தீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் இந்திய அறிமுகம் குறித்த நம்பத்தகுந்த தகவல் வெளியாகியுள்ளது. அதனை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

தீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...

புதிய 2-சீரிஸ் செடான் கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எண்ட்ரீ-லெவல் செடான் காராக 3 சீரிஸ் செடானிற்கு கீழே நிலை நிறுத்தப்படவுள்ளது. இந்த கூபே ரக கார் பிராண்டின் உலகளாவிய புதிய தயாரிப்பு மாடல்களில் முக்கியமானதாகும்.

தீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...

இந்த நிலையில்தான் புதிய 2-சீரிஸ் க்ரான் கூபேவின் இந்திய அறிமுகம் வருகிற அக்டோபர் 15ஆம் தேதியில் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019 நவம்பர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகமான இந்த செடான் கார் நிறுவனத்தின் மாடுலர் ஃபார் (FAAR) ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...

முன் சக்கர ட்ரைவ் உள்ளமைவு உடன் கொண்ட காராக உருவாக்க பயன்படுத்தப்பட்ட இந்த ஃபார் ப்ளாட்ஃபாரத்தை பிஎம்டபிள்யூ க்ரூப்பின் மற்றொரு பிராண்டான மினி வரையறுத்துள்ளது. இதன் காரணமாக உட்புறத்தில் அதிக இட வசதியும், குறைவான தயாரிப்பு செலவையும் கொண்டுவர முடிந்ததாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...

பிஎம்டபிள்யூ 2-சீரிஸ் க்ரான் கூபேவின் நீளம் 4,526மிமீ, அகலம் 1,800மிமீ, உயரம் 1,420மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 2,670மிமீ நீளத்தில் உள்ளது. இந்த பிஎம்டபிள்யூ செடான் காருக்கு முக்கிய போட்டி மாடலாக விளங்கவுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-க்ளாஸை காட்டிலும் 59மிமீ நீளமான வீல்பேஸை இந்த கார் கொண்டுள்ளது.

தீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...

சர்வதேச சந்தையில் 2 சீரிஸ் க்ரான் கூபேவில் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய‘220டி' 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதனுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆனால் இதன் இந்திய வெர்சனில் வெறும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மட்டுமே பொருத்தப்படும்.

தீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...

பிஎம்டபிள்யூ 8-சீரிஸ் க்ரான் கூபேவில் இருந்து டிசைன் அமைப்பை பெற்றுள்ள இந்த செடான் காரின் முன்புறத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல்களுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், கிட்னி வடிவில் பெரிய க்ரில், எல்இடி மூடுபனி விளக்குகள் மற்றும் ஸ்போர்டியான தோற்றத்தில் தாழ்வாக காற்று ஏற்பான் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

தீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...

பின்புறத்தில் சறுக்கலான மேற்கூரையுடன் பூட் லிட், இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் மற்றும் 8-சீரிஸ் க்ரான் கூபேவின் எல்இடி டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவையும் உள்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு ஒன்று, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று என இரு பெரிய திரைகளையும் முக்கிய அம்சமாக இந்த பிஎம்டபிள்யூ கார் கொண்டுள்ளது.

தீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...

இதனுடன் பிஎம்டபிள்யூவின் லேட்டஸ்ட் ஐட்ரைவ் சிஸ்டத்துடன் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலம் காரை கண்ட்ரோல் செய்யும் வகையில் பிராண்டின் இணைப்பு தொழிற்நுட்பத்தையும் இந்த செடான் கார் பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளியை சிறப்பிக்க வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... மெர்சிடிஸ் ஏ-கிளாஸுக்கு போட்டி...

உட்புறத்தில் மற்ற அம்சங்களாக பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி, வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜிங் உள்ளிட்டவை உள்ளன. இந்தியாவில் 2-சீரிஸ் க்ரான் கூபே கார் குறிப்பிட்ட சில டீலர்ஷிப்களில் மட்டுமே கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிஎம்டபிள்யூ செடானின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.33 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம்.

Most Read Articles
English summary
BMW 2 Series Gran Coupe India Launch Timeline Revealed: To Rival Mercedes-Benz A-Class
Story first published: Wednesday, September 30, 2020, 1:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X