கார்களில் சுத்தியல் இருப்பது அவசியம்! ஸ்டெப்னி-ஜாக்கி வச்சிக்க சொல்றீங்க ஓகே, சுத்தியல் எதுக்குங்க?

காரில் சுத்தியல் கட்டாயம் இருக்க வேண்டும் என மும்பை நகராட்சி அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

கார்களில் சுத்தியல் இருப்பது கட்டாயம்... ஸ்டெப்னி, ஜாக்கி இத வச்சுக்க சொல்றீங்க, ஓகே... சுத்தியல் எதுக்குப்பா?

வெகு நாட்களாக அடக்கி வைத்திருந்த கோபத்தைக் கொட்டி தீர்ப்பதைப் போன்று சமீப காலமாக இயற்கை மனிதர்கள் மீது அறிவிக்கப்படாத போரை தொடுத்து வருகின்றது.

ஒரு பக்கம், கொரோனா வைரஸால் இதுவரை காணாத பெரும் இழப்புகளை மனித இனம் சந்திக்க ஆரம்பித்துள்ளது. அதேவேலையில், மறு பக்கம் உணவு பஞ்சத்தை ஏற்படுத்தும் வகையில் பாலைவன விட்டில்கிளிகள் உணவு தானியங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன.

கார்களில் சுத்தியல் இருப்பது கட்டாயம்... ஸ்டெப்னி, ஜாக்கி இத வச்சுக்க சொல்றீங்க, ஓகே... சுத்தியல் எதுக்குப்பா?

இது போதாதென்று புயல் மற்றும் சூறாவளிகளும் அதன் பங்காக அவ்வப்போது நாட்டை தாக்கிய வண்ணம் இருக்கின்றன.

சமீபத்தில் 120 கி,மீட்டருக்கும் அதிகமான வேகத்தில், மேற்கு வங்கத்தையும், அம்மாநிலத்தை ஒட்டியுள்ள பிற மாநிலங்களையும் ஆம்பன் புயல் மிகக் கடுமையாக தாக்கியது.

கார்களில் சுத்தியல் இருப்பது கட்டாயம்... ஸ்டெப்னி, ஜாக்கி இத வச்சுக்க சொல்றீங்க, ஓகே... சுத்தியல் எதுக்குப்பா?

அதில், ஆயிரக் கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்து, புயலுக்கு இரையாகின.

இந்த நிலையில், புதிய புயலான நிசர்கா வட மாநிலங்களான மஹாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் ஆகிய பகுதிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளது.

கார்களில் சுத்தியல் இருப்பது கட்டாயம்... ஸ்டெப்னி, ஜாக்கி இத வச்சுக்க சொல்றீங்க, ஓகே... சுத்தியல் எதுக்குப்பா?

இது கரையை கடக்க ஆரம்பித்துவிட்டதால் மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும்படி அந்தந்த அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

குறிப்பாக, புயல் கரையை கடக்கின்ற நேரத்தில் வீட்டுக்குள்ளேயே தங்கும்படி மஹாராஷ்டிரா அறிவித்துள்ளது.

கார்களில் சுத்தியல் இருப்பது கட்டாயம்... ஸ்டெப்னி, ஜாக்கி இத வச்சுக்க சொல்றீங்க, ஓகே... சுத்தியல் எதுக்குப்பா?

ஒரு வேலை அவசர காரியங்கள் காரணமாக வெளியே செல்ல நேர்ந்தால் அதிக கவனத்துடன் செல்லும்போடி அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மும்பை நகராட்சி, காரில் செல்பவர்களை கையோடு சுத்தியல் ஒன்றை கட்டாயம் எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளது.

கார்களில் சுத்தியல் இருப்பது கட்டாயம்... ஸ்டெப்னி, ஜாக்கி இத வச்சுக்க சொல்றீங்க, ஓகே... சுத்தியல் எதுக்குப்பா?

மக்கள், தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக் கொள்ளும்விதமாக இதனை அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை மும்பை நகராட்சி, அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கார்களில் சுத்தியல் இருப்பது கட்டாயம்... ஸ்டெப்னி, ஜாக்கி இத வச்சுக்க சொல்றீங்க, ஓகே... சுத்தியல் எதுக்குப்பா?

ஏன், மும்பை நகராட்சி காரில் செல்லும்போது சுத்தியலை எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளது? என்ற சந்தேகம் மற்றும் கேள்வி உங்களுக்கு எழும்பலாம்.

புயல் அதி தீவிர வேகத்தில் கரையைக் கடந்து வருவதால் எதிர்பாராத சம்பவங்கள் எது வேண்டுமானாலும் நிகழலாம்.

கார்களில் சுத்தியல் இருப்பது கட்டாயம்... ஸ்டெப்னி, ஜாக்கி இத வச்சுக்க சொல்றீங்க, ஓகே... சுத்தியல் எதுக்குப்பா?

குறிப்பாக, வெள்ளம் சூழ்வதால் மற்றும் மரங்கள் சாய்ந்து கிடப்பதால் காரை விட்டு வெளியேற முடியாத சூழல் உருவாகலாம்.

அதுமாதிரியான சூழ்நிலையில் காரின் கண்ணாடிகளை உடைத்து வெளியேற சுத்தியல் உதவும். இந்த நோக்கத்தினாலயே மும்பை நகராட்சி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கார்களில் சுத்தியல் இருப்பது கட்டாயம்... ஸ்டெப்னி, ஜாக்கி இத வச்சுக்க சொல்றீங்க, ஓகே... சுத்தியல் எதுக்குப்பா?

முன்னதாக, மக்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளேயே முடங்கும்படி சமூக வலைதளம் வாயிலாக கோரிக்கை விடுத்தது. ஆனால், மும்பை ஓர் பிஸியான சிட்டி என்பதால் மக்கள் எப்போதும் ஈசலைப் போல் சுற்றித் திரிந்துக் கொண்டே இருப்பர். இதை உணர்ந்த நகராட்சி பாதுகாப்பு கருவியாக சுத்தியலைக் கையாளும்படி கூறியுள்ளது.

கார்களில் சுத்தியல் இருப்பது கட்டாயம்... ஸ்டெப்னி, ஜாக்கி இத வச்சுக்க சொல்றீங்க, ஓகே... சுத்தியல் எதுக்குப்பா?

தொடர்ந்து, சுத்தியல் அல்லது கூர்மையான ஏதேனும் ஒரு உபகரணத்தை பயன்படுத்தலாம் என அது தெரிவித்துள்ளது. மேலும், இவற்றை காரில் வைக்கும்போது பாதுகாப்பான மற்றும் மிக விரைவில் எடுக்கும்படியான இடத்தில் வைக்கவும் அது கூறியிருக்கின்றது.

கார்களில் சுத்தியல் இருப்பது கட்டாயம்... ஸ்டெப்னி, ஜாக்கி இத வச்சுக்க சொல்றீங்க, ஓகே... சுத்தியல் எதுக்குப்பா?

ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் மும்பை அதிகச் சேதத்தைச் சந்தித்து வருகின்றது. எனவே, முந்தைய காலங்களில் அதிக பாடங்களை மும்பையும், அந்நகர வாசிகளும் இயற்கையிடம் இருந்துக் கற்றிருக்கின்றனர். இதனடிப்படையிலேயே பாதுகாகப்பு கருவியாக குறிப்பிட்ட ஆயுதங்களைக் காரில் பயன்படுத்தும்படி மக்களுக்கு நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கார்களில் சுத்தியல் இருப்பது கட்டாயம்... ஸ்டெப்னி, ஜாக்கி இத வச்சுக்க சொல்றீங்க, ஓகே... சுத்தியல் எதுக்குப்பா?

காரின் கதவுகள் வெள்ளம் மற்றும் மரங்களினால் மட்டுமே திறக்கு முடியாத நிலைக்குச் செல்லும் என நினைத்துக் கொள்ள வேண்டாம். அதிக நீர் சூழ்ந்த பகுதிகளில் கார் நுழையும்போது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் செயலிழக்க நேரிடும்.

கார்களில் சுத்தியல் இருப்பது கட்டாயம்... ஸ்டெப்னி, ஜாக்கி இத வச்சுக்க சொல்றீங்க, ஓகே... சுத்தியல் எதுக்குப்பா?

அதுமாதிரியான நேரங்களில் காரை ஸ்டார்ட் செய்வது மற்றும் கதவுகளை திறப்பது மிகவும் சிரமமானதாக மாறிவிடும். மேலும், நீண்ட நேரம் காரிலேயே தங்குகின்ற சூழ்நிலை ஏற்படும். இதுமாதிரியான நேரங்களில் உதவி கிடைப்பது அரிதினும் அரிது. எனவே, சுத்தியல் போன்ற கூர்மையான கருவிகளை வைத்திருப்பது ஜன்னல், கதவு அல்லது சன் ரூஃப்களை உடைத்து வெளியேர உதவியாக இருக்கும்.

கார்களில் சுத்தியல் இருப்பது கட்டாயம்... ஸ்டெப்னி, ஜாக்கி இத வச்சுக்க சொல்றீங்க, ஓகே... சுத்தியல் எதுக்குப்பா?

பிறர் உதவியையும் நாட வேண்டிய அவசியம் இருக்காது. இதுமாதிரியான உபகரணங்கள் இல்லாத காரணத்தால் பலர் இதற்கு முன்பாக தங்களின் இன்னுயிரை பேரிடர் காலங்களில் விட்டிருக்கின்றனர். எனவேதான், மும்பை நகராட்சி மக்களை வெளியே செல்லும்போது சுத்தியலைக் கட்டாயம் கார்களில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Municipality Of Mumbai Requested The Citizens To Keep A Hammer Inside The Car. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X