மலிவான எஸ்யூவி காரை தொடர்ந்து ஆடியின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் கார்... அடுத்த மாதம் அறிமுகமா..?

ஆடி இந்தியா நிறுவனம் அதன் புதிய தயாரிப்பை பற்றிய டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மலிவான எஸ்யூவி காரை தொடர்ந்து ஆடியின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் கார்... அடுத்த மாதம் அறிமுகமா..?

ஆடி நிறுவனம் சமீபத்தில்தான் முற்றிலும் புதிய ஆரம்ப நிலை காராக க்யூ2 எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது. இணையம் வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் தான் தற்சமயம் ஆடி இந்தியாவில் விற்பனை செய்யும் மலிவான காராகும்.

மலிவான எஸ்யூவி காரை தொடர்ந்து ஆடியின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் கார்... அடுத்த மாதம் அறிமுகமா..?

இந்த நிலையில் இதன் அறிமுக நிகழ்ச்சியின் இறுதியில் அடுத்த அறிமுக மாடலின் டீசர் வீடியோவை ஆடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த வீடியோவில் முழு காரும் அவ்வளவு தெளிவாக காட்டப்படவில்லை.

மலிவான எஸ்யூவி காரை தொடர்ந்து ஆடியின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் கார்... அடுத்த மாதம் அறிமுகமா..?

இந்த கார் 4-கதவு செடான் என்பதை மட்டுமே எங்களால் அறிய முடிந்தது. மொத்த காரையும் பார்க்க முடியவில்லை என்றாலும், சில பேனல்கள் நம் கண்ணில் படுகின்றன. அவற்றை வைத்து பார்க்கும்போது இது ஆடியின் எஸ்5 ஸ்போர்ட்பேக் காராக இருக்க வாய்ப்புள்ளது.

மலிவான எஸ்யூவி காரை தொடர்ந்து ஆடியின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் கார்... அடுத்த மாதம் அறிமுகமா..?

அதுவும் பெரிய தேன்க்கூடு வடிவிலான க்ரில் மற்றும் அதன் இரு புறங்களிலும் எல்இடி ஹெட்லேம்ப்களை பார்த்த பிறகு தான் இது ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் காராக இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு வெகுவாக எழுகிறது. மிகவும் குறைவாகவே காட்டப்பட்டுள்ள 19 இன்ச் அலாய் சக்கரங்களின் டிசைனும் இந்த சந்தேகத்திற்கு ஏற்றாற்போல் தான் உள்ளது.

மலிவான எஸ்யூவி காரை தொடர்ந்து ஆடியின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் கார்... அடுத்த மாதம் அறிமுகமா..?

இந்த டீசர் க்யூ2 எஸ்யூவி காரின் அறிமுக நிகழ்ச்சியில் வெளியிட்டு பேசிய ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாபிர் சிங் டில்லோன் இந்த புதிய மாடல் இந்த வருடத்தில் அறிமுகமாகவுள்ளது என தெரிவித்தார். இதனால் புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் வரும் தீபாவளி பண்டிகைக்காக அடுத்த 2020 நவம்பர் மாதத்திற்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம்.

மலிவான எஸ்யூவி காரை தொடர்ந்து ஆடியின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் கார்... அடுத்த மாதம் அறிமுகமா..?

மற்ற சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்கின் லேட்டஸ்ட் வெர்சன் கடந்த 2019ல் நடைபெற்ற பிராங்பேர்ட் மோட்டார் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டது. ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக வெளிவந்த இதன் புதிய தலைமுறை கார் அப்டேட் செய்யப்பட்ட முன் பக்கத்துடன் முன்பை விட ஸ்போர்டியர் தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மலிவான எஸ்யூவி காரை தொடர்ந்து ஆடியின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் கார்... அடுத்த மாதம் அறிமுகமா..?

எல்இடி ஹெட்லேம்ப்களை பெற்றுவரும் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் அதேபோல் அப்டேட்டான டிசைனில் எல்இடி டெயில்லைட்களையும் கொண்டுள்ளது. வெளிப்புறத்தின் ஸ்போர்ட்டியரான டிசைன் காரின் உட் பகுதிகளுக்கும் தொடரப்பட்டுள்ளது. இதன் கேபின் விர்டியுவல் காக்பிட், பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

மலிவான எஸ்யூவி காரை தொடர்ந்து ஆடியின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் கார்... அடுத்த மாதம் அறிமுகமா..?

உலகளவில் ஆடி எஸ்5 ஸ்போர்ட்கார் 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்திய சந்தைக்கு 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மட்டும்தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 330 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

மலிவான எஸ்யூவி காரை தொடர்ந்து ஆடியின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் கார்... அடுத்த மாதம் அறிமுகமா..?

அதுமட்டுமில்லாமல் ஆடியின் 4-சக்கர-ட்ரைவ் ‘குவாட்ரோ' தொழிற்நுட்பமும் இந்த ஸ்போர்ட்பேக் காரில் வழங்கப்படுகிறது. எஸ்5 ஸ்போர்ட்பேக் இந்த வருடத்தில் அறிமுகமானால் 2020ல் அறிமுகமாகும் ஆறாவது ஆடி காராக இது விளங்கும். விற்பனையில் எஸ்5 மாடலுக்கு மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி43 போட்டியாக உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi S5 Sportback India Launch Teased
Story first published: Saturday, October 17, 2020, 21:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X