பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் மாடலின் புதிய கோல்டன் தண்டர் எடிசன்.. செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது...

பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் தனித்துவமான மாடலான 8 சீரிஸ் ஸ்போர்ட்ஸ் கூபே காருக்கு லாவிஷ் தோற்றத்தில் புதிய கோல்டன் தண்டர் எடிசன் காரை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் மாடலின் புதிய கோல்டன் தண்டர் எடிசன்.. செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது...

வருகிற செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு கிடைக்கவுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் மாடிஃபைடு பணிகள் அனைத்தும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சுதந்திரமான செயல்பாட்டின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் மாடலின் புதிய கோல்டன் தண்டர் எடிசன்.. செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது...

இந்த செயல்பாட்டின் நீட்சியாக தான் இந்நிறுவனம் அதன் தயாரிப்பு மாடல்களில் பெயிண்ட் மற்றும் ட்ரிம் தேர்வுகளை கொண்டு வருகிறது. கோல்டன் தண்டர் எடிசன் ஆனது 8 சீரிஸ் மாடலின் கூபே, கன்வெர்டிபிள் மற்றும் க்ரான் கூபே என அதன் அனைத்து வெர்சன்களிலும் கிடைக்கும்.

பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் மாடலின் புதிய கோல்டன் தண்டர் எடிசன்.. செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது...

பெயருக்கு ஏற்றாற்போல் இந்த ஸ்பெஷல் எடிசனின் பல பகுதிகளில் தங்க நிறம் மின்னுகிறது. ஆனால் கருப்பு நிறமானது சபையர் கருப்பு மற்றும் உறைந்த கருப்பு என்ற இரு தேர்வுகளில் வழங்கப்படவுள்ளது.

பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் மாடலின் புதிய கோல்டன் தண்டர் எடிசன்.. செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது...

தங்க நிறம் ஆனது தையல் போன்ற லைனில் முன்புற கவசத்தில் இருந்து ஆரம்பித்து, ஸ்கிர்ட்ஸ் வழியாக பின்புற கவசத்தில் முடிவடைகிறது. இதேபோல் பக்கவாட்டு கண்ணாடிகளின் மூடிகள், ரியர் ஸ்பாய்லர் மற்றும் 20-இன்ச் ட்யூல்-ஸ்போக்டு எம்-லைட்-அலாய் சக்கரங்களிலும் கோல்ட் நிறம் வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் மாடலின் புதிய கோல்டன் தண்டர் எடிசன்.. செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது...

உட்புறத்தில் மெரினோ லெதர் ட்ரிம் ஆனது முன்புற ஹெட்ரெஸ்ட்டில் "எடிசன் கோல்டன் தண்டர்" என்ற குறிப்புடன் உள்ளது. கூபே மற்றும் க்ரான் கூபே வெர்சன்கள் ஆந்த்ராசைட் அல்காண்ட்ரா ரூஃப் லைனரையும் தங்க நிறத்தில் பெற்றிருக்கும்.

இவற்றுடன் சில கண்ட்ரோல்களை விவரிக்கும் விதமாக தெளிவாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடி மற்றும் கேபினை சுற்றிலும் பொவர்ஸ் & வில்கின்ஸ் டைமண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் பெறவுள்ளது.

பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் மாடலின் புதிய கோல்டன் தண்டர் எடிசன்.. செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது...

கோல்டன் தண்டர் எடிசன் 8 சீரிஸ் மாடலின் அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்படவுள்ளதால், 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்லைன்-6 சிலிண்டர் பெட்ரோல்/ டீசல் என்ஜின் தேர்வில் இருந்து 4.4 லிட்டர் இரட்டை-டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் தேர்விலும் கிடைக்கும். மற்றப்படி இந்த ஸ்பெஷல் எடிசனின் விலையை பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை.

Most Read Articles

English summary
BMW 8 Series Golden Thunder Edition
Story first published: Wednesday, June 24, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X