Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 11 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
சட்டசபை தேர்தலில் திமுக அணிக்கு 1.7% தான் கூடுதல் வாக்குகளாம்- எச்சரிக்கும் ஏபிபி- சி வோட்டர் சர்வே
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நெஞ்சை கொள்ளை கொள்ளும் பென்ட்லீ பென்டைகா ஃபேஸ்லிஃப்ட்... படங்களுடன் தகவல்கள்!
அசத்தும் டிசைன், அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. படங்களுடன், விபரங்களை தொடர்ந்து காணலாம்.

சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பி வாங்கப்படும் மாடலாக பென்ட்லீ பென்டைகா உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பென்ட்லீ பென்டைகா எஸ்யூவிக்கு உலக அளவில் அதிக வரவேற்பு இருக்கிறது. இதுவரை 20,000 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அசத்தும் டிசைன், பிரிமீயமான இன்டீரியர், சொகுசு வசதிகளுடன் பெரும் பணக்கார வாடிக்கையாளர்களின் கனவு மாடலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த ரக எஸ்யூவி மார்க்கெட்டில் சந்தைப் போட்டி அதிகரித்து வருவதுடன், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக புதிய பொலிவுடன் பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட் எனப்படும் இடைக்கால புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு சந்தைக்கு வர இருக்கிறது. இந்த மாடலின் படங்கள், தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது பென்ட்லீ நிறுவனம்.

2021 ஆண்டு மாடலாக குறிப்பிடப்படும் புதிய பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியில் டிசைன் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பென்ட்லீ கான்டினென்ட்டல் ஜிடி மற்றும் ஃப்ளையிங் ஸ்பர் ஆகிய கார்களின் டிசைன் அம்சங்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. பம்பர் அமைப்பு முரட்டுத்தனத்தை கூட்டும் விதத்தில் டிசைன் மாறுதல்களை சந்தித்துள்ளது.

புதிய மாடலில் எல்இடி டெயில் லைட்டுகள், க்வாட் சைலென்சர் அமைப்பு, டெயில் கேட்டில் அதிக வசீகரத்தை கொடுக்கும் பென்ட்லீ லோகா ஆகியவை இந்த காரின் பின்புறத்தை மிக கவர்ச்சியாக காட்டுகிறது. புதிய டிசைனில் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

ஐரோப்பிய மார்க்கெட்டில் இதுவரை வழங்கப்பட்ட W12 எஞ்சின் தேர்வு விலக்கப்படுகிறது. இனி புதிய பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியில் 4.0 வி8 ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு மட்டுமே வழங்கப்படும். இந்த எஞ்சின் 542 பிஎச்பி பவரையும், 770 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் சக்தியானது அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தையும் பெற்றிருக்கிறது. புதிய வி6 பெட்ரோல் ஹைப்ரிட் எஞ்சின் தேர்வும் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் பின்புற இருக்கை மேலும் சவுகரியமானதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பின் இருக்கையை தற்போதைய மாடலைவிட அதிகமாக சாய்த்துக் கொள்ள முடியும் என்பதுடன், கால் வைக்கும் பகுதியின் இடவசதியும் 100 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியில் வென்டிலேட்டட் இருக்கைகள், கழற்றிக் கொள்ளும் வசதியுடன் 5.0 அங்குல டேப்லெட் கம்ப்யூட்டர் வழங்கப்படுகிறது. தவிரவும், 10.9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இடம்பெறுகிறது. வயர்லெஸ் போன் சார்ஜர் வசதியும் உள்ளது. இரண்டு விதமான ஆடியோ சிஸ்டம் தேர்வு உள்ளது. 20 ஸ்பீக்கர்களுடன் 1,780 வாட் திறன் கொண்ட பிரிமீயம் ஆடியோ சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த எஸ்யூவி 4, 5 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட தேர்வுகளில் கிடைக்கும். ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து, அடுத்த ஆண்டு இந்தியாவில் புதிய பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.