ஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ!

பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை சாதாரண மூன்று சக்கர ஆட்டோ ஒன்று ஈர்த்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.

ஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ!

ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனா ஒட்டுமொத்த மனித இனத்தின் வாழ்க்கையையே தலை கீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. இதனால் ஏற்பட்டு வரும் இழப்புகள் அளப்பறியாதது. உலக நாடுகள் நாளுக்கு நாள் சந்திக்கும் இழப்புகளும் ஏராளம். ஆகையால், வைரசுக்கு எதிரான போரை துரிதப்படுத்துவது மிக மிக அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.

ஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ!

அந்தவகையில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என நினைத்து ஆட்டோக்காரர், தனது மூன்று சக்கர ஆட்டோவையே கொரோனா போராளியாக மாற்றியிருக்கின்றார். கொரோனாவிற்கு எதிராக இவர் எடுத்திருக்கும் முயற்சி நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ!

மக்களை மட்டுமின்றி சில பெரும் புள்ளிகளையும் அது கவரத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், ஆட்டோக்காரரின் வியத்தகு முயற்சியைக் கண்டு பிரம்மித்துபோன ஆனந்த் மஹிந்திரா, கொரோனா போராளியாக மாறியிருக்கும் ஆட்டோகுறித்த வீடியோவை தனது தனிப்பட்ட டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ!

எனவே நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வரும் இந்த தகவல் தற்போது கூடுதல் கவனத்தை மக்களிடம் பெறத் தொடங்கியுள்ளது. அப்படி என்னதான் இருக்கு அந்த ஆட்டோவில் என்று கேட்கிறீர்களா? வாருங்கள் தகவலுக்குள் செல்லலாம்.

மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக பரவி வரும் வைரசை பரவாமல் தடுப்பதற்காக பல யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன.

ஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ!

அதவாது, சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் விதமாக கண்ணாடி திரைகள், கிருமி நாசினிகள் மற்றும் மாஸ்க் போன்ற கிருமி பரவல் தடுப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்தான், சற்று வித்தியாசமான முறையில் யோசித்த ஆட்டோக்காரர் ஒருவர், தனது ஆட்டோவில் கிருமியை அழிக்கும் விதமாக கை கழுவும் வாஷ் பேஷனை உருவாக்கியிருக்கின்றார்.

ஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ!

அத்துடன், சானிட்டைசர் மற்றும் கைகளைத் துடைப்பதற்கான டிஸ்யூக்களும் அந்த ஆட்டோவில் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, இந்த ஆட்டோ இந்தியாவின் ஸ்வச் பாரத் ஆட்டோவாக மாறியிருக்கின்றது. இதையேதான் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ!

வைரசை நாசம் செய்வதற்கான வசதிகளை மட்டுமின்றி எப்படி கிருமி தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது என்பது பற்றிய வழிகாட்டுதல்களையும் ஆட்டோக்களில் அவர் ஒட்டியிருக்கின்றார்.

ஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ!

இந்த விநோத சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறியிருக்கின்றது. இந்த தனித்துவமான வசதியை ஆட்டோ உரிமையாளர் கொண்டிருப்பதால், அவர் மக்கள் மத்தியிலும் பிரபலமடையத் தொடங்கியுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ!

அதேசமயம், அந்த இளைஞர் ஆட்டோவில் Wi-Fi வசதியையும் வழங்கி வருகின்றார். ஆட்டோவை மிகத் தூய்மையாக பராமரித்து வரும் அவர், அதனுள் கார்டனைப் போன்று சிறிய செடித் தொட்டிகளையும் வைத்திருக்கின்றார். எனவே, இந்த ஆட்டோவில் பயணிப்பது மனதுக்கு அமைதியை வழங்குவதாக ரெகுலர் கஸ்டமர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ!

எனவே, இந்த ஆட்டோக்காரர் அந்த சற்று பிரபலமான மனிதராக திகழ்ந்து வருகின்றார். கோவிட்19 வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல் மக்கள் மத்தியில் பொதுபோக்குவரத்து வாகனங்கள் பற்றி தவறான கருத்துக்கள் பரவிய வண்ணம் இருக்கின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் பொதுபோக்குவரத்து வாகனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நோய் தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது.

இதனாலயே பலர் சொந்தமாக வாகனங்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையில் மக்களை தங்கள் வசம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக வாடகை வாகன உரிமைதாரர்கள் சில விநோதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது மக்களின் கவனத்தை ஈர்ப்பதோடு, வாடகை வாகன பயணத்தையும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Auto Rickshaw With Hand Washing System Impresses Anand Mahindra, Twitter. Read In Tamil.
Story first published: Friday, July 10, 2020, 19:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X