Just In
- 41 min ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 8 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 8 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 10 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
Coronavirus Vaccine: தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடக்கம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Movies
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வழி தவறி வந்தவரை பார்த்து மிரண்டுபோன ஆட்டோக்காரர்... அந்த இடத்துல நீங்க இருந்தாகூட அப்படிதான் ஆடிப்போயிருப்பீங்க!
வழி தவறி சென்ற பிரபலத்திற்கு ஆட்டோக்காரர் ஒருவர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இப்போது வேண்டுமானால் ரூட் சொல்வதில் கூகுள் மேப் பெரிய ஆளாக இருக்கலாம். ஆனால், ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னால் நம்ம ஊர் ஆட்டோக்காரர்கள்தான் சிறந்த வழிகாட்டிகள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. சாலையோரத்தில் சிறிய பிள்ளையார் கோவில் முதல் ஏரிய மிகப்பெரிய மசூதி, தேவாலயம் வரை அனைத்தும் இவர்களுக்கு அத்துப்படியே. எனவேதான் பாதையை தவறவிடும் பயணிகள் இவர்களையே (ஆட்டோ ஓட்டுநர்களை) மேப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அந்தவகையில், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் மிகப்பெரிய ரசிக பட்டாளத்தை வைத்திருக்கும் பிரபலம் ஒருவர், ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் சேர வேண்டிய இடத்தை அடைந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரே அவர். இவர் வெறுமனே இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் மட்டும் என்று கூறிவிட முடியாது. இந்திய கிரிக்கெட் உலகில் இவர் படைத்த சாதனைகள் பல.

எனவேதான், இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இவர் இடம்பெறவில்லை என்றாலும், இவருக்கான ரசிகப் பட்டாளம் தற்போது இருந்த வண்ணம் இருக்கின்றது. இவரே தனது சொந்த மாநிலமான மஹாராஷ்டிராவில் பாதை மாறி தடுமாறி நின்றபோது ஆட்டோஓட்டுநர் ஒருவரின் உதவியைப் பெற்று இலக்கைச் சேர்ந்திருக்கின்றார்.

ஆட்டோ ஓட்டுநரின் உதவியைப் பெறும்போது அவர் பிஎம்டபிள்யூவின் எக்ஸ்5எம் காரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. இக்கார் இந்தியாவின் சொகுசு அம்சங்கள் நிறைந்த மிக விலையுயர்ந்த காராகும். இக்கார், இந்தியாவில் ரூ. 1.94 கோடி என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் ஆரம்ப நிலை மாடலின் விலை மட்டுமே ஆகும். இதன் உயர்நிலை மாடல்களின் விலை இன்னும் பல கூடுதலாக சில கோடிகளைக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய விலையுயர்ந்த காரில் சென்றுக் கொண்டிருக்கையிலேயே பாதையை தவற விட்டிருக்கின்றார் சச்சின். ஆனால், நல்ல வேலையாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உரிய நேரத்தில் வாழி காட்டி உதவியிருக்கின்றார். முதலில், தன்னிடம் வழி கேட்க வந்தவர் யார் என அறிந்த உடன் அவர் அடைந்த சந்தோஷம், இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக அவர் தெரிவித்திருக்கின்றார். திடீரென கிரிக்கெட் உலகின் கடவுளாக பார்க்கப்படும் சச்சினைப் பார்த்தால் யார்தான் குதூகலிக்க மாட்டார்கள்.

சரி இவர் பயன்படுத்திய காரை பற்றிய சிறப்பு தகவலைப் பார்ப்போம். இந்த காரை சச்சின் டெண்டுல்கர் தனக்கு பிடித்த வகையில் லேசாக மாற்றியமைத்திருக்கின்றார். அதாவது, காரின் உட்பகுதியில் சிவப்பு நிறம் கொண்ட இருக்கைகளைப் பயன்படுத்தியிருக்கின்றார். இத்துடன், மேலும் பல சொகுசு அம்சங்களை அவர் சேர்த்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரிடத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்5எம் காரைப் போலவே இன்னும் பல சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், பிஎம்டபிள்யூ 7-செரீஸ், பிஎம்டபிள்யூ ஐ8 மற்றும் ஃபெர்ராரி நிறுவனத்தின் சில கார்களும் அவரிடத்தில் இருக்கின்றது.
சச்சின் டெண்டுல்கர் வழி தவறி செல்ல கூகுள் மேப்-ம் ஓர் காரணமாக. ஆமாங்க, சில நேரத்தில் கூகுள் மேப் தவறான பாதையைக் காண்பிப்பது உண்டு. அதாவது, வழி இருப்பதாக கூறி ஓர் முட்டு சந்தையோ அல்லது வேறு ஏதேனும் தேவைப்படாத பாதைக்கோ வழி நடத்துவதுண்டு. அந்தவகையில், கூகுள் மேப் கூறிய தவறான பாதையை சென்று சிக்கலடைந்தநிலையிலேயே ஆட்டோ ஓட்டுநர், சச்சினுக்கு உதவியிருக்கின்றார்.