பெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர்! சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா

சென்னையைச் சேர்ந்த செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையாளரான குன் எலைட், அதன் மினி கூப்பர் காருக்கு மிகப்பெரிய மாஸ்க்கை அணிவித்து வலம் வர செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

பெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர்... சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா?

உலக நாடுகள் அனைத்தையும் ஒற்றை வைரஸ் கொரோனா அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த வைரஸ் மனிதர்களின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் இயங்கவிடாமல் ஸ்தம்பிக்கச் செய்துள்ளது.

எனவே, ஒவ்வொரு துறையும் தங்களின் வர்த்தகத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றன.

பெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர்... சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா?

அந்தவகையில், சென்னையைச் சேர்ந்த செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையாளரான குன் எலைட் நிறுவனம், யூஸ்டு கார்களை விற்பனைச் செய்ய தனித்துவமான முயற்சியைக் கையாளத் தொடங்கியிருக்கின்றது. இந்நிறுவனம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனையகம் ஆகும்.

பெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர்... சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா?

தற்போதைய கொரோன காலத்தில் எந்தவொரு வாகனத்தையும் விற்பனைச் செய்வது இக்கட்டான ஒன்றாக மாறியுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் தற்போதும் மூடு விழாவிலேயே இருக்கின்றன. இதனால், மக்கள் பலர் வேலை மற்றும் வருமானத்தை இழந்து அத்தியாவசிய தேவைகளுக்கே பெர்சனல் லோன் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர்... சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா?

இம்மாதிரியான சூழ்நிலையில் வாகனங்களை விற்பனைச் செய்வது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், பொதுப் போக்குவரத்தில் பயணிக்க விரும்பாத சிலர் புதிய அல்லது செகண்ட் ஹேண்ட் வாகனங்களை லோன் மூலம் வாங்கி வருகின்றனர். அப்படியானோர்களைக் கவரும் விதமான முயற்சியில்தான் குன் எலைட் களமிறங்கியுள்ளது.

பெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர்... சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா?

இந்நிறுவனம், தங்களிடம் இருக்கும் வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக மினி கூப்பர் காருக்கு மாஸ்க் அணிவித்து புரமோட் செய்யும் பணியில் இறங்கியிருக்கின்றது.

பொதுவாக மக்கள் மத்தியில் தற்போது நிலவும் மிகப்பெரிய அச்சமே கொரோனா வைரஸ்தான். இந்த வைரஸ் எப்படி, யார் மூலம் பரவுகின்றது என்றே கணிக்க முடியாது.

பெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர்... சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா?

எனவேதான், தங்களிடம் இருக்கும் வாகனங்கள் அனைத்தும் முறையாக சானிட்டைஸ் செய்யப்பட்டவை, இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை விளக்கும் வகையில் புதுமையான நடவடிக்கையில் குன் எலைட் இறங்கியிருக்கின்றது.

இதனடிப்படையில், மிகப்பெரிய மாஸ்க் கூப்பர் காருக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், காரின் பக்கவாட்டு கதவில் க்யூஆர் கோடும் ஒட்டப்பட்டிருக்கின்றது.

பெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர்... சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா?

மினி கூப்பருக்கு மாஸ்க் அணிவிக்க மற்றுமொரு காரணம் இருக்கின்றது. குன் எலைட், செகண்ட் ஹேண்ட் கார்களை விற்பனைச் செய்ய இரண்டு நாள் விற்பனை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கின்றது. வருகின்ற 17 மற்றும் 18 ஆகிய தினங்களில் அது நிகழ இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் காரின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

பெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர்... சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா?

அதாவது, சுலபமான கடன் திட்டம், பூஜ்ஜியம் மெயின்டனென்ஸ் சார்ஜஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த நிகழ்வின்போது மக்களை ஈர்க்கவே மினி கூப்பருக்கு மிகப்பெரிய மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்வில் எப்படி பங்கேற்பது என்பதை விளக்கும் விதமாக கார் கதவில் க்யூஆர் கோட் ஒட்டப்பட்டுள்ளது. இந்த அணிகலன்களை ஏந்திய மினி கூப்பர் விரைவில் நகரின் முக்கிய இடத்தில் கார்னிவல் செய்யப்பட இருக்கின்றது.

பெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர்... சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா?

ஏற்கனவே இப்பணையைத் தொடங்கிவிட்ட அக்கார் பார்வையாளர்களை ஈர்க்க ஆரம்பித்திருக்கின்றது. அண்மைக் காலங்களாக மக்களின் அத்தியாவசியங்களில் ஒன்றாக மாஸ்க் மாறியுள்ளது. எனவே, மினி கூப்பர் நிச்சயம் மக்களைக் கூடுதலாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவேதான் இந்த தனித்துவமான முயற்சியில் குன் எலைட் இறங்கியுள்ளது.

பெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர்... சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா?

தற்போது விற்பனைக்கு வரும் புதிய அல்லது செகண்ட் ஹேண்ட் கார்கள் அனைத்தும் முழுமையாக சானிட்டைஸ் செய்யப்பட்ட பின்னரே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. கொரோனாவின் இக்கட்டான காலத்தில் மக்களை பாதுகாப்பாக வழி நடத்தும் விதமாக, நிறுவனங்கள் அனைத்தும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் தொடர்பில்லா வர்த்தகத்திற்கு மாறி வருகின்றன.

பெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர்... சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா?

இதனடிப்படையிலேயே சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் குன் எலைட், வாடிக்கையாளர்களைக் கவர முற்றிலும் வித்தியாசமான முயற்சியைக் கையாண்டு வருகின்றது. இது எம்மாதிரியான பயனை அந்நிறுவனத்திற்கு ஏற்படுத்திக் கொடுக்கம் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

English summary
Mini Cooper Wears Mask. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X