புதிய அபெக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் கார்... இதன் ரேஞ்சும், விலையும் அசத்துதே!

அட்டகாசமான எலெக்ட்ரிக் சூப்பர் கார் மாடலை அபெக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் விற்பனைக்கு செல்ல இருக்கும் இந்த சூப்பர் கார் அதிக ரேஞ்ச் மற்றும் சரியான பட்ஜெட்டில் வர இருக்கிறது.

அட்டகாசமான புதிய அபெக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அபெக்ஸ் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் சூப்பர் கார் மாடலை தயாரித்துள்ளது. அபெக்ஸ் ஏபி-0 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த சூப்பர் கார் வாடிக்கையாளர்களை கவரும் ஏராளமான சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

அட்டகாசமான புதிய அபெக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

இந்த எலெக்ட்ரிக் சூப்பர் கார் மிக இலகுவான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கார்பன் ஃபைபர் பாடி பேனல்கள், இலகுவான சேஸீயின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

அட்டகாசமான புதிய அபெக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

இலகுவான கட்டமைப்புக்கு தக்கவாறு, மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்திலும் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்சக்கரங்களுக்கு பின்புறமாக எதிர்காற்றை காருக்கு கீழே செலுத்தும் விசேஷ அமைப்பை பெற்றிருப்பதால், அதிக தூரம் இந்த எலெக்ட்ரிக் கார் பயணிப்பதற்கு உறுதி செய்கிறது.

அட்டகாசமான புதிய அபெக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

அதாவது, வெறும் 1,200 கிலோ எடையுடைய இந்த கார் மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தை பெற்றிருப்பதால், பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 515 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

அட்டகாசமான புதிய அபெக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 306 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது.

அட்டகாசமான புதிய அபெக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

இந்த சூப்பர் காரில் 90kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி வெறும் 550 கிலோ மட்டுமே எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அட்டகாசமான புதிய அபெக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

மேலும், இந்த பேட்டரியானது அதிகபட்சமாக 650 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை மின்மோட்டார்களுக்கு வழங்கும். அதேபோன்று, அதிகபட்சமாக 580 என்எம் அளவுக்கு டார்க் திறனை அளிக்க வல்லதாக குறிப்பிடப்படுகிறது. எனவே, இது மிகவும் திறன் வாய்ந்த பேட்டரி தொகுப்பாக இருக்கும்.

அட்டகாசமான புதிய அபெக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

புதிய அபெக்ஸ் ஏபி-0 எலெக்ட்ரிக் சூப்பர் கார் 1.50 லட்சம் பவுண்ட் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.1.36 கோடி விலையாக இருக்கும். பிற சூப்பர் கார் மாடல்களுடன் ஒப்பிடும்போது, இந்த எலெக்ட்ரிக் சூப்பர் காரின் விலை மிகவும் குறைவு என்பது வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விஷயமாக இருக்கும்.

அட்டகாசமான புதிய அபெக்ஸ் எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

வரும் 2022ம் ஆண்டு இந்த எலெக்ட்ரிக் சூப்பர் கார் உற்பத்திக்கு செல்லும். உலக அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். முன்பதிவு செய்வோருக்கு, இந்த கார் சம்பந்தப்பட்ட நாட்டை சேர்ந்த வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
UK based Apex has revealed all-new electric supercar AP-0 and it will be shipped to customers from the UK to worldwide.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X