பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் இவைதான்... என்னென்ன தெரியுமா?

இந்திய சந்தையில் வரும் பிப்ரவரி மாதத்திற்கு உள்ளாக விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் இவைதான்... என்னென்ன தெரியுமா?

சமீபத்தில் முடிவடைந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு, இந்திய சந்தையில் பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது பண்டிகை காலம் முடிவடைந்துள்ள நிலையிலும், கார் நிறுவனங்கள் தொடர்ச்சியாக பல்வேறு புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன. இந்த வகையில் பிப்ரவரி மாதத்திற்கு உள்ளாக விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் இவைதான்... என்னென்ன தெரியுமா?

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் (நவம்பர் கடைசி வாரம்)

இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை டொயோட்டா நிறுவனம் கடந்த மாதம் இந்தோனோஷியா சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து நடப்பு மாதத்தின் கடைசி வாரத்தில் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் இவைதான்... என்னென்ன தெரியுமா?

அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் தற்போது டொயோட்டா டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காரை இன்னும் கூடுதல் கவர்ச்சியாக காட்டும் வகையில் டொயோட்டா நிறுவனம் சில அப்டேட்களை வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் இவைதான்... என்னென்ன தெரியுமா?

நிஸான் மேக்னைட் (டிசம்பர் 2, 2020)

புதிய நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி இந்திய சந்தையில் வரும் டிசம்பர் 2ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் உள்ளிட்ட கார்களுடன் இது போட்டியிடும்.

பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் இவைதான்... என்னென்ன தெரியுமா?

நிஸான் நிறுவனம் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியை மிக சவாலான விலையில் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக 5.50 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். அதற்காக நீங்கள் வசதிகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என அர்த்தம் கொள்ள கூடாது.

பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் இவைதான்... என்னென்ன தெரியுமா?

ஏனெனில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 360 டிகிரி கேமரா, 7 இன்ச் முழு-டிஜிட்டல் டிஎஃப்டி இன்ஸட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி பெற்றுள்ளது.

பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் இவைதான்... என்னென்ன தெரியுமா?

டாடா அல்ட்ராஸ் டர்போ (டிசம்பர் 2020)

பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில், டாடா அல்ட்ராஸ் தற்போது மிகச்சிறந்த தேர்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த சூழலில், புதிய டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வை டாடா அல்ட்ராஸ் விரைவில் பெறவுள்ளது. இது 1.2 லிட்டர் மூன்று-சிலிண்டர் யூனிட்டாக இருக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்ய கூடியது.

பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் இவைதான்... என்னென்ன தெரியுமா?

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதன்பின் டிசிடி தேர்வும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டியாளர்களுக்கு இன்னும் கடுமையான சவாலை அளிக்க, டாடா அல்ட்ராஸ் காருக்கு இந்த டர்போ வேரியண்ட் உதவும். இந்த புதிய வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் இவைதான்... என்னென்ன தெரியுமா?

டொயோட்டா பார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் (ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி 2021)

இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி மட்டுமல்லாது, பார்ச்சூனர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் டொயோட்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. பிரீமியம் எஸ்யூவி செக்மெண்ட்டில் எம்ஜி க்ளோஸ்ட்டர் புதிதாக விற்பனைக்கு வந்துள்ளது. போட்டி அதிகரித்து வருவதை மனதில் வைத்து பார்ச்சூனரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை டொயோட்டா களமிறக்கவுள்ளது.

பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் இவைதான்... என்னென்ன தெரியுமா?

இதில், டொயோட்டா நிறுவனம் சில கூடுதல் வசதிகளை வழங்குவதுடன், தோற்றத்திலும் ஒரு சில மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவியில் தற்போதைய நிலையில், பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு இன்ஜின் தேர்வுகளும் தக்க வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் இவைதான்... என்னென்ன தெரியுமா?

ஆனால் டீசல் இன்ஜின் அதிக பவர்அவுட்புட்டை வழங்கும் வகையிலான ட்யூனிங் உடன் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு தற்போது ஒரு சில டீலர்களில் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Most Read Articles

English summary
Most-Awaited Cars Launching In Next 3 Months: Altroz Turbo, Magnite, Fortuner Facelift. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X