பட்ஜெட் சொகுசு கார் பிரியர்களுக்கு பக்கா சாய்ஸ்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே கார் அறிமுகம்!

கவர்ச்சிகரமான பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விலை குறைவான கார் மாடலாக இது வந்துள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே கார் இந்தியாவில் அறிமுகம்!

கடந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் ஓர் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 கதவுகள் அமைப்புடைய கூபே கார் மார்க்கெட்டில் இது தனித்துவமான தேர்வாக வந்துள்ளது.

 பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே கார் இந்தியாவில் அறிமுகம்!

இந்தியாவில் விலை குறைவான பிஎம்டபிள்யூ கார் மாடல் இதுதான். ஆடி ஏ3 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ ஆகிய ஆரம்ப விலை சொகுசு செடான் கார்களுக்கு இது நேரடி போட்டியாக அமையும். இதுவரை இந்த ரகத்தில் சரியான கார் மாடல் இல்லாத குறையையும் இந்த கார் மூலமாக பிஎம்டபிள்யூ போக்கிக் கொண்டுள்ளது.

 பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே கார் இந்தியாவில் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே கார் ஸ்போர்ட் லைன் மற்றும் எம் ஸ்போர்ட் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இதில், எம் ஸ்போர்ட் மாடலில் அதிக வசீகரம் கொடுக்கும் வகையில் அலங்கார அம்சங்கள் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் இடம்பெற்றுள்ளன.

 பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே கார் இந்தியாவில் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே காரில் பாரம்பரியமான இரட்டை சிறுநீரக வடிவிலான க்ரில் அமைப்பு முகப்பை பிரதானமாக ஆக்கிரமித்துள்ளதுடன், வசீகரத்தையும் கொடுக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், L-வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள், ஸ்போர்ட் லைன் வேரியண்ட்டில் 17 அங்குல சக்கரமும், எம் ஸ்போர்ட் வேரியண்ட்டில் 18 அங்குல சக்கரமும் உள்ளன. இதன் தாழ்ந்து முடியும் கூரை அமைப்புடன் கூபே வடிவிலான தோற்றம் தனித்துவமாக இருக்கிறது.

 பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே கார் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பிஎம்டபிள்யூ ஐ-ட்ரைவ் செயலியில் இயங்கும்.

 பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே கார் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரில் டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி, டிரைவிங் அசிஸ்டென்ட் தொழில்நுட்பம் ஆகியவையும் இந்த காருக்கு மதிப்பு சேர்க்கின்றன. எம் ஸ்போர்ட் வேரியண்ட்டில் விசேஷ இன்டீரியர் தீம் வழங்கப்பட உள்ளது.

 பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே கார் இந்தியாவில் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பின்னர் பெட்ரோல் மாடலையும் கொண்டு வருவதற்கு பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

 பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே கார் இந்தியாவில் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே காரின் 220டீ ஸ்போர்ட் லைன் வேரியண்ட்டிற்கு ரூ.39.3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், எம் ஸ்போர்ட் வேரியண்ட்டிற்கு ரூ.41.4 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு ரூ.50,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது.

Most Read Articles

English summary
BMW has launched much awaited 2 Series Grand Coupe car in India and prices starting at Rs.39.30 lakh (Ex-Showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X