2021 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் தோற்றம் இணையத்தில் முதன்முறையாக வெளியீடு...

அடுத்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் மாடலின் தோற்றம் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய தலைமுறையினால் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை பெற்றுள்ள இந்த புதிய பிஎம்டபிள்யூ செடான் காரை பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

 2021 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் தோற்றம் இணையத்தில் முதன்முறையாக வெளியீடு...

இணையத்தில் வெளியாகியுள்ளதன் மூலம் சர்வதேச சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய 5 சீரிஸ் மாடல் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனினால் வெளிப்புறத்தில் அப்டேட்டை பெற்றது மட்டுமில்லாமல் புதிய ஹைப்ரீட் என்ஜின் தேர்வையும் ஏற்றுள்ளது.

 2021 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் தோற்றம் இணையத்தில் முதன்முறையாக வெளியீடு...

வெளிப்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பெரும்பான்மையான மாற்றங்கள் இந்த காரின் முன்புறத்தில் தான் உள்ளன. இந்த வகையில் இந்த செடான் கார் திருத்தியமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் முன்பை விட நேர்த்தியாகவும், பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய L-வடிவிலான விளக்குகளையும் கொண்டுள்ளது.

மற்றொரு கவனிக்கத்தக்க மாற்றமாக ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட க்ரோம்களுடன் கிட்னி வடிவிலான அகலமான மற்றும் தாழ்வான க்ரில் வழங்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள பம்பர் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் காணப்படுகிறது.

 2021 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் தோற்றம் இணையத்தில் முதன்முறையாக வெளியீடு...

எல்இடி தரத்தில் டெயில்லைட்களை பெற்றுள்ள இந்த செடான் கார் தற்போதைய மாடலை காட்டிலும் கூடுதலாக காற்று இயக்கவியலுக்கு இணக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 2021 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புற கேபின் தற்போதைய மாடலை தான் தோற்றத்தில் பெருமளவு ஒத்து காணப்படுகிறது.

MOST READ: மழைகாலங்களில் நீரினால் வாகனங்கள் பாதிப்படையாமல் தடுப்பது எப்படி..? எளிய முறைகள் இதோ...

 2021 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் தோற்றம் இணையத்தில் முதன்முறையாக வெளியீடு...

இருப்பினும் ஏழாம் தலைமுறை பிஎம்டபிள்யூ ஐட்ரைவ் ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட சில திருத்தியமைக்கப்பட்ட மெட்ரீயல்களை நிச்சயம் இந்த 2021 மாடலில் எதிர்பார்க்கலாம். அதேபோல் இந்த இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் 10 இன்ச் மற்றும் 12.3 இன்ச் திரைகளை தேர்வுகளாக கொண்டிருக்கலாம்.

 2021 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் தோற்றம் இணையத்தில் முதன்முறையாக வெளியீடு...

என்ஜின் அமைப்பிற்கு வழக்கமான தேர்வுகளுடன் புதியதாக இதன் டாப் வேரியண்ட்டில் 545இ மோனிக்கெர் ஹைப்ரீட் சிஸ்டம் இணைந்துள்ளது. 6-சிலிண்டர் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ஹைப்ரீட் சிஸ்டம் கிட்டத்தட்ட 400 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

 2021 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் தோற்றம் இணையத்தில் முதன்முறையாக வெளியீடு...

அதாவது இதன் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 286 பிஎச்பி பவரையும், எலக்ட்ரிக் மோட்டார் 109 பிஎச்பி பவரையும் வழங்கக்கூடியவை. இதனால் இவை இரண்டையும் இணைத்து கொடுக்கப்படும் 545இ எக்ஸ்ட்ரைவ் ப்ளக்-இன் ஹைப்ரீட் சிஸ்டத்தின் மூலமாக 394 பிஎச்பி பவரை பெற முடியும். முழு எலக்ட்ரிக் மோடில் காரை 57 கிமீ வரை இயக்க முடியும்.

 2021 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் தோற்றம் இணையத்தில் முதன்முறையாக வெளியீடு...

அதேநேரம் 5 சீரிஸின் தற்போதைய தலைமுறை காரில் வழங்கப்பட்டு வருகின்ற 530இ என்ஜினும் தக்க வைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் செடான் காரில் புதிய ஹைப்ரீட் என்ஜின் தேர்வை எதிர்பார்க்க முடியாது என்று தான் கூறப்படுகிறது.

 2021 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் தோற்றம் இணையத்தில் முதன்முறையாக வெளியீடு...

இதனால் புதிய 5 சீரிஸ் செடான் காரும் 530ஐ, 520டி மற்றும் 530டி என்ற தோற்றங்களில் தான் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இதன் பெட்ரோல் வேரியண்ட்டில் பொருத்தப்படுகின்ற 2.0 லிட்டர் என்ஜின் 251 பிஎச்பி பவரையும், பேஸ் வேரியண்ட்டில் வழங்கப்படுகின்ற 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 190 பிஎச்பி பவரையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்குகிறது.

 2021 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் தோற்றம் இணையத்தில் முதன்முறையாக வெளியீடு...

5 சீரிஸ் மாடலின் பெரிய அளவிலான 3.0 லிட்டர் என்ஜின் தற்சமயம் 285 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. புதிய 5 சீரிஸ் மாடலுக்கும் வழங்கப்பட்டுள்ள இந்த என்ஜின் தேர்வுகள் அனைத்தும் மில்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்தின் மூலமாக இயங்கவுள்ளன.

 2021 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் தோற்றம் இணையத்தில் முதன்முறையாக வெளியீடு...

சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வந்த பின்பு இந்திய சந்தைக்கு வரவுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ், ஆடி ஏ6, வால்வோ எஸ்90 மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் போன்ற செடான் கார்கள் போட்டியாக உள்ளன.

Most Read Articles
English summary
2021 BMW 5 Series sedan debuts ahead of India launch
Story first published: Friday, May 29, 2020, 0:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X