Just In
- 52 min ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 2 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 13 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 14 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
Don't Miss!
- News
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தடுப்பூசி
- Sports
3 விக்கெட்டுகள்... அரைசதம்... இந்திய அணியை தூக்கி நிறுத்திய இளம்வீரர்கள்.. செம ட்விஸ்ட்!
- Movies
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மலைப்பாதையில் சோதனை ஓட்டம்!! காரின் சஸ்பென்ஷன் அமைப்பை சோதிக்கும் ஜீப்
புனேக்கு அருகே 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபியட் க்றைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் மிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை கடந்த வாரத்தில் சீனாவில் நடைபெற்ற குவாங்சோ சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தியது.

அப்டேட் செய்யப்பட்ட நடுத்தர அளவு எஸ்யூவி சீன சந்தையில் விரைவில் இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதனை தொடர்ந்து ஐரோப்பிய சந்தைக்கு இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் செல்லவுள்ளது.

இந்தியாவில் காம்பஸின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த 2021 மாடலை சாலை சோதனைகளில் ஜீப் கடந்த சில மாதங்களாக உட்படுத்தி வருகிறது. இந்த வகையில் 2021 காம்பஸின் சோதனை மாதிரி ஒன்று புனே நகரத்திற்கு அருகே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்லேன் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் சோதனை ஓட்டம் புனே நகரத்திற்கு வெளியே மலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை தெளிவாக பார்க்க முடிகிறது. இதில் இருந்து காரின் டைனாமிக் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புகளை ஜீப் சோதித்து இருப்பது தெளிவாகிறது.

மேலும் இந்த சோதனையின் மூலம் காரின் ஸ்டேரிங் செட்அப் குறித்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஒரு ஐடியா கிடைத்திருக்கும். இத்தகைய மலை பாதைகளில் காரின் டயரின் அளவும் முக்கியமானதாகும். அதேபோல் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் மலைப்பாதைகளுக்கான கண்ட்ரோல் போன்ற எலக்ட்ரானிக் தொகுப்புகளும் இவ்வாறான பயணங்களின்போது காருக்கு பெரிதும் உதவும்.

முந்தைய சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக 2021 காம்பஸ் சுற்றிலும் காஸ்மெட்டிக் அப்கிரேட்கள் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட கேபினை பெற்றிருந்ததை பார்த்திருந்தோம். குறிப்பாக க்ரோம் உள்ளீடுகளுடன் புதிய டிசைனில் 7-ஸ்லாட் க்ரில் அமைப்பை இந்த 2021 மாடலில் ஜீப் வழங்கியுள்ளது.

முன்பக்க பம்பரும் மறுவேலை செய்யப்பட்டுள்ளது. இது 2021 மாடலில் எல்இடி டிஆர்எல்களுக்கென தனித்தனியாக குழிகள் இல்லாமல் வழங்கப்படவுள்ளது. பக்கவாட்டில் அலாய் சக்கரங்களின் டிசைன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் ப்ரீமியம் தோற்றத்திற்காக இரட்டை தையல்களுடன் லெதர் ட்ரிம்-ஐ ஏற்றுள்ளது.

உட்புறத்தில் மிக முக்கிய அட்டேட்டாக பெரிய அளவில் 10.1 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படவுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகளை ஏற்கனவே கொண்டிருக்கும் இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் புதியதாக எஃப்சிஏவின் லேட்டஸ்ட் யு-கனெட் 5 தொழிற்நுட்ப வசதியுடன் கொடுக்கப்படவுள்ளது.

மற்றப்படி 2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. தற்போதைய 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின்கள் தான் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன. இதில் பெட்ரோல் என்ஜின் 163 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

டர்போ டீசல் என்ஜின் மூலம் 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக பெற முடியும். இந்த இரு என்ஜின்களுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் நிலையாக வழங்கப்படுகிறது. அதுவே பெட்ரோல் என்ஜினிற்கு கூடுதல் தேர்வாக 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸும், டீசல் என்ஜினிற்கு 9-ஸ்பீடு டார்க் கன்வெர்டரும் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே கூறியதுதான், புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் அடுத்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் இருக்கும். வழக்கம்போல் விற்பனையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் காருக்கு ஸ்கோடா கரோக் மற்ரும் ஹூண்டாய் டக்ஸன் போட்டியாக விளங்கவுள்ளன.