ரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உறைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா..?

குறிப்பிட்ட நகரத்தின் டோல் கட்டணம் வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் உயரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது எந்த நகரத்தில் என்பதுகுறித்த விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உரைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா...?

சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தும் பல்வேறு டோல்கேட்டுகளில் முறைகேடுகள் தற்போதும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றது.

முறைகேடுகள் மற்றும் கட்டணம் செலுத்த நிலவும் அதிக நேரத்தைக் குறைக்கும் விதமாகவே ஃபாஸ்ட்டேக் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டு. இருப்பினும், எந்தவொன்றிற்கும் இத்திட்டம் முழுமையாக பயனளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகின்றது.

ரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உரைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா...?

இந்நிலையில், டோலுக்கான கட்டணத்தை குறிப்பிட்ட மாநிலத்தின் இரு நகரங்களுக்கு இடையே இருக்கும் டோல்பிளாசாக்களில் மட்டும் உயர்த்தவிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலை ஆட்டோ கார் என்ற ஆங்கில தளம் வெளியிட்டிருக்கின்றது. அது வெளியிட்டுள்ள தகவலின்படி, மும்பை-புனே ஆகிய இரு நகரங்களுக்கும் இடையே இருக்கும் டோல்கேட்டுகளில் ரூ. 40 முதல் 280 வரை கட்டணத் தொகை உயரவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உரைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா...?

இதேபோன்று, மும்பை மற்றும் லோனவலா ஆகிய இரு பகுதிகளுக்கும் இடையில் உள்ள டோல்கேட் கட்டணண் உயர்த்தப்பட இருப்பது அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, அங்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் ரூ. 30 முதல் 210 ரூபாய் வரை உயர்த்தப்பட இருக்கின்றது.

தற்போது, மும்பை-லோனவலா டோல் பிளாசாவில் காருக்கு ரூ. 173 கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. புதிய கட்டணத்தின்படி, இது 203 ரூபாயாக உயர இருக்கின்றது.

ரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உரைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா...?

இதேபோன்று, மினி பேருந்துவிற்கு தற்போது வசூலிக்கப்படும் 266 ரூபாய், 315 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, இரு ஆக்ஸல் ட்ரக் வாகனத்திற்கு 370 ரூபாயில் இருந்து 435 ரூபாயாகவும், பேருந்துகளுக்கு 506 ரூபாயில் இருந்து 597 ரூபாயாகவும், இரண்டுக்கு மேற்பட்ட ஆக்ஸல்கள் கொண்ட டிரக்குகளுக்கு 876 ரூபாயில் இருந்து 1,035 ரூபாயாகவும் உயர்த்தப்பட இருக்கின்றது.

ரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உரைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா...?

தொடர்ந்து, கிரேன் மற்றும் பல ஆக்ஸல் அமைப்புடைய வாகனங்களுக்கு ரூ. 1,376 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வாகனங்களுக்கு ரூ. 1,166 மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகின்றது.

வாகனம் புதிய கட்டணம் பழைய கட்டணம் வித்தியாசம்
கார் RS 270 Rs 230 Rs 40
மினி பஸ் Rs 420 Rs 355 Rs 65
ட்ரக் (இரு ஆக்ஸல்) Rs 580 Rs 493 Rs 87
பேருந்து Rs 797 Rs 675 Rs 122
ட்ரக் (பல ஆக்ஸல்) Rs 1,380 Rs 1,168 Rs 212
கிரேன் மற்றும் மற்ற பல ஆக்ஸல் உடைய வாகனங்கள் Rs 1,835 Rs 1,555 Rs 280

மும்பை-லோனவலா டோலைப் போலவே மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு இடையே இருக்கும் டோலில் கட்டணம் உயர்வு அமலுக்கு வரவிருக்கின்றது.

ரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உரைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா...?

இங்கு தற்போது கார்களிடம் இருந்து குறைந்தபட்ச கட்டணாக ரூ. 230 வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதனை ரூ. 270ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று, மினி பேருந்துவிற்கு ரூ. 65ஐ உயர்த்தி 420 ரூபாயாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உரைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா...?

தொடர்ந்து, இரு ஆக்ஸல்களுடைய டிரக்குகளுக்கு ரூ. 87 உயர்த்தப்பட இருக்கின்றது. இதனால் இந்த வகை வாகனங்களிடம் இருந்து 580 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கின்றது. மேலும், பேருந்துகளுக்கு 122 ரூபாயாக உயர்த்தப்பட இருக்கின்றது. இதனால், பேருந்துகளுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 675 என்ற தொகை தற்போது 797 ரூபாயாக மாறியுள்ளது.

ரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உரைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா...?

இதேபோன்று, இரண்டு ஆக்ஸல்களுக்கு அதிகமாக கொண்ட டிரக்குகளுக்கு ரூ. 1,168 இல் இருந்து ரூ. 1,380 ஆகவும், பல ஆக்ஸல்கள் கொண்ட வாகனங்கள் மற்றும் கிரேன்களுக்கு ரூ. 1,555இல் இருந்து ரூ. 1,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டணத் தொகை உயர்வால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். இந்த புதிய கட்டண திட்டம் வருகின்ற ஏப்ரல் மாதம் 1ம் தேதியில் இருந்து இரு குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே டோல்களில் செயல்பாட்டிற்கு வரவிருக்கின்றது.

ரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உரைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா...?
வாகனங்கள் புதிய கட்டணம் பழைய கட்டணம் வித்தியாசம்
கார் RS 203 Rs 173 Rs 30
மினி பேருந்து Rs 315 Rs 266 Rs 49
ட்ரக் (இரு ஆக்ஸல்கள்) Rs 435 Rs 370 Rs 65
பேருந்து Rs 597 Rs 506 Rs 91
ட்ரக் (இரண்டிற்கு மேற்பட்ட ஆக்ஸல்கள்) Rs 1,035 Rs 876 Rs 159
கிரேன் மற்றும் பல ஆக்ஸல்கள் கொண்ட வாகனம் பிற வாகனங்கள் Rs 1,376 Rs 1,166 Rs 210
ரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உரைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா...?

மிக முக்கியமாக, நெடுஞ்சாலைகளைக் கட்டமைக்கவும், வாகனங்கள் சீராக சென்று வருவதற்கான கட்டமைப்புகளை மேற்கொள்ளவே டோல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. ஆனால், டோல்களை குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்கள் முறையாக பராமரிக்காமல், வெறும் லாபத்திற்கான நோக்கிலேயே செயல்படுகின்றது. இதனாலயே வாகன ஓட்டிகள் டோல் கட்டணத்தைச் செலுத்த தயக்கம் காட்டுகின்றனர்.

ரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உரைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா...?

சாலைகளை முறையாக பராமரிக்காத காரணத்தால் அவை ஆபத்தை ஏற்படுத்தும் நுழை வாயிலாக மாறிவிடுகின்றன. தொடர்ந்து, பல்வேறு விபத்துகளுக்கும் காரணகர்த்தாவாக மாறிவிடுகின்றன. இதை நிரூபிக்கின்ற வகையிலேயே தமிழகத்தில் உலுக்கும் விதமாக சமீபத்தில் அவினாசி சாலை விபத்து அரங்கேறியது.

ரூ. 40 முதல் ரூ. 280 வரை உயரும் டோல் கட்டணம்.. உரைந்துபோன வாகன ஓட்டிகள்.. எந்த நகரத்தில் தெரியுமா...?

இதுபோன்ற எண்ணற்ற விபத்துகள் நாள்தோறும் இந்திய சாலைகளில் அரங்கேறிக்கொண்டுதான இருக்கின்றன. ஆனால், அதனை தவிர்க்காமல் அரசும், நெடுஞ்சாலைத்துறையும் வசூல் செய்வதில் மட்டுமே அதிக அக்கறை காட்டி வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai Pune Lonavala Toll Will Get Hike From April 1. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X