும் தொடங்கப்பட இருக்கும் விமான போக்குவரத்தில் பல்வேறு சிக்கல் இருப்பதால், அதில் புதிய பாதுகாப்பு வழிமுறைகளை முன்பெப்போதும் இல்லாத அளவில் கடைப்பிடிக்க இருப்பதாக அந்தந்த விமான போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ..! நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!

தற்போது, உலக நாடுகள் பலவற்றிற்கு கொரோனா வைரஸ் பரவியதில் விமான போக்குவரத்தும் ஓர் வகையில் காரணமாக இருக்கின்றன. எனவேதான் தற்போது இந்த போக்குவரத்தில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள உலக நாடுகளும், விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன.

எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ..! நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!

இதற்காக பல அதிரடி நடவடிக்கைகளையும் அவை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில், உலக ஆராய்ச்சியாளர்கள் சிலர், தளர்வுகளை வழங்கி வரும் நாடுகளுக்கு எச்சரிக்கை தகவல் ஒன்றை விடுத்துள்ளனர். தற்போது, கொரோனா அலை ஓய்ந்திருப்பதாக எண்ணி மேற்கொள்ளப்படும் தளர்வு நடவடிக்கை, வைரசின் இரண்டாம் நிலை பரவலுக்கு வழி வகுக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ..! நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!

மேலும், முதல் நிலை பரவலைக் காட்டிலும் இரண்டாம் நிலை பரவலில் பின் விளைவுகள் கூடுதலாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்புகுறித்த அச்சம் விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு கூடுதலாக ஏற்படத் தொடங்கியுள்ளது.

எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ..! நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!

இந்நிலையில், விமான போக்குவரத்து நிறுவனங்களின் இந்த கவலைக்கு ஆறுதல் அளிக்கின்ற வகையில், ஃப்ரெஞ்சு நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஃப்ளோரியன் பர்ஜோட் என்ற நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது விமானங்களுக்கான பொறியியல் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் ஆகும்.

எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ..! நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!

இந்த நிறுவனம் விமானங்களின் மையப் பகுதி இருக்கையை பயணிகள் அமர பயன்படுத்தாமல் அதில் பாதுகாப்பு ஷீல்டை நிறுவ இருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, கண்ணாடியைப் பயன்படுத்தி தடுப்பு சுவர் போன்ற ஓர் அமைப்பை ஏற்படுத்துவதற்கான சிறப்பு திட்டத்துடன் தாங்கள் இருப்பதாக அது அறிவித்துள்ளது. மேலும், இத்திட்டத்திற்கு 'பிளான்பே' என்ற பெயரையும் அது வைத்துள்ளது.

எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ..! நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!

வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமி தொற்றில் இருந்து பயணிகளைக் காக்க இந்த திட்டம் உதவும் என நம்பப்படுகின்றது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்களின் உட்கட்டமைப்பை மறு சீரமைப்பது என்பது இயலாத ஓர் காரியம் ஆகும். மேலும் கூடுதல் பொருட் செலவையும் ஏற்படுத்தும்.

எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ..! நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!

எனவே, எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் பாதுகாப்பு சாதனங்கள் மூலம் இருக்கைகளை கவர் செய்தால், செலவையும் குறைத்து, பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கும் வழிவகைச் செய்ய முடியும் என ஃப்ளோரியன் பர்ஜோட்ஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ..! நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!

இதேபோன்றதொரு நடவடிக்கையினைதான் சில நாட்களுக்கு முன்பு இத்தாலியைச் சேர்ந்த அவியோ இன்டீரியர்ஸ் நிறுவனமும் வெளியிட்டிருந்தது. ஆனால், இது மைய இருக்கையையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திட்டத்தை வெளியிட்டிருந்தது.

எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ..! நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!

அதாவது, ஒரு பயணி முன்னோக்கியும் (பைலட்டை பார்த்தவாறு) அடுத்த பயணி (மைய இருக்கையில் இருக்கும் நபர்) பின்னோக்கி பார்க்கும் வகையில் (விமானத்தின் வால் பகுதியை பார்த்தவாறு) இருக்கையை மாற்றியமைக்க திட்டமிட்டிருந்தது. இதுமட்டுமின்றி கண்ணாடி பெட்டகங்களால் ஒவ்வொரு பயணிக்கும் பாதுகாப்பை வழங்கும் வகையிலும் அதன் அத்திட்டத்தை வடிவமைத்திருந்தது.

எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ..! நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!

ஆனால், பிரெஞ்ச் நிறுவனம் கொண்டு வந்திருக்கும் இத்திட்டத்தில் மைய இருக்கையைப் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால், விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படலாம். இருப்பினும் கொரோனா அச்சம் நிறைந்த காலத்தில் இதுபோன்ற நடவடிக்கையே அத்தியாவசிய தேவையாக மாறியிருக்கின்றது.

எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ..! நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!

இத்திட்டம் நஷ்டத்தை வழங்கினாலும் குறைந்த செலவில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கையாக உள்ளது. அதாவது, கண்ணாடி ஷீல்டை மட்டுமே பயன்படுத்துவதால் செலவு குறைந்த நடவடிக்கையாக இது கருதப்படுகின்றது.

இதுமட்டுமின்றி இந்த ஷீல்டு அமைப்பை மலிவு விலையில் உற்பத்தி செய்ய இருப்பதாகவும் ஃப்ளோரியன் பார்ஜோட்ஸ் தெரிவித்துள்ளது.

எதிர்கால விமான பயணம் இப்படிதான் இருக்குமோ..! நம்ப முடியாத மாற்றங்களுக்கு தயாராகும் விமானங்கள்!

மேலும், பயணிகளை தனிமைப்படுத்தி வைரசில் இருந்து பாதுகாக்கும் இந்த கண்ணாடி ஷீல்டுகளை ஒளி புகா அமைப்பிலும் விமான போக்குவரத்து நிறுவனங்களின் தேவைக்கேற்ப வழங்க இருப்பதாகவும் பார்ஜோட்ஸ் கூறியுள்ளது.

இதனால், ஜன்னல் மற்றும் கார்னர் இருக்கைகளை மட்டுமே வருங்கால விமான போக்குவரத்தில் பயன்படுத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Middle Seat Will Get Protective Glass Shield In Future Air Travel. Read In Tamil.
Story first published: Thursday, May 14, 2020, 15:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X