தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ்.. புது வகை டெஸ்டிங் லேப்பை கையாளும் பிரபல நிறுவனம்...

கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்ஸ்பாட்டாக மாறி வரும் மும்பை நகரத்தில், வைரஸ் குறித்து பரிசோதனை மேற்கொள்ளும் ட்ரைவ்-த்ரூ டெஸ்டிங் லேப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ்.. புது வகை டெஸ்டிங் லேப்பை கையாளும் பிரபல நிறுவனம்...

கொரோனா, இந்த ஒற்றை வைரஸ்தான் உலக நாடுகள் அனைத்திற்கும் வில்லனாக உருவெடுத்துள்ளது. இந்த வைரஸ் கண்களுக்கு புலப்படாது என்றாலும், இதை நினைத்து நடு நடுங்கிக் கொண்டிருக்கும் நாடுகள் ஏராளம். ஏன், உலக வல்லரசு நாடுகள் என அலட்டிக் கொண்ட அமெரிக்க மற்றும் ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள்கூட வைரசுக்கு அஞ்சி தங்களின் முகத்தை மூடிக் கொண்டு திரிகின்றன.

தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ்.. புது வகை டெஸ்டிங் லேப்பை கையாளும் பிரபல நிறுவனம்...

தொடர்ந்து, வைரசிடம் தங்களை தற்காத்துக் கொள்ளுகின்ற வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவை எடுத்து வருகின்றன.

இதேநிலைதான் தற்போது இந்தியாவிலும் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் நூற்றுக் கணக்கில் மட்டுமே காணப்பட்ட வைரஸ் தொற்று தற்போது ஆயிரக் கணக்கிற்கு இடம்பெயர்ந்துள்ளது. இதனால், கடுமையான பீதியில் நாடும், நாட்டு மக்களும் உறைந்திருக்கின்றனர்.

தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ்.. புது வகை டெஸ்டிங் லேப்பை கையாளும் பிரபல நிறுவனம்...

இதையடுத்து, தேசிய ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் 2.0 வெர்ஷனை அண்மையில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ஆனால், இந்த அறவிப்பில் ஏழைகளுக்கான அறிவிப்பு எதுவும் இல்லை என பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே வாழ்வாதரத்தை தொலைத்து நிற்கும் தினக்கூலிகள் மற்றும் அடித்தட்டு மக்கள் இந்த ஊரடங்கினால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும் பலர் கருத்துகள் முன் வைத்து வருகின்றனர்.

தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ்.. புது வகை டெஸ்டிங் லேப்பை கையாளும் பிரபல நிறுவனம்...

இருப்பினும், அரசு சார்பில் இதை பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. இருப்பினும், அரசின் இந்த போக்கைப் பற்றி சற்றும் கவலைக் கொள்ளாத சில தனியார் தொண்டு நிறுவனங்கள், உணவற்று தவித்து வரும் மக்களுக்கு போதிய உணவை வழங்கி வருகின்றன. இருப்பினும், ஒரு சில இடங்களில் தங்களுக்கு ஒரு வேலை உணவு மட்டுமே கிடைப்பதாக, பணிக்காக புலம்பெயர்ந்து வேறு மாநிலங்களில் சிக்கியிருக்கும் மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ்.. புது வகை டெஸ்டிங் லேப்பை கையாளும் பிரபல நிறுவனம்...

இவ்வாறு இந்தியாவின் நிலை மிக மோசமானதாக மாறிக் கொண்டிருக்கின்ற அதேவேலையில், மறு பக்கம் வைரசுக்கு எதிரான போரும் தீவிரமாக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், கொரோனா தொற்று அதிகம் காணப்படும் பகுதியான மஹாராஷ்டிராவில் சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வைரஸ் தொற்றைப் பரவாமல், கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் கணிசமாக செய்யப்பட்டு வருகின்றன.

தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ்.. புது வகை டெஸ்டிங் லேப்பை கையாளும் பிரபல நிறுவனம்...

இதனடிப்படையில் புதிதாக மூன்று டிரைவ்-த்ரூ வைரஸ் தொற்று கண்டறியும் லேப்கள் மும்பை நகரத்தில் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. மஹாராஷ்டிராவில் வைரஸ் தொற்றுடையவர்களின் ஹாட்ஸ்பாட்டாக மும்பை மற்றும் புனே ஆகிய இரு நகரங்களில் மாறிக்கொண்டிருக்கின்றன.

தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ்.. புது வகை டெஸ்டிங் லேப்பை கையாளும் பிரபல நிறுவனம்...

ஆகையால், இங்கு மட்டும் சற்று கூடுதல் கவனம் கொண்டு அதிகாரிகள் வைரசைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளை செய்து வருகின்றனர். இதனடிப்படையிலேயே மூன்று டிரைவ்-த்ரூ டெஸ்டிங் லேப்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ்.. புது வகை டெஸ்டிங் லேப்பை கையாளும் பிரபல நிறுவனம்...

இது, தங்களிடத்தில் பரிசோதனை மேற்கொள்ள வரும் பயனர்களைக் காரை விட்டு வெளியே இறங்கவிடாமல், அவர்களைக் காருக்குள் வைத்தபடியே டெஸ்ட்டிற்கு தேவையான அனைத்து மாதிரிகளைச் சேகரித்துக் கொள்ளும். மேலும், சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகளை மின்னஞ்சல் வாயிலாக மற்றும் குறுஞ் செய்தி வாயிாலகவும் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.

தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ்.. புது வகை டெஸ்டிங் லேப்பை கையாளும் பிரபல நிறுவனம்...

இம்மாதிரியான ட்ரைவ்-த்ரூ டெஸ்ட் லேப் முதல் முறையாக தலைநகர் டெல்லியில்தான் பயன்பாட்டிற்கு வந்தது.

இதையடுத்து தற்போது மும்பையிலும் வந்துள்ளது. இந்த லேப்கள் லோயர் பரேலில் உள்ள இந்தியாபுல்ஸ் நிதி மையம், செவ்ரியில் உள்ள செலஸ்டியா மையத்தில் மற்றும் கஞ்சூர்மார்க்கில் உள்ள லோதா சுப்ரீமஸ் ஆகியவ இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் எஸ்ஆர்எல் டைக்னாஸ்டிக் நிறுவனத்திற்கு சொந்தமானவையாகும்.

தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ்.. புது வகை டெஸ்டிங் லேப்பை கையாளும் பிரபல நிறுவனம்...

இந்த மையங்களில் முன் பதிவின்மூலம் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக சிறப்பு அலைபேசி எண்ணை எஸ்ஆர்எல் டைக்னாஸ்டிக் வெளியிட்டுள்ளது. 1800-222-000 இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களுக்கு பரிசோதனை நேரத்தை பயனர்கள் முன் பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக, வெறும் 10 நிமிடங்களிலேயே பரிசோதனைக்கான மாதிரிகளை இந்த நிறுவனம் சேகரித்துவிடும். அதுவும் காரைவிட்டுகூட இறங்காமலே.

தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ்.. புது வகை டெஸ்டிங் லேப்பை கையாளும் பிரபல நிறுவனம்...

இந்த சேவையின்போது பணியாளர்கள் மற்றும் பயனர்களின் பாதுகாப்பு உறுதி செய்கின்ற வகையில் சில கிருமி நாசினி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இதன் பின்னரே, பரிசோதனைக்கான மாதிரிகள் ஓர் நபரிடம் இருந்து சேகரிக்கப்படும்.

தொடர்ந்து, ஏற்கனவே ஓர் நபர் ட்ரைவ்-த்ரூ லேப்பை அணுகிக் கொண்டிருக்கும் வேலையில் மற்றொருவரை அனுமதிக்கப்படுவதில்லை. தொடர்ந்து, அவர்கள் நகர்ந்த பின்னர் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்த பின்னரே அடுத்த நபர் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளினால் வைரஸ் அடுத்த நபருக்கு பரவுவது முற்றிலுமாக தவிர்க்கப்படும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Gets Three Drive-Thru Testing Facility For COVID-19 Patients. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X