Just In
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 1 hr ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 1 hr ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 4 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- Movies
'எனக்கு கொரோனா இல்லை, இல்லவே இல்லை, அதை நம்பாதீங்க..' பிரபல நடிகை திடீர் மறுப்பு!
- News
தடுப்பூசிகள் இரண்டுமே பாதுகாப்பானவைதான்.. வதந்திகளை நம்பாதீங்க... மோடி வேண்டுகோள்!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Lifestyle
இந்தியாவில் போடப்படும் கோவிட்-19 தடுப்பூசி பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செகண்ட் ஹேண்ட்ல கார் வாங்க போறீங்களா? அதுக்கு முன்னாடி இந்த வீடியோவை கொஞ்சம் பாத்துடுங்க!
பழைய கார்களில் இருக்கும் சிக்கலை விளக்குகின்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில், புது முக கார்களுக்கு இணையான வரவேற்பை செகண்ட் ஹேண்ட் கார்களும் பெற்று வருகின்றன. பழைய மாடல்கள் அதிக மைலேஜை தருவதாலும், அவற்றின் விலை மிகக் குறைந்தளவில் இருப்பதாலும் இந்தியர்கள் மத்தியில் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. ஆனால், செகண்ட் ஹேண்டில் வாங்கப்படும் பழைய கார்களில் பாதுகாப்பு என்பது கேள்விக் குறிதான்.

இதை உறுதிச் செய்கின்ற வகையிலான வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை 4டிரைவ் டைம் எனும் யுடியூப் தளம் வெளியிட்டிருக்கின்றது. இந்த வீடியோவில், பழைய மற்றும் மாடர்ன் கார்கள் இரண்டும் மோதி விபத்தைச் சந்திக்கின்ற மாதிரியான காட்சிகள் அடங்கியிருக்கின்றன. இதன்மூலம் இரு கார்களுக்கு இடையேயான பாதுகாப்பு வித்தியாசங்கள் தெரியவந்துள்ளன.

இதற்காக, முதலில் 1992 நிஸ்ஸான் சுரு மற்றும் 2016 நிஸ்ஸான் வெர்ஷா செடான் ஆகிய இரு கார்களும் கிராஷ் டெஸ்டில் ஈடுபடுத்தப்பட்டன. இதில், பழைய மாடல் நிஸ்ஸான் சுருவின் முன் பக்கம் முழுமையாக சிதிலமடைந்தது. இத்துடன், அக்காரின் ஏ பிள்ளர் மற்றும் ஓட்டுநரின் பக்கவாட்டு பகுதி காகிதத்தைப் போல் அடுக்கடுக்காக மடிந்து காணப்பட்டது. மேலும், அக்காரில் நிலை நிறுத்தப்பட்டிருந்த டம்மிக்கும் எதிர்பாராத வகையிலான சேதம் ஏற்பட்டிருந்தது.

டம்மியின் இத்தகைய சேசத்திற்கு காரில் ஏர் பேக் இல்லாததே முக்கிய காரணம். அதேசமயம், இதனுடன் மோதிய நிஸ்ஸான் வெர்ஷா செடான் ரக காரை பார்த்தோமேயானால், அக்காரில் வைக்கப்பட்டிருந்த டம்மி பெரியளவில் சேதத்தைச் சந்திக்கவில்லை. காரில் பொருத்தப்பட்டிருந்த ஏர் பேக்குகள் சேதத்தில் இருந்து காப்பாற்றின. இதேபோன்று, நிஸ்ஸான் சுரு உடன் ஒப்பிடுகையில் நிஸ்ஸான் வெர்ஷா செடான் சற்று குறைந்தளவிலேயே உருக்குலைந்து காணப்படுகின்றது. ஆனால், நிஸ்ஸான் சுரு நிலை படு மோசமானதாக இருந்தது.

நிஸ்ஸான் சுருவின் இந்த நிலைக்கு அப்கிரேட் ஆகாததே முக்கிய காரணமாக உள்ளது. இதை வைத்துதான் பழைய காரைக் காட்டிலும் புதிய மாடல் கார்கள் அதிக பாதுகாப்பு நிறைந்தவை என கூறப்படுகின்றன. இதனை நிஸ்ஸான் சுரு மற்றும் 2016 நிஸ்ஸான் வெர்ஷா செடான் ஆகிய இரு கார்களின் கிராஷ் டெஸ்டை வைத்து மட்டுமே நாங்கள் கூறிவிடவில்லை.

இக்கார்களைத் தொடர்ந்து, 1959 செவ்ரோலே பெல் ஏர் மற்றும் 2009 செவ்ரோலே மலிபு செடான் ஆகிய கார்களின் மோதல் பரிசோதனைக்கு பின்னர் கிடைத்த தகவலை வைத்தும்தான் அதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.
இந்த கார்களிலும் பழைய மாடலைக் காட்டிலும் புதிய மாடல் சற்று குறைந்த சேதத்தையும், சற்று கூடுதல் பாதுகாப்பையும் வழங்கும் வகையில் இருந்தது.

இவற்றை த்தொடர்ந்து, 1998 மாடல் ஃபோர்டு ஃபியஸ்டா ஹேட்ச்பேக் மற்றும் புதிய தலைமுறை ஃபோர்டு ஃபியஸ்டாவும் கிராஷ் டெஸ்டில் ஈடுபடுத்தப்பட்டது. இக்கார்கள் மணிக்கு 64 கிமீ எனும் வேகத்தில் மோதலுக்கு உட்படுத்தப்பட்டன.
இதில், 1998 மாடல் முழுவதுமாக உருக்குலைந்தது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், உடற்கூடு முழுவதுமாக அப்பளம் போல் நொறுங்கியது. டிரைவரின் பக்கம் அடையாளம் காண முடியாத வகையில் சிதைந்தது.

இவ்வாறு பல ஆராய்ச்சிகளை முன் வைத்தை பழைய மாடலைக் காட்டிலும் புதிய மாடல் கார்கள் பயணத்தின்போது அதிக பாதுகாப்பை வழங்கும் என வல்லுநர்கள் மிக உறுதியாக தெரிவிக்கின்றனர். நாங்களும் அதையேதான் கூறுகின்றோம்.
பழைய வாகனங்களின் இந்த நிலைக்கு உடற்கூடுகள் மிக மெல்லிய இழை எஃகு தகட்டால் உருவாக்கப்பட்டதும், ஏர் பேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

எனவேதான், பழைய வாகனங்களை வாங்கச் செல்லும்போது சற்று கூடுதல் கவனம் தேவை என கூறப்படுகின்றது.
சரி, புதிய மாடலில் மட்டும் எப்படி பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இடம்பெறுகின்றன என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். அதற்கான பதில் பின்வருமாறு,

பொதுவாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள், அதன் புகழ்வாய்ந்த மாடல்களை ஒவ்வொரு வருடமும் அப்கிரேட் செய்து அதனை மீண்டும் புதிய மாடலாக சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்கின்றன. இந்த அப்கிரேஷன் மூலம் முந்தைய வெர்ஷனில் இருக்கும் குறைகளை நீக்குவதே அதன் முதல் இலக்காகும். இத்துடன், சந்தையின் தேவைக்கேற்ப புதிய அம்சங்கள் சிலவும் கூடுதலாக சேர்க்கப்படும்.

அந்தவகையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்கின்ற அம்சத்திற்கே இதில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. அவ்வாறு இந்தியாவில் அதிகம் பாதுகாப்பு நிறைந்த காராக விற்பனைக்கு வந்த கார்தான் டாடா நெக்ஸான்.
இது குளோபல் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்டில் உச்சபட்ச மதிப்பான 5 நட்சத்திரத்தைப் பெற்றது. இதேபோன்று, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் டாடா அல்ட்ராஸ் ஆகிய கார்களும் ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.