பென்ஸ் ஜிஎல்ஏ காருக்கு செம்ம டஃப்... குறைந்த விலை எக்ஸ்1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ...

பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் மிகப்பெரிய போட்டியாளான விளங்கும் பென்ஸ் நிறுவனத்தின் பிரபல ஜிஎல்ஏ சொகுசு காருக்கான போட்டியாளனை அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பென்ஸ் ஜிஎல்ஏ காருக்கு செம்ம டஃப்... குறைந்த விலை எக்ஸ்1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ...

ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சொகசு வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ அதன் புகழ்வாய்ந்த எக்ஸ்1 என்ற எஸ்யூவி ரக காரை தற்காலத்திற்கு ஏற்ப அப்கிரேட் செய்திருக்கின்றது. தொடர்ந்து, இந்த அப்கிரேட் செய்யப்பட்ட எஸ்யூவி காரை விற்பனைக்கான அறிமுகத்தையும் செய்து வருகின்றது.

பென்ஸ் ஜிஎல்ஏ காருக்கு செம்ம டஃப்... குறைந்த விலை எக்ஸ்1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ...

அந்தவகையில், இந்தியாவில் இன்று (மார்ச் 5) இந்த கார் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த காரில் புதிய புதுப்பிப்பலாக பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

பென்ஸ் ஜிஎல்ஏ காருக்கு செம்ம டஃப்... குறைந்த விலை எக்ஸ்1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ...

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் பல்வேறு புதிய அம்சங்களை ஏந்தியதாகக் காட்சியளிக்கின்றது.

குறிப்பாக, இந்த புதுப்பிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ காரின் மின் விளக்கு, உடல் தோற்றம் உள்ளிட்டவற்றில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

பென்ஸ் ஜிஎல்ஏ காருக்கு செம்ம டஃப்... குறைந்த விலை எக்ஸ்1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ...

அந்தவகையில், இந்த காரின் முகப்பு பகுதியில் வழங்கப்பட்டுள்ள மின் விளக்குகள் முதல் டெயில் பகுதி என்றழைக்கப்படும் பின் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் வரை அனைத்திற்கும் புதிய தோற்றம் வழங்கப்பட்டுள்ளன.

பென்ஸ் ஜிஎல்ஏ காருக்கு செம்ம டஃப்... குறைந்த விலை எக்ஸ்1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ...

இது பழைய மாடல் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காருடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்ட டிசைனைக் கொண்டதாக இருக்கின்றது. இதேபோன்று, சிறிய அளவில் காணப்பட்ட கிட்னி வடிவிலான கிரில் அமைப்பு தற்போது சற்றே பெரிதாக்கப்பட்டுள்ளது. இது காருக்கு சற்றே முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்க தோதுவாக இருக்கின்றது.

பென்ஸ் ஜிஎல்ஏ காருக்கு செம்ம டஃப்... குறைந்த விலை எக்ஸ்1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ...

இதுமட்டுமின்றி, பம்பர் மற்றும் பனி விளக்குகளிலும் லேசான அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், காரின் முகப்பு மையப்பகுதியில் பெரிய ஏர் டிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய மாற்றமாக காரின் அலாய் வீல்களுக்கும் லேசான அப்கிரேஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்தோடு நிறுத்தாமல் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த எக்ஸ்1 எக்சாஸ்ட் பைப்பிலும் மாற்றத்தை வழங்கியிருக்கின்றது.

பென்ஸ் ஜிஎல்ஏ காருக்கு செம்ம டஃப்... குறைந்த விலை எக்ஸ்1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ...

இது இரு துளையுடைய எக்சாஸ்ட் சிஸ்டம் ஆகும். இந்த மாற்றத்தால் புதிய எக்ஸ்1 காரின் எக்சாஸ்ட் சற்றே பெரியதாக காட்சியளிக்கின்றது. இவ்வாறு, அனைத்து அலங்காரங்களும் புகைப்படங்களை பெரிதாக்குவதைப் போன்று தன்னுடைய அளவையும் பெரியதாக்கிக் கொண்டுள்ளன.

மேலும், வெளிப்புறத்தோற்றத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தைத் தொடர்ந்து, காரின் கேபினுக்குள்ளும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பென்ஸ் ஜிஎல்ஏ காருக்கு செம்ம டஃப்... குறைந்த விலை எக்ஸ்1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ...

குறிப்பாக, பல லட்சம் விலைக் கொடுத்து இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிக பிரிமியம் வசதியை உணர வேண்டும் என்ற காரணத்திற்காக பல்வேறு சொகுசு வசதிகளை பழைய மாடலைக் காட்டிலும் கூடுதலாக பிஎம்டபிள்யூ செய்திருக்கின்றது. மேலும், இதற்காக பிஎம்டபிள்யூ ஐ டிரைவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

பென்ஸ் ஜிஎல்ஏ காருக்கு செம்ம டஃப்... குறைந்த விலை எக்ஸ்1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ...

இதில் மிக முக்கியமானதாக இருக்கைகளுக்கு வழங்கப்பட்ட லெதர் இருக்கின்றது. இது காருக்கு பிரிமியம் லுக்கை வழங்குவதுடன், சொகுசான இருக்கை வசதியையும் வழங்குகின்றது.

இருப்பினும், ஒரு சில அம்சங்கள் மட்டும் பழைய மாடல்களில் இருப்பதைப் போன்றே காட்சியளிக்கின்றது. அந்தவகையில், காரின் டேஷ்போர்டு அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

பென்ஸ் ஜிஎல்ஏ காருக்கு செம்ம டஃப்... குறைந்த விலை எக்ஸ்1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ...

தொடர்ந்து இந்த காரில் கூடுதல் வசதிகளாக ஒயர்லெஸ் சார்ஜ், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியுடைய ஸ்மார்ட்போன் கன்னெக்டிவிட்டி, கீ லெஸ் என்ட்ரீ, பனோரமிக் சன் ரூஃப், புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

பென்ஸ் ஜிஎல்ஏ காருக்கு செம்ம டஃப்... குறைந்த விலை எக்ஸ்1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ...

இத்துடன், பாதுகாப்பு அம்சங்களாக ஆறு ஏர் பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்சன் கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் பின்புறத்தை தெளிவாக காட்சிப்படுத்தும் கேமிரா உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் கூடுதல் தொழில்நுட்பங்களாக காணப்படுகின்றது.

பென்ஸ் ஜிஎல்ஏ காருக்கு செம்ம டஃப்... குறைந்த விலை எக்ஸ்1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ...

இந்த பிஎம்டபிள்யூ கார் 12 விதமான நிறத்தேர்வில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஆல்பைன் வெள்ளை, கருப்பு, கருப்பு சஃபையர், பனிப்பாறை வெள்ளை, கனிம வெள்ளை, கனிம சாம்பல், பிரகாசமான பழுப்பு, பிரகாசமான ஸ்டோர்ம், மத்திய கடலின் நீல நிறம், சன்செட் ஆரஞ்சு, ஜுகாரோ பீஜ் மற்றும் ஸ்டார்ம் பே மெட்டாலிக் உள்ளிட்ட நிறங்கள்தான் அவை.

பென்ஸ் ஜிஎல்ஏ காருக்கு செம்ம டஃப்... குறைந்த விலை எக்ஸ்1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ...

இதுதவிர பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மூன்று விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது. அது, ஸ்போர்ட்ஸ் எக்ஸ், எக்ஸ் லைன் மற்றும் எம் ஸ்போர்ட் ஆகும். இதில், டாப் ஸ்பெக் மாடலாக எக்ஸ்1 எம் ஸ்போர்ட் இருக்கின்றது. இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 42.90 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

அதேசமயம் இதன் ஆரம்பநிலை வேரியண்டிற்கு ரூ. 35.90 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.

பென்ஸ் ஜிஎல்ஏ காருக்கு செம்ம டஃப்... குறைந்த விலை எக்ஸ்1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ...

இதில், மிட் ஸ்பெக் மாடலாக இருக்கும் எக்ஸ்லைன் வேரியண்டில் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஸ்போர்ட்ஸ் எக்ஸ் மாடலில் பெட்ரோல் ஆப்ஷனும், எம் ஸ்போர்ட் மாடலில் டீசல் எஞ்ஜின் தேர்வும் வழங்கப்படுகின்றது.

பென்ஸ் ஜிஎல்ஏ காருக்கு செம்ம டஃப்... குறைந்த விலை எக்ஸ்1 சொகுசு காரை களமிறக்கிய பிஎம்டபிள்யூ...

இந்த எஞ்ஜின்கள் அனைத்தும் பிஎஸ்6 தரத்திலான 2.0 லிட்டர் கொள்ளவு கொண்டதாகும். இதில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் 6,000 ஆர்பிஎம்மில் 192 பிஎச்பி பவரையும், 1,350-4,600 ஆர்பிஎம்மில் 280 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இதேபோன்று, 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜின் 190 பிஎச்பியை 4,000 ஆர்பிஎம்மிலும், 400 என்எம் டார்க்கை 1,700 முதல் 2,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும்.

Most Read Articles
English summary
New (2020) BMW X1 Launched In India At Rs 35.90 Lakh: Rivals The New Mercedes-Benz GLA. Read In Tamil.
Story first published: Thursday, March 5, 2020, 16:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X